தேவனுடைய முழு சர்வாயுதவர்க்கத்தைத் தரித்துக் கொள்ளுதல் PUTTING ON THE WHOLE ARMOUR OF GOD ஜூன் 7, 1962, சதர்ன் பைன்ஸ், வடக்கு கரோலினா USA 1. உங்களுக்கு மிக்க நன்றி. உங்களுக்கு மிக்க நன்றி. நண்பர்களே, நீங்கள் அமரலாம். சகோதரன் லீ வேயில், உங்களுக்கு நன்றி. அந்த விதமான ஒரு சிறு அறிமுகவுரைக்கு நான் பாத்திரவானல்ல. ஆனால் அந்த அருமையான வார்த்தைகளை நான் மெச்சுகிறேன். அதன்படி வாழ வேண்டுமென்றால் சிறந்த ஒரு வாழ்க்கையை நான் வாழ் வேண்டும். ஆகவே இன்றிரவு வடக்கு கரோலினாவிலுள்ள சதான் பைன்ஸில் இருப்பதில் எனக்கு மகிழ்ச்சி. வடக்கு கரோலினா பெயரைக் குறித்து நான் எப்போழுதும் குழப்பமடைகிறேன். (பாருங்கள்?).  2. யாரோ ஒருவர் "அபெர்டீன்'' என்று குறிப்பிடுகிறார் - ஆசி/ என்ன பெயர் அது? அபெர்டீன், அபெர்டீன். நான் சதர்ன் பைன்ஸ் என்று நினைக்கும்போது அது தெற்கு கரோலினாவில் உள்ளது போல எனக்குக் காணப்படுகின்றது. ஆனால் சதர்ன் பைன்ஸ் வடக்கு கரோலினாவில் உள்ளது. நான் அதைக் குழப்பிக் கொள்கிறேன். நான் இங்கிருப்பதிலும் அதே நேரத்தில் என்னுடைய விலையேறப் பெற்ற நண்பர்களான சகோதரன் பார்க்கா, சகோதரன் லீவேயில், ஓ, அவர்கள் எல்லோருடனும் மற்றும் இங்கே கர்த்தருடைய வருகைக்காக காத்து இங்கே பரதேசிகளாக சஞ்சரிக்கின்ற எல்லாருடனும் ஐக்கியம் கொள்ள சிடைத்த இந்த தருணத்திற்காகவும் நான் மகிழ்ச்சி அடைகிறேன். ஆகவே நான். 3. சகோதரன் பார்க்கரைக் குறித்து அறிந்து கொள்ள எனக்கு விருப்பமே. ஆனால் அவரைக் குறித்து அறிந்து கொள்ளவேண்டிய காரியத்தைக் குறித்து எனக்கு அதிகமாகத் தெரியவில்லை. ஒரு நாள் பத்திரிக்கையில் பிரசுரிக்கப் பட்ட கட்டுரையை நான் வாசித்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது நான், "தாமஸ் பார்க்கர். இந்தப் பெயரை நான் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவனாக உள்ளேன்” என்று கூறினேன். அதற்குப் பிறகு சிறிது கழித்து, ஓ, ஒருக்கால், ஒரு நாள் கழித்து சகோதரன் லீ வேயில் உள்ளே வந்தார், அவர் “என்ன, இவர் யார் என்று உங்களுக்குத் தெரியுமே. அங்கே இருக்கின்ற நம் நண்பர்தான் இவர்” என்று கூறினார். உடனே நாங்கள் அவரைத் தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயற்சித்தோம். அவர் அந்தப் பத்திரிக்கையில் எழுதியிருந்த ஒரு கருத்தைக் குறித்ததிற்காக நான் அவருக்கு நன்றி சொல்ல விரும்பினேன். ஆகவே அந்த விதமாகத்தான் எங்களுக்குத் தொடர்பு ஏற்பட்டு இப்பொழுது இன்றிரவு இந்த கன்வென்ஷன் கூட்டத்தில் அவருக்கு உதவ நாங்கள் இங்கு வந்துள்ளோம்.  4. சகோதரன் தாமஸ், இங்கே வந்து இந்த அருமையான நண்பர்களையும் மற்றும் எல்லோரையும் மறுபடியுமாகச் சந்தித்து, ஐக்கியங் கொள்ளுதலுக்கான தருணத்தை கொண்டிருப்பதற்காகவும் மகிழ்ச்சியடைகிறேன். ஆனால் மிகவும் பேர் பெற்ற மனிதர் இன்றிரவு எனக்குப் பின்பாக அமர்ந்துள்ள நிலையில் நான் இங்கே நின்று ஒரு வேதாகமச் செய்தியைப் பிரசங்கிக்க வேண்டியிருப்பதை நான் நினைக்கையில் என் மனநிலை எப்படி இருக்கும் என்பதை உங்களால் கற்பனைச் செய்து பார்க்க முடியும்.  5. உண்மையாகவே, நான் உணர்வதென்னவென்றால்..... டிவைட் மூடி (Dwight Moody ) செய்தது போல நான் செய்வேனாக .... அவர் இங்கிலாந்தில் இருந்தபோது இவ்விதமாக அவர் செய்தார் என்று அவர்கள் கூறினார்கள். ஒரு நாளிரவு அவர் காக்னீஸ் (Cockneys) (லண்டனில் உள்ள ஒரு குழுவினர் - தமிழாக்கியோன்) மக்களுடன் பேசிக் கொண்டிருந்தாராம். அந்த காக்னீஸ் மக்கள் பேசும் போது சொற்களை மிகத் துல்லியமாக, சரியாக உச்சரிப்பவர்கள் ஆவர். ஆனால் திரு. மூடி கல்வியறிவு பெற்றவர் அல்ல. ஆகவே வேத வசனத்தை வாசித்தார். வாசிக்கும் போது மூன்று அல்லது நான்கு வார்த்தைகளைத் தவறாக உச்சரித்தார். மறுபடியுமாக அவர் வாசிக்க ஆரம்பித்தார். இன்னும் மோசமாக அவர் உச்சரித்தார். ஆகவே அவர் வேதாகமத்தை மூடி வைத்து விட்டு வானத்தை அண்ணாந்து பார்த்து "தேவனே எனக்கு உதவி செய்யும்" என்று கூறினார். அப்பொழுது அவர் நாட்டையே குலுக்கினார். அது தான் காரியமாகும். அதைத்தான் நாமும் செய்ய வேண்டியவர்களாக உள்ளோம். 6. ஆகவே இந்த கன்வென்ஷன் கூட்டத்தில் எல்லா அறிவிப்புகளும் செய்யப்பட்டாயிற்று என்று நான் ஊகிக்கின்றேன். இது கூடாரத்தில், வேதாகம கூடாரத்தில், (அவ்விதமாகத்தான் இது அழைக்கப்படுகிறது என நான் நம்புகிறேன்) கூட்டங்கள் நடந்துக்கொண்டிருக்கின்றன. ஆகவே நண்பர்களே, நீங்கள் அங்கு செல்வீர்களானால் நீங்கள் நிச்சயமாக ஏதோ ஒன்றைக் கேட்பீர்கள். 7. நான் அநேகக் கட்டுரைகளை வாசித்துள்ளேன். ஆனால் இந்நாளின் சிறந்த எழுத்தாளர்களில் சகோதரன் தாமஸும் ஒருவர் என்றே நான் நினைக்கின்றேன். அவர் தேவனுடைய வார்த்தையை நன்கு அறிந்துள்ள ஒருவர் ஆவார். ஆகவே நீங்கள் அங்கே செல்வீர்களானால் நிச்சயமாக அது உங்களுக்கு நன்மைப் பயக்கும்.  8. நான் ...... இன்றிரவு என் முகமும் கண்களும் சற்று சிதைந்திருப்பது போலக் காணப்படலாம். நான்கு வாரங்களுக்கு முன்னர் நான் துப்பாக்கியைச் சுட்ட காரியத்தை நீங்கள் ஏற்கனவே கேள்விப்பட்டிருப்பீர்கள் என்று நான் யூகிக்கிறேன். அதனால் . . . என்னுடைய பொழுது போக்கானது எப்போதுமே மீன் பிடிப்பது, வேட்டையாடுவது அல்லது அதைப் போன்ற ஒன்று, திறந்த வெளியில் இருப்பது என்பதே. நான் ஒருக்காலும் பந்து அல்லது கோல்ஃப் விளையாட்டு, குதிரைப்பந்தயம் போன்றவற்றை விளையாடினதே கிடையாது. நான் திறந்த வெளியில் இருப்பதை விரும்புகிறவன். நான் அதை மிகவும் நேசிக்கிறேன்.  9. நான் ஆப்பிரிக்காவில் இருந்த போது ராய் வெதர்பைய்ஸ் துப்பாக்கிகளின் பேரில் மிகவும் நேசம் வைத்து விட்டேன். ஆனால் அவைகளில் ஒன்றையாகிலும் வாங்கலாம் என்று என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியாது. அதை வாங்குவதற்கு என்னிடம் போதிய வசதி இல்லை . ஆகவே அவர்கள் ... நான் அனுமதித்திருந்தால் என்னுடைய நண்பர்களில் சிலர் அதை எனக்கு வாங்கிக் கொடுத்திருப்பார்கள். ஆனால் என்னால் அதை ... இன்று மதியம் நான் சகோதரன் தாமஸிடம் கூறினது போல, மிஷனரிகள் தங்கள் கால்களில் அணிவதற்கு பாதரட்சை கூட இல்லாதிருக்கிறார்கள் என்பதை அறிந்தவனாக, அந்த விலையுயர்ந்த துப்பாக்கிகளில் ஒன்றை என்னுடைய நண்பர்கள் வாங்குவதற்கு அனுமதிப்பதை என்னால் நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை. அந்த துப்பாக்கியை வைத்திருப்பது சரியென்று எனக்குத் தோன்றவில்லை.  10. ஆகவே என் நண்பர் ஒருவர் வந்தார். பில்லி பாலுக்கு ஒருவர் அளித்திருந்த துப்பாக்கியை நான் வைத்திருந்தேன். அந்நண்பர் இண்டியானாவில் வெதர்பை கம்பெனியை நடத்திக் கொண்டிருந்தார். அவர் வந்து "நான் உங்கள் துப்பாக்கியை எடுத்து மாற்றி அமைத்து வெதர்பை துப்பாக்கியைப் போல செய்து தருகிறேன்" என்று கூறினார். ஆனால் நடந்தது என்னவென்றால் அவர் அதைச் சரியாக அமைக்கவில்லை. நான் குண்டை உள்ளே பொருத்தினேன். அப்பொழுது ஆறு டன்கள் சக்தி வாய்ந்த வெடி என் முகத்திற்கு நேராக வெடித்தது. தீப்பிழம்பு செந்நிறத்தில் இந்த துணித்திரை இருக்கின்ற உயரத்திற்கு எழும்பி எரிந்தது. துப்பாக்கிக்குழல் ஐம்பது கெஜ தூரத்திற்கு வெடித்துச் சென்றது. அடிக்கட்டை இந்தத் திசையில் சென்றது. துப்பாக்கி என் கையிலேயே உருகினது. சில நிமிடங்களுக்கு என்னால் எதையுமே காணவோ கேட்கவோ முடியவில்லை.  11. என் கண்களைத் திறக்க என் கைகளை நான் இந்த விதமாக இழுத்து திறந்த போது இந்தக் கண் இந்த பக்கத்தில் இருந்தது. கண்ணிலிருந்து இரத்தம் பீறிட்டுக் கொண்டு வந்தது. நான் என் கையை இந்த விதமாகத் தூக்கி வைத்திருந்தேன். அந்த தோட்டாவின் துண்டுகள் என் முகத்தை துளைத்த போது இந்தப் பல் உடைந்தது. என் முகத்தைச் சுற்றிலும் ஒரு வளையத்தை ஏற்படுத்தினது. என் கண்ணின் கீழே பதினைந்து துண்டுகள் துளைத்து ஒரு பிறை நிலவைப் போல காயத்தை உண்டாக்கி என் கண்ணிமையின் பின்பாகத்தில் பதிந்துக் கொண்டது. ஆனால் அது பார்வையைத் தொடவேயில்லை.  12. மருத்துவர் என்னைப் பரிசோதித்த போது என்னைத் தனியாக அழைத்துச் சென்று, “ஒரு காரியத்தை மாத்திரம் அறிந்து கொண்டேன். கர்த்தர் தம்முடைய ஊழியக்காரனுடன் அமர்ந்திருந்திருக்க வேண்டும். இல்லையென்றால் அப்படிப் பட்ட ஒரு சக்தி வாய்ந்த வெடிப்பினால் உங்கள் தலையும், தோள்களும், உங்கள் சரீரத்தில் இருந்திருக்கவே இருந்திருக்காது'' என்று கூறினார்.  13. ஆகவே இவை எல்லாமே அருமையான நாட்களும் அருமையான தருணங்களாக எனக்கு உள்ளது. நான் - நான் இங்கிருப்பதில் மிக்க மகிழ்ச்சி, நான்... நான் கர்த்தருக்கு உபயோகமாயிருப்பது இன்னும் முடியவில்லை என்றே நான் இதிலிருந்து உணர்ந்துக் கொள்கிறேன். ஒருக்கால் நான் அவருடைய பிள்ளைகளுக்கு இன்னும் சற்று பேசவும் அவர்களுக்கு உதவ நான் முயற்சிக்க வேண்டுமென்று அவர் விருப்பப்படலாம். வாழ்க்கையை உங்களுக்கு சிறிது இலகுவாக்கித் தரவும் சிறந்த விதத்தில் உங்களுக்கு உதவ நான் முயற்சிக்க வேண்டுமென்று அவர் விருப்பப்படலாம். வாழ்க்கையை உங்களுக்கு சிறிது இலகுவாக்கித் தரவும் சிறந்த விதத்தில் உங்களுக்கு உதவ நான் முயற்சிக்கவும் மாத்திரம் தான் இங்கே நான் உள்ளேன். ஆகவே நீங்கள் எனக்காக ஜெபிப்பீர்கள் என்று நான் நிச்சயம் கொள்கிறேன்.  14. ஆகவே ... ஆம், ஐயா, ஆம், ஐயா, ஆம் ஐயா, இங்கே இருக்கின்ற இந்த ஒலிபெருக்கி உபகரணத்திற்கு ஒரு சிறு ஒலி பெருக்கி கருவி மாத்திரமே உள்ளது என்று சகோதரன் வேயில் என்னிடம் கூறிக்கொண்டிருந்தார். அங்கே பின்னால் உள்ளவர்களுக்கு நன்றாகக் கேட்க முடிகின்றதா? உங்களுக்கு கேட்கின்றது. அது நல்லது.  15. ஆகவே நான் என்னுடைய பார்வையையோ, அல்லது என்னுடைய கேட்கும் தன்மையையோ இழக்கவில்லை. இங்கே ஒரு விசில் எங்கோ கட்டப்பட்டுள்ளது என்று காண்கிறேன். இந்த வலது கண்ணின் உருட்சிப் பிழையில் சிறு ஒளிமுனைப்பகுதி குறைபாடு (astigmatism) உள்ளது. அந்த விதமாகத் தான் அது உச்சரிக்கப்பட வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அது நரம்பு குலுங்குதல் ஆகும். ஆனால் அது சரியாகிவிடும். அது சரியாகி விடும். எல்லாம் அருமையானதாகவும் நலமாகவும் ஆகிவிடும். அது ஏதோ ஒரு நோக்கத்திற்காகத்தான் நடைபெற்றது என்பதை நான் அறிவேன். எல்லா காரியமும் அந்த விதத்திற்காகத் தான் நடைபெறுகின்றது என்று அவர் கூறியுள்ளார். ஆதலால் நமது தேவன் எப்போதுமே உண்மையுள்ளவர் என்பதை நாம் அறிவோம். ஆகவே அந்த விதமாகத் தான் அது இருக்கும் என்று நான் நம்புகிறேன்.  16. அவர் எனக்கு அநேகக் காரியங்களைக் கூறியிருக்கின்றார். அநேக பிரச்சனைகளுக்கு அப்பால் நான் செல்லும்படியாகவும் அவர் வழி நடத்தியுள்ளார். ஆனால் உங்களுக்குத் தெரியுமா, எல்லாப்பிரச்சனைகளுக்கும் அப்பால் நான் செல்லும்படியாக அவரால் விட்டு விட முடியாது. நான் சில ... ஊழியக்காரர் களாகிய நாங்கள் மக்களாகிய நீங்கள் படும் பாடுகளை நாங்களும் பட வேண்டியவர்களாக இருக்கிறோம். சில சமயங்களில் கர்த்தர் பேசி பிரச்சனைகளுக்கு அப்பால் எப்படி செல்வது என்று எங்களுக்குத் தெரியப்படுத்தி காரியங்களைச் செய்கின்றார். ஆனால் நினைவில் கொள்ளுங்கள். நாங்களும் ஏனைய மக்களோடும் பாடனுபவிக்க அந்த விதமான நிலைகளுக்கும் தள்ளப்படுகிறோம். உங்களைக் காட்டிலும் எங்களுக்கு அதிகக் கடினமாக அது காணப்படும். எங்களிடமிருந்து நீண்ட பொழுதிற்கு அவர் கரத்தை எடுத்து விடுகிறார். எல்லா நேரத்திலும் அவர் பதிலளிப்பதில்லை. ஆனால் அவர் அந்தப் பெருவெள்ள அலையின் மீதேறி வருகின்றார் என்பதற்காக நாம் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். அதற்காக நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்.  17. எல்லாரும் அருமையாக உணர்கிறீர்களா? எல்லாரும் சரியாக இருக்கின்றனர். ஒரு கன்வென்ஷன் கூட்டத்தைப் போலவே சூழ்நிலை உள்ளது. நான் வாசிக்க எத்தனித்துள்ள ஒரு பொருளிலிருந்து ஒரு சிறு காரியத்தை இன்றிரவு நான் எடுத்துள்ளேன். அதிலிருந்து ஒரு சிறு ஞாயிறு பள்ளி பாடப்பகுதியைப் போன்ற ஒன்றை எடுக்க நான் விரும்புகிறேன்.  18. நான் இதைக் கேட்க விரும்புவது ...... வழக்கமாக ஆரம்பத்தில் அநேகம் பேர் இங்கே இருப்பதில்லை. நான் ஒருக்கால் ..... ஜெபிக்கப்பட வியாதியஸ்தர் இருக்கையில், ஒரு சிறு ஜெப வரிசையை நான் செய்து ஒரே இரவில் எல்லாருக்காகவும் நான் ஜெபிக்க ஏதுவாக இருக்கும். உங்கள் வியாதிப்பட்ட சரீரத்திற்காக ஜெபம் தேவைப்படுகின்ற, நான் உங்களுக்காக ஜெபிக்க வேண்டும் என்று விரும்புகின்ற, ஜெபிக்கப்பட எத்தனைப் பேர் கன்வென்ஷன் கூட்டத்திற்கு வந்துள்ளீர்கள் என்று நான் காண இன்றிரவு நான் கேட்கின்றேன். நீங்கள் உங்கள் கரங்களை உயர்த்தி, "நான் அந்த காரியத்திற்காக வந்துள்ளேன்” என்று கூறுவீர்களாக. 19. நல்லது. அது அருமையானது. கூட்டத்தின் முதலாம் இரவில் இவ்விதமாக காண்பது அருமையானது. வழக்கமாக மக்கள் கடைசி நாள் கூட்டத்திற்கென்று காத்திருப்பார்கள். அது கடினமான ஒன்றாகும். தேவனில் விசுவாசம் வைத்து, தேவன் பதிலளிப்பார் என்றும் நீங்கள் விசுவாசித்து இங்கு இருக்கின்ற உங்களை காண்பது அருமையான ஒன்றாகும். அவர் நிச்சயமாக பதிலளிப்பார். அவர் தவறுவதேயில்லை . அவர் தவறவே மாட்டார். "நீதிமானுக்கு வரும் துன்பங்கள் அநேகமாயிருக்கும். கர்த்தர் அவைகளெல்லாவற்றிலும் நின்று அவனை விடுவிப்பார்". ஆகவே நாம் விடுதலையைப் பெறும் வரைக்கும் அதுவே முக்கிய காரியமாகும். பவுல் மற்றும் நமக்கு முன்பாகச் சென்றிருக்கின்ற மற்றவர்கள், தேவனால் தெரிந்து கொள்ளப்பட்ட மனுஷர், மகத்தான பரிசுத்தவான்கள் சென்ற அந்த இடுக்கமான நிலைகளில் நாமும் சில சமயங்களில் செல்வோம். ஆகவே நாம் அறிந்துள்ளபடி, பிரச்சனைகளில் அகப்படக்கூடாது என்று தேவனிடமிருந்து தடைக்காப்புறுதியை நாம் கேட்க முடியாது, ஆனால் அந்த பிரச்சனையின் பின்னால் ஏதோ ஒன்றுள்ளது. அதை தேவன் நமக்கு நன்மையானதாக இருக்கும்படிக்குச் செய்கின்றார்.  20. சில சமயங்களுக்கு முன்னர் . . . என்னைத் தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். கெண்டக்கியிலிருந்து பிரயாணம் செய்து வந்திருக்கும் என் அருமை நண்பர் சகோதரன் சல்லிவன் கூட இங்கே உட்கார்ந்திருப்பதை என்னால் காணமுடிகின்றது. சகோதரன் சல்லிவன், உங்களைக் காண்பதில் மிக்க மகிழ்ச்சி. ஃப்ளாரிடாவிலிருந்து வந்துள்ள சகோதரன் ஐவர்சன். ஓ, எல்லா இடத்திலிருந்தும் வந்துள்ளனர். எத்தனைப் பேர் வெளியூரிலிருந்து வந்திருக்கிறீர்கள்? உங்கள் கரங்களை நான் காணட்டும், வெளி . . . சரி, இங்கே நகரத்திலிருந்து வந்துள்ளவர்கள் எத்தனைப் பேர்? ஓ, உங்களுக்குத் தெரியுமா, சுமார் பன்னிரண்டு, பதினைந்து பேரை என்னால் காணமுடிகின்றது. நகரத்திற்கு வெளியேயிருந்து வந்துள்ளவர்கள் நிறைய பேர் வந்துள்ளனர். அது சரி. கன்வென்ஷன் வழக்கமாக இவ் விதமாகத்தான் மக்களை இழுக்கும்.  21. என் மனைவி இந்தச் சிறு பாடலை எனக்காக பாடுவார்கள். அவர்கள் கிழக்கிலும் மேற்கிலிருந்தும் வருவர் தூர பிரதேசங்களிலிருந்தும் வருவர், நம் இராஜாவோடு விருந்துண்ண, அவருடைய விருந்தாளிகளாக உண்ண, ஆசீர்வதிக்கப்பட்ட யாத்ரீகர்கள் இவர்களாவர்! அவருடைய பரிசுத்த முகத்தை தரிசிக்க, தெய்வீக அன்பினால் பிரகாசிக்கின்ற முகம், அவருடைய கிருபையின் பங்கைப் பெறும் ஆசீர்வதிக்கப்பட்டோர், அவருடைய கிரீடத்தில் ஜொலிக்கும் இரத்தினங்களாக இவர்கள் இருப்பர் அந்தப் பாடல் உங்களுக்குத் தெரியுமா? இயேசு சீக்கிரம் வருகின்றார், நம் சோதனைகளெல்லாம் முடிவுறும். ஓ!நம்கர்த்தர் இந்தப் பொழுதில் வந்தால் எப்படியிருக்கும், பாவத்திலிருந்து விடுதலையடைந்தவருக்கு அது எப்படியிருக்கும்? அது உங்களுக்குச் சந்தோஷத்தைக் கொண்டு வருமா அல்லது துக்கம், ஆழ்ந்த துயரம் கொண்டுவருமா. மகிமையிலுள்ள நம் கர்த்தர் வரும்போது, நாம் அவரை மேலே ஆகாயத்தில் சந்திப்போம்.  22. நாம் இங்கிருப்பதன் நோக்கம் அதுவேயாகும். இப்பொழுது, நான் ஒரு பாடகன் அல்ல, நண்பர்களே. என்னால் பாட இயலாது. நான் ..... சகோதரர்களே, நான் எப்பொழுதும் பாட முயற்சிப்பேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆகவே நான் உங்கள் எல்லோருக்கும் கூறப்போகின்றேன். என்னால் பாட முடியும் போது நான் பாடுவதை நீங்கள் சில சமயங்களில் கேட்கலாம். நீங்கள் பரலோகத்திற்கு செல்லும் போது எல்லாம் முடிந்து போயிருக்கும். உங்களுடைய மகத்தான மாளிகையில் ..... நான் எப்போதுமே காடுகளையும் மற்றவையும் விரும்புவதுண்டு. ஒருக்கால் அங்கே மகிமையின் தேசத்தில் ஏதோ ஒரு மூலையில் ஒரு சிறு குடில் எனக்கு கிடைக்கலாம். ஒரு காலைப் பொழுதில் நீங்கள் உங்கள் பெரிய மாளிகையின் உட்புறத்தில் அல்லது முற்றத்திலிருக்கும் போது எங்கோ காடுகளிலிருந்து வரும் ஒரு சத்தத்தைக் கேட்பீர்கள். “ஆச்சரியமான கிருபை, எவ்வளவு இனிமையான சத்தம்” என்று அந்த சத்தம் பாடிக் கொண்டிருக்கும். அப்பொழுது நீங்கள், “சகோதரன் பிரன்ஹாம் இங்கு வந்தடைந்து விட்டார்” என்று கூறுவீர்கள்.  23. என்னைப்போன்ற ஈனனான ஒருவனை அது எடுத்து இரட்சிக்குமானால், என்ன, நம் எல்லோருக்கும் நம்பிக்கை நிச்சயமாக உண்டு. அப்பொழுது நீங்கள், "சகோதரன் பிரன்ஹாம் இங்கு வந்தடைந்து விட்டார். ஏனெனில் அதோ அவர் இன்னுமாக ஆச்சரியமான கிருபை என்று பாடிக் கொண்டிருக்கின்றார்' என்று கூறுவீர்கள். அதை நான் பாட வேண்டு மென்று எப்பொழுதும் விரும்புவேன். அதை என் வாயை மூடி மௌனமாக என் இருதயத்தில் பாடுவேன். ஆனால் ஒரு நாளிலே நிச்சயமாக அதை என்னால் பாட முடியுமென்று நான் நம்புகிறேன்.  24. நாம் எபேசியர் 6வது அதிகாரத்திற்குத் திருப்புவோமாக. இது முடிவுறும் சமயமாகும். ஆனால் நாம் துவங்குகிறோம். எபேசியர் 6வது அதிகாரத்தில், 10ஆம் வசனத்திலிருந்து வார்த்தையில் ஒரு பகுதியை நாம் வாசிப்போமாக. கடைசியாக, என் சகோதரரே, கர்த்தரிலும் அவர் சத்துவத்தின் வல்லமையிலும் பலப்படுங்கள்.  நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்து நிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி தேவனுடைய முழு (ஆங்கிலத்தில் முழு, Whole என்றுள்ளது - தமிழாக்கியோன்) சர்வாயுதவர்க்கத்தையும் தரித்துக்கொள்ளுங்கள்.  ஏனெனில் மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும் வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு.  ஆகையால் தீங்கு நாளிலே அவைகளை நீங்கள் எதிர்க்கவும், சகலத்தையும் செய்து முடிக்கிறவர்களாய் நிற்கவும், திராணியுள்ளவர்களாகும்படிக்கு, தேவனுடைய முழு (Whole) சர்வாயுதவர்க்கத்தையும் (ஆங்கிலத்தில் உள்ளவாறே - தமிழாக்கியோன்) எடுத்துக்கொள்ளுங்கள்.  சத்தியம் என்னும் கச்சையை உங்கள் அரையில் கட்டினவர்களாயும், நீதியென்னும் மார்க்கவசத்தைத் தரித்தவர்களாயும்  சமாதானத்தின் சுவிசேஷத்திற்குரிய ஆயத்தம் என்னும் பாதரட்சையைக் கால்களிலே தொடுத்தவர்களாயும்,  பொல்லாங்கன் எய்யும் அக்கினியாஸ்திரங்களையெல்லாம் அவித்துப் போடத்தக்கதாய், எல்லாவற்றிற்கும் மேலாக விசுவாசமென்னும் கேடகத்தைப் பிடித்துக் கொண்டவர் களாயும் நில்லுங்கள்.  இரட்சணியமென்னும் தலைச்சீராவையும், தேவவசனமாகிய ஆவியின் பட்டயத்தையும் எடுத்துக் கொள்ளுங்கள்.  எந்த சமயத்திலும் சகலவிதமான வேண்டுதலோடும், விண்ணப்பத்தோடும் ஆவியினாலே ஜெபம் பண்ணி, அதன் பொருட்டு மிகுந்த மனஉறுதியோடும் சகல பரிசுத்தவான்களுக்காகவும் பண்ணும் வேண்டுதலோடும் விழித்துக் கொண்டிருங்கள்.  25. நான் இதிலிருந்து “தேவனுடைய முழு சர்வாயுத வர்க்கத்தைத் தரித்துக் கொள்ளுதல்” என்னும் பொருளை எடுக்க விரும்புகிறேன். கன்வென்ஷனில் நாளைக் காலையும் மற்றும் அடுத்தடுத்த நாட்களுக்கும் பொருத்தமாக இந்த செய்தியானது இருக்குமா என்று நான் சற்று முன்னர் யோசித்துக் கொண்டிருந்தேன். ஏனெனில் வழக்கமான இந்த கன்வென்ஷன் கூட்டங்களில் தான் போதிக்கும்படியாக அழைக்கப்பட்டிருக்கின்ற இந்த மகத்தான மனிதர் வார்த்தையை மக்களுக்கு எடுத்துரைப்பது வழக்கம்.  26. ஆகவே, பவுல் இங்கே ஒரு போர்வீரன் போர்ச் சீருடையணிந்து போருக்கு செல்லத்தக்கதாக, சர்வாயுத வர்க்கத்தை அணிந்து போருக்கு ஆயத்தமாகின்றான். ஆயத்தம்: பவுல் இந்த விதமாக எடுத்துரைப்பது எனக்குப் பிடித்தமான ஒன்றாகும்.  27. உங்களுக்குத் தெரியுமா, லின்கன் ஒரு முறை இதை "அமைதியின் காலத்தில் யுத்தத்திற்கு ஆயத்தமாகு” என்று கூறினார் என்று நான் நம்புகிறேன். அல்லது அவர் அதை ஒருக்கால் கூறியிருக்க மாட்டார். ஆனால் எனக்கு அவ்விதமாகத் தென்படுகின்றது. அல்லவென்றால் அது ஒரு அறிக்கையாக கூறப்பட்டிருக்கலாம். “அமைதியின் காலத்தில் யுத்தத்திற்கு ஆயத்தமாகு". நாம் சிந்திப்பதற்கு இது ஒரு அருமையான காரியமாக இருக்கும். எல்லாம் சுமுகமாக நடந்து கொண்டிருக்கும் சமயத்தில் நீங்கள் ஆயத்தமாவது நலமானதாக இருக்கும். ஏனெனில் நீண்ட காலம் சுமுகமாகச் செல்ல சாத்தான் விடப்போவதில்லை. நீங்கள் இப்பொழுது ஒரு கன்வென்ஷன் கூட்டத்தில் இருக்கிறீர்கள். எல்லாம் அருமையாக ஊற்றப்படும். ஆனால் இன்னும் சில நாட்களில் நீங்கள் இவ்விடத்தை விட்டு செல்லப் போகிறீர்கள், சத்துருவைச் சந்திக்கப் போகிறீர்கள். நீங்கள் புறப்படத் தயாராகும் வரை கூட அவன் ஒருக்கால் காத்திருக்கமாட்டான். அவன் எந்த நேரத்திலும் தாக்குதல் செய்வான். ஏனென்றால் அவன் பொல்லாதவன். இரக்கமற்ற கொடியவன் ஆவான். அவனால் முடிந்தவரை எல்லாவற்றையும் அவன் செய்வான். அவனால் முடிந்த எல்லாவற்றையும் கூறுவான், செய்வான், அதை அவன் இப்பொழுது செய்துக் கொண்டிருக்கிறான், அவன் ..... ஆகவே நாம் எந்நேரமும் தற்காப்பு ஆடையுடன் இருத்தல் சிறந்ததாகும்.  28. நீங்கள் அவனை வெளியே தெருவில் சந்திக்கலாம். நீங்கள் உங்கள் காரில் அவனைச் சந்திக்கலாம். அவனை எங்கு சந்திப்பது என்று துல்லியமாக கூறுவது கடினமான ஒன்றாகும். அல்லது அங்கே சரியாக நீங்கள் உட்கார்ந்திருக்கும் இருக்கையிலே உங்களைச் சந்திப்பான். நேராக இங்கே பிரசங்க பீடத்தில் என்னைச் சந்திப்பான். எந்த இடத்திலும் அவன் வருவான். அவன் பொல்லாங்கன் மாத்திரமே. அவனுக்கு எதைக்குறித்தும் அக்கரையில்லை. ஆகவே நாம் அதற்கு ஆயத்தமாக இருக்க விரும்புகிறோம்.  29. ஆகவே இந்த மகத்தான போதகன் பரி. பவுல். எப்படி சர்வாயுதவர்க்கத்தைத் தரிப்பது என்று சபைக்கு போதித்துக் கொண்டிருந்தான். வரவிருக்கின்ற ஒரு பெரிய போருக்கு ஆயத்தமாகும் ஒரு போர்வீரனுக்கு சபையை ஒப்பிடுகிறான்.  30. இப்பொழுது நாம் தேசங்களிலே காண்பது என்னவெனில் ....... அநேக முறை நாடுகள், அவர்கள் நண்பர்களாயிருந்தாலும் சரி அல்லது நண்பர்களல்லாதவர் களாயிருந்தாலும் சரி, ஒவ்வொரு நாடும் தனக்கென்று உளவாளிகளைக் கொண்டிருக்கின்றன. இப்பொழுது நம்முடைய நாட்டின் உளவாளிகள் உலகம் முழுவதும் உள்ளனர். உலகத்தில் உள்ள ஒவ்வொரு நாடும் தங்கள் உளவாளிகளை இங்கே வைத்துள்ளனர். அவர்கள் நட்பு நாடாக இருந்தாலும் அல்லது நட்பு நாடு இல்லாதவர் களாக இருந்தாலும் சரி. அவர்கள் ஒருவித சந்தேகத்துடனே இருக்கின்றனர் என்பது உங்களுக்குத் தெரியும். இப்பொழுது இங்கிலாந்து நம்முடைய உறவினர் நாடுகளில் ஒன்றாகும். ஆனால் நம் உளவாளிகள் இங்கிலாந்தில் உள்ளனர். இங்கிலாந்து தன்னுடைய உளவாளிகளை இங்கே அமர்த்தியிருக்கின்றது. நம் உளவாளிகள் எல்லா இடங்களிலும் இருக்கின்றனர். ஆனாலும் ...... அவர்கள் தங்கள் உளவு வேலையைச் செய்துக் கொண்டே இருக்கின்றனர். அவர்கள் நன்றாகப் பழகுபவர்கள். அருமையான மக்கள், அவர்களுக்கு எதிராக ஒன்றையுமே உங்களால் கூற முடியாது. ஆனால் அவர்கள் ஜாக்கிரதையாகக் கவனித்து என்ன நடந்து கொண்டிருக்கின்றது என்று பார்த்துக் கொண்டேயிருப்பார்கள். ஏதோ ஒரு புதிய ஆயுதம் தயாரிக்கப்படுகின்றதா என்று கவனித்துக் கொண்டே இருப்பார்கள்.  31. அவர்கள் மெல்ல நழுவிச் சென்று அந்த ஆயுதம் எப்படி உள்ளதென்று காண்பார்கள். பிறகு அதன் விவரத்தைத் தங்கள் நாட்டிற்கு அனுப்புவார்கள். அவர்களும் திருப்பித் தாக்கு வதற்காக ஆயத்தமாகிக் கொண்டிருப்பார்கள். நாம் இந்த ஆயுதத்தை உபயோகப்படுத்தினாலும் சரி, அவர்கள் அதே விதமான ஒரு ஆயுதத்தை உருவாக்குவார்கள் - அல்லது நாம் அவர்களுடைய ஆயுதத்தை உபயோகப்படுத்தினாலும் சரி. நம்முடைய உளவாளிகள் . . . அவர்கள் நம் மீது உபயோகிக்க எத்தனிக்கும் ஆயுதங்களை எதிர்கொள்ள நாமும் ஒரு ஆயுதத்தைத் தயாரிப்போம். அல்லது ஏதோ ஒரு இரகசியமான - ஒரு இரகசிய இயக்கத்தை அல்லது நாம் செய்யத்தக்கதாகத் திட்டமிட்டிருக்கின்ற ஏதோ ஒரு இரகசிய காரியத்தைச் செய்வோம். அவர்களும் ஒரு ஆயுதத்தைத் தயாரிப்பார்கள். ஏனென்றால் அவர்களும் அந்த நோக்கத்திற்காகவே, நாம் என்ன செய்துக் கொண்டிருக்கிறோம் என்பதை காண்பதற்காகவே உளவாளிகளை இங்கே வைத்திருப்பார்கள். நாமும் நம்முடைய உளவாளிகளை அங்கே நிறுவி வேவு பார்த்து அவர்கள் என்ன செய்துக் கொண்டிருக்கிறார்கள் என்று நாம் காண்கிறோம். உண்மையாகப் பார்க்கப் போனால் நாம் ஒருவரையொருவர் நம்பவே முடியாது என்கின்ற ஒரு நிலையில் உள்ளோம். தன்னால் முடிந்தவரைக்கும் தொடர்ந்து செய்து கொண்டேயிருக்க மானிட வர்க்கத்தில் ஏதோ ஒன்று இருக்கின்றது.  32. நாமோ நம்முடைய முழு நம்பிக்கையை வைக்கத்தக்கதாக ஒன்று உள்ளது என்பதைக் குறித்து எனக்கு மகிழ்ச்சி, உங்களுக்கும் மகிழ்ச்சி தானே? ஏதோ ஒன்று... நான் எதைக்குறித்தும் வியப்படையவும், சிந்தித்துப் பார்க்கவும் வேண்டிய அவசியமே இல்லை, நாம் சிறு பிள்ளைகளைப் போல அப்படியே இளைப்பாறிக் கொண்டிருக்க வேண்டும் என்பதை மாத்திரமே அறிந்திருக்க வேண்டியவர் களாயிருக்க வேண்டும். அந்தவிதமாகத்தான் நாம் இருக்க வேண்டியவர்களாக உள்ளோம். முக்கியமாக கிறிஸ்தவர்கள் அப்படித்தான் இருக்க வேண்டும். நான் இருக்க வேண்டியது ..... ஆதியில் நீங்கள் கவனித்துப் பார்ப்பீர்களானால், அந்த இடத்தை கண்டு பிடிக்க மனிதன் முயற்சித்துக் கொண்டிருக்கிறான். ஏனென்றால் அவன் முதன்முதலாக தேவனுடைய சாயலில் உண்டாக்கப்பட்டு, தனக்காக எதையும் செய்யத் தேவையில்லாத ஒரு நிலையில் அவன் இருந்தான். அவனைக் குறித்த எல்லாவற்றையும் தேவன் பார்த்துக் கொண்டார். ஆனால் அவன் ஒரு அந்நியனும், பரதேசியுமான போது, அப்பொழுது தனக்கென அவன் பார்த்துக் கொள்ள வேண்டியவனாகி விட்டான். ஆகவே அவன் எல்லாக் காரியத்தைக் குறித்தும் சந்தேகங்கொள்கிறான். அவன் இருக்கின்ற நிலை என்னவென்றால் (நான் இப்படி கூறுவதற்காக மன்னிக்கவும்) ஒருவிதமான பேய்த்தன்மை யுடையவனாக இருக்கிறான். எல்லாக் காரியமும் கெட்ட எண்ணத்துடன் ஓரப்பார்வை பார்ப்பது போல உள்ளது, அவன் அப்பால் சென்று விட்டான். அவன் அதற்காகக் காத்திருக்கவில்லை.  33. இப்பொழுதும் தேசங்கள் அந்த காரியங்களைச் செய்கின்றன. அவர்கள் வேவு பார்க்கின்றனர். அவர்கள் எப்பொழுதுமே ..... ஏன் அதை அவர்கள் செய்ய வேண்டும் என்றால் அவர்கள் உபயோகித்திருந்த அவர்களுடைய பழைய ஆயுதங்கள் எல்லாம் பழமைப்பட்டுப் போய்விட்டன. ஒருகாலத்தில் அவர்கள் உபயோகித்திருந்த வில் அம்பை வைத்து நம்மால் என்ன செய்யமுடியும்? அல்லது முதலாம் உலகப் போரில் அவர்கள் உபயோகித்த அந்தப் பழைய ஆயுதங்களைக் கொண்டு நம்மால் என்ன செய்ய முடியும்? அந்த பழைய கிராக் - ஜொர்கென்சன் துப்பாக்கி நமக்கு உபயோகப்படுமா? அல்லது ஸ்ப்ரிங்ஃபீல்டு துப்பாக்கியைக் கொண்டு நாம் என்ன செய்ய முடியும்? அவைக்கு பதிலாக இன்னொன்று தயாரிக்கப்பட்டு விட்டது. கடந்த போர் (இரண்டாம் உலகப் போர் - தமிழாக்கியோன்) காரண்ட் துப்பாக்கியினால் நடத்தப்பட்டது. இந்தப் போரில் அணு ஆயுத ஏவுகணை அதற்குள்ளாக வைக்கப்பட்டு சண்டையிடுவர். பாருங்கள். அந்த ஆயுதம் பழைமையாக்கப்பட்டு விடுகின்றது. 34. முதலாம் உலகப்போரில் நாம் அந்தப் பழைய ஏர் நாக்கர் விமானத்தை உபயோகித்தோம். பிறகு கடந்த போரில் நாம் மூன்று அல்லது நான்கு இஞ்சின் போர் விமானத்தை உபயோகித்தோம். இப்பொழுது அந்த விமானங்களெல்லாம் எந்த ஒரு பிரயோஜனமும் இல்லாமல் குப்பைகளாகக் கிடக்கின்றன. அவை பழமைப்பட்டு போய்விட்டன. அவ்விமானங்களைத் தயாரிக்க இலட்சக்கணக்கான டாலர்கள் செலவழிக்கப் பட்டு விட்டன. பிறகு - பிறகு அவைகளை ஒரு பெரிய இரும்பை உருக்கும் பாத்திரத்தில் போட்டு உருக்கி வேறு விதத்தில் உருவாக்கி எடுத்தனர். ஏனெனில் நம்முடைய உளவாளிகள் அனுப்பியுள்ள செய்தியின்படி அந்த விரோதி நாடு மற்றுமொரு பெரிய போர் விமானத்தைச் செய்து விட்டனர் என்ற செய்தி நமக்கு கிடைத்துள்ளது.  35. இப்பொழுது நாம் ஜெட் விமானத்தில் போகின்றோம். இப்பொழுது அவர்கள் வைத்துள்ள ஆயுதமானது ஒரு நட்சத்திரத்தை குறி வைத்து ஒரு விசைக்கருவி நெம்புகோலை இழுத்தால் போதும். முழு உலகமே வெடித்து தூசியாகிவிடும். ஆகவே இந்த காரியத்தின் முடிவானது நெருங்கியுள்ளது. இப்பொழுது மேற்கொண்டு என்ன செய்ய வேண்டும் என்று அவர்களுக்குத் தெரியவில்லை. எல்லா பழைய ஆயுதங்களும் மாற்றப்பட்டு விட்டன. அவை இரும்பு சிதறல்களாக மாத்திரம் உள்ளன.  36. அங்கே கிடங்கிற்கு ஜெபர்சன்வில்லின் வழியாக வந்த நிலக்கரியினால் இயக்கப்பட்ட அந்த பழைய இரயில் வண்டியைக் குறித்து நான் நினைத்துக் கொண்டிருந்தேன். அந்த இரயில் வண்டியில் நிறைய துப்பாக்கிகள் (அவைகள் ஃபோர்ட் நாக்ஸிற்கு கொண்டு செல்லப்பட்டன. அங்கு தான் அவை செய்யப்பட்டன) மற்றும் டாங்கிகள் ஏற்றப்பட்டு இருக்கும் அந்த பழைய புகை வண்டி எஞ்சின் இப்பொழுது அவைகளில் ஒன்று கூட இயக்கப் படுவதில்லை. அவை எல்லாம் எடுக்கப்பட்டுவிட்டன. அவைகள் இப்பொழுது காட்சி பொருட்களாக வைக்கப் பட்டுள்ளன. அந்த புகை இஞ்சின்களை கடந்த போரின் போது அவர்கள் உபயோகித்தனர். இப்பொழுது இஞ்சின்கள் டீசலினால் இயக்கப்படுகின்றன. இன்னும் சில நாட்களில் அவை அணுசக்தியினால் இயக்கப்படும்: ஆகவே அவர்கள் அவைகளை உபயோகமற்ற பொருளாக எறிந்து விட்டு மறுபடியும் புதிதான ஒன்றைச் செய்ய ஆரம்பிக்கின்றனர்.  37. ஆகவே உங்களுக்குத் தெரியுமா, இங்கே நாடுகளுக்கு இடையே உள்ள போரிற்கிடையே, அதைக்காட்டிலும் ஒரு பெரிய போரானது நடந்து கொண்டிருக்கின்றது. அந்த போர் என்னவென்றால் தேவனுக்கும் சாத்தானுக்கும் இடையே உள்ள போராகும். அது ஒரு மகத்தான யுத்தமாகும். அது தான் முதலாவது யுத்தமாகும். அந்த யுத்தம் இன்னும் தீவிரமாக நடந்து கொண்டிருக்கின்றது. ஆனால், ஓ, அது இன்னும் கூடிய சீக்கிரத்தில் ஒரு முடிவிற்கு வரும் என்பதைக் குறித்து எனக்கு மகிழ்ச்சியே . அப்பொழுது எல்லாம் முடிவுற்றிருக்கும். சாத்தான் தன்னுடைய துப்பறியும் பிரதிநிதிகளை எல்லா இடத்திலும் வைத்துள்ளான். அவர்கள் தேவனுடைய மக்களையும், தேவனுடைய அசைவையும் வேவு பார்த்துக் கொண்டிருக் கின்றனர். சத்துரு எல்லா இடத்திலும் உட்கார்ந்துக் கொண்டு தன்னால் என்ன செய்ய முடியும் என்று கவனித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறான். தேவனும் கூட பிரதிநிதிகள் எல்லா இடத்திலும் கொண்டுள்ளார்.?.... ஆகவே நாம் அதற்கு நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்.  38. ஆகவே ஒவ்வொரு நாடும் தன் இராணுவத்திற்குத் தன்னால் செய்ய முடிகின்ற வரைக்கும் சிறந்த மற்றும் நவீன போர்த்தளவாடங்களைச் சேகரித்து அளிக்கின்றது. அதன் காரணமாகத்தான் நம்முடைய பழைய போர்த் தளவாடங்கள் பழமைப்பட்டுப் போகின்றது. ஏனென்றால் நாம் ...... ஜெர்மனி தேசம் ராடார் கருவியை அறிந்தது. நாமும் பல நாடுகளிடமிருந்து பல காரியங்களை எடுத்துக் கொண்டு நாமே ஏதோ ஒன்றை கண்டுபிடிக்கின்றோம். இப்பொழுது விண்வெளியில் ஒரு மனிதன் சுற்றிக் கொண்டிருக்கும்படி செய்திருக்கின்றனர். "நாங்கள் ஒரு மனிதனை விண்வெளியில் வைத்திருக்கின்றோம்' என்று அவர்கள் கூச்சலிட்டுக் கொண்டிருப்பதை நீங்கள் அறிவீர்கள்.  39. அது ஒன்றுமேயில்லை . இரண்டாயிரம் வருடங்களாக விண்வெளியில் ஒருவரை கிறிஸ்தவர்களாகிய நாம் கொண்டிருக்கின்றோம். அது சரியே. அவர்கள் ....? ... அதைக் குறித்து கூச்சலிட்டுக் கொண்டிருக்கின்றனர். அது ஒன்றும் புதிதான ஒன்றல்ல. அது நமக்கு பழமையான ஒரு காரியமாகும். அதை நாம் நீண்ட காலமாக அறிந்துள்ளோம். ஆகவே, பாருங்கள்? பாருங்கள். நாம் எவ்வளவாக முந்திச் சென்றுள்ளோம். அவர்களோ அதை உணர்வதில்லை.  40. ஆமாம், பெரிய சாலைகளையும், அதைப் போன்ற மேம்பட்ட காரியங்களையும் செய்து பூமியை ஒரு சிறந்த இடமாக மாற்ற முயற்சி செய்து கொண்டிருக்கின்றனர். ஆனால் சாந்தகுணமுள்ளவர்கள் அதை சுதந்தரிக்கப் போகின்றனர் என்னும் காரியத்தை அவர்கள் உணராதிருக் கின்றனர். ஆகவே உங்களுக்குப் புரிகின்றதா, ஆகவே, ஆகவே... பாருங்கள். தேவன் அவ்வெல்லாவற்றையும் நமக்கென திட்டமிட்டு முடித்து விட்டார். நாம் செய்ய வேண்டிய ஒரே ஒரு காரியமானது என்னவென்றால் அவரை அப்படியே பற்றிக்கொண்டு எல்லாம் பெற்றுக் கொண்டோம் என்று விசுவாசித்து சென்று கொண்டேயிருத்தலாகும். அதை மாத்திரமே நாம் செய்ய வேண்டு மென்று அவர் கூறியுள்ளார். அவர் நம்மை காரியத்தினூடாகக் கொண்டு செல்வார்.  41. ஆகவே நாம் காண்பது என்னவென்றால் சத்துருவின் இரகசிய உளவாளிகள் எல்லா இடங்களிலும் தரித்திருந்து ... இப்பொழுது ஒவ்வொரு தேசமும் தன்னுடைய இராணுவத்தினருக்கு நவீன, மிக நவீன போர் தளவாடங்களை தருவித்து அளிக்கின்றது. அவர்கள் ஆராய்ச்சி செய்து எல்லாக்காரியத்தையும் செய்கின்றனர். மற்றவர் செய்யும் ஆயுதங்களுக்கு பதிலடி கொடுக்கும் ஆயுதங்களை, இன்னும் அதிக நவீன ஆயுதங்களை, இன்னும் அதிக சக்தி கொண்ட ஆயுதங்களைத் தயாரிக்க அவர்கள் முயற்சிக்கின்றனர். வில் அம்பில் ஆரம்பித்து ஒரு துப்பாக்கிக்கு வந்தோம். பிறகு துப்பாக்கியிலிருந்து ஒரு நவீன ரக துப்பாக்கிக்கு வந்துள்ளோம். பிறகு அதிலிருந்து ஒரு அணு குண்டிற்கு வந்துள்ளோம். இன்னும் அதிகமாகச் செய்து கொண்டேயிருக்கிறோம். ஆகவே இக்காரியமானது அவர்களை எல்லா நேரமும் ஓயாமல் வேலை செய்து கொண்டே இருக்க வைக்கின்றது. ஆகவே அது தேசத்தின் வேலையாகும். அவர்கள் பிழைக்க வேண்டுமென்றால், இருப்பதிலேயே சிறந்த இராணுவத் தளவாடத்தைத் தன் போர்வீரர்களுக்கு அளிக்க விரும்புகின்றனர்.  42. சரி, தேவன் முடிவற்றவர் என்பதை நீங்கள் அறிவீர்கள். பாருங்கள், வேறொரு சிறந்த ஒன்றைக் குறித்து அவர் சிந்தித்துப் பார்க்க வேண்டிய அவசியமே இல்லை. அவர் சிறந்த ஒன்றைக் கொண்டு தான் ஒரு காரியத்தை ஆரம்பிக்கின்றார். ஆகவே அந்தக் காரியம் இன்னுமாக விருத்தி செய்யப்படவேண்டிய அவசியமே இல்லை. அதைக்குறித்து எந்த ஒன்றுமே செய்யப்படவே முடியாது. அவர் நமக்குச் சிறந்ததான ஒன்றைத் தான் அளித்துள்ளார். அது அவருடைய வார்த்தையாகும். ஆமென். அது சரியே. சிறந்தது என்று ஒன்று அளிக்கப்பட முடியுமானால் அது அவருடைய வார்த்தையே. தேவன் தம்முடைய மக்களுக்கு மிகச் சிறந்த ஒன்றைத் தான் அளிக்கின்றார். மிக மிகச் சிறந்த ஒன்றைத்தான் அவர் தம்முடைய பிள்ளைகளுக்கு அளிக்க அவர் தெரிந்துக் கொண்டார். அதைக்குறித்து எனக்கு மிக்க மகிழ்ச்சி. நான் நம்முடைய பிதாவாகிய தேவனையும், இராஜ்யத்தையும் காண்கிறேன். நாம் அந்த இராஜ்யத்தின் பிரதிநிதிகளாவோம். அவர் முடிவற்றவர்.  43. இப்பொழுது இந்த தேசங்கள் ஆராய்ச்சி செய்து, ஓயாமல் வேலை செய்து விஞ்ஞானத்தை நுண்மையாக கூர்ந்து ஆராய்ந்து, செயல்பட்டுக் கொண்டேயிருக்கின்றன. ஆனால் நீங்கள் பாருங்கள், தேவன் முடிவற்றவராக இருப்பதால் ஆரம்பத்திலிருந்து முடிவு வரைக்கும் அறிந்துள்ளார். அது நடப்பதற்கு முன்னதாகவே, எப்படி, எப்பொழுது, எங்கே அது நடக்கும் என்று அவருக்குத் தெரியும். ஆகவே நாம் அவருக்குள்ளாக இருக்கும் வரைக்கும் எல்லாம் நல்லபடியாக இருக்கும் என்று நாம் நிச்சயம் கொண்டவர்களாக இருக்கலாம். எதைக் குறித்தும் பயங்கொள்ள வேண்டிய அவசியமே இல்லை. நம்மை தொல்லைப்படுத்த எதுவுமே இல்லை. ஆகவே நாம் சிறு பிள்ளைகளைப் போல அப்படியே அமைதியாக இளைப்பாறிக் கொண்டிருக்கிறோம். ஏனென்றால் எந்த ஒரு காரியமும் நம்மை தொல்லைப் படுத்தாது. ஆகவே முடிவற்ற தேவன். 44. நீங்கள் பாருங்கள். அதன் காரணமாகத் தான் நான் அவருடைய வார்த்தையை விசுவாசிக்கின்றேன். நீங்களும் தானே? ஏனென்றால் அவரே தான் அந்த வார்த்தை. "ஆதியிலே வார்த்தை இருந்தது. அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது. அந்த வார்த்தை தேவனாயிருந்தது. அந்த வார்த்தை மாம்சமாகி நமக்குள்ளே வாசம் பண்ணினார்.” இப்பொழுது, ஆகவே தேவன் சாத்தானுக்கு மேலே இருந்தபடியால் அவரால் தவற முடியாது என்பதைத் தாமே அறிந்திருந்தார். ஆகவே தம்மைத் தாமே (பாருங்கள்?), தம் வார்த்தையை அளித்தார். அதுதான் தோற்கடிக்கச் செய்கின்ற ஒன்றாகும்.  45. இப்பொழுது, தேவன் இன்றைக்கு ஒரு தீர்மானத்தைச் செய்து, திரும்பவுமாக நாளை வந்து இன்னும் சிறந்த ஒரு தீர்மானத்தைச் செய்து முடியாது (பாருங்கள்?), ஏனென்றால் அவருடைய முதல் தீர்மானமே பரிபூரணமான ஒன்றாகும். அவர் அதை மாற்றவேண்டிய அவசியமே இல்லை. ஆகவே தேவன் என்னவெல்லாம் கூறுகின்றாரோ அதன் பேரில் நாம் இளைப்பாறிக்கொண்டிருக்கலாம். அந்தக் காரணத்திற்காகத் தான் வேதாகமம் தேவனுடைய வார்த்தை என்று நான் விசுவாசிக்கின்றேன்.  46. இப்பொழுது நான் அதை விசுவாசிப்பதன் காரணமானது என்னவென்றால், தேவன் இந்த உலகத்தை நியாயந்தீர்க்க ஒரு நியதியைக்கொண்டிருக்க வேண்டும். அவர் ஒரு சபையைக் கொண்டு நியாயந்தீர்ப்பாரென்றால், எந்த சபையாக இருக்கும்? பாருங்கள். நூற்றுக்கணக்கான சபைகள் இருக்கின்றன. பல்வேறு வகையான சபைகள் ஸ்தாபனங்கள் உள்ளன. சரி. ஆகவே உங்களால்..... "நாங்கள் அதைக் கொண்டிருக்கிறோம்” என்று லூத்தரன்கள் கூறுகின்றனர். பாப்டிஸ்ட்கள், இல்லை, நாங்கள் தான் அதைக் கொண்டிருக்கிறோம்' என்கின்றனர். பிரஸ்பிடேரியன்கள் "நாங்கள் கொண்டிருக்கிறோம்” என்கின்றனர். பெந்தெகோஸ்தேயினர். "இல்லை , இது தான் அது” என்று கூறுகின்றனர். நசரீன்கள், "இல்லை , இது தான் அது” என்று கூறுகின்றனர்.  47. நீங்கள் குழப்பமடைவீர்கள். ஆனால் நீங்கள் பாருங்கள். அது தான் வார்த்தையாகும். நான் - நான் அது வார்த்தை என்று மாத்திரமே விசுவாசிக்கின்றேன். பாருங்கள்? அது எழுதப்பட்ட விதமாகவே அதை எடுத்து அதை அப்படியே விசுவாசியுங்கள். அது தனிப்பட்ட வியாக்கியானத்திற்குரியதல்ல என்று வேதாகமம் கூறுகின்றது. அது எழுதப்பட்டு மாத்திரமே உள்ளது.  48. ஆகவே அவர் உலகத்தை ஒரு நியதியைக் கொண்டு நியாயந்தீர்க்கப் போகிறாரென்றால், இது தான் .... அவர் அதை கவனித்துள்ளார். ஆகவே அது அந்த விதமாகத் தான் இருந்தாக வேண்டும். ஆகவே அதை அந்த விதமாக நான் விசுவாசிக்கிறேன். அதை வாசித்து "ஆம் கர்த்தாவே" என்று கூறுங்கள். நாம் தேவனை விசுவாசித்து, ஒவ்வொரு முறையும் தேவன் எதையாவதொன்றைக் கூறுகையில் நாம் அதற்கு “ஆமென்” என்று கூறுகிறோம் என்று நான் நம்புகிறேன். தேவன் கூறுவதெல்லாமே சரியானதாகும். அவர், “ இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்” என்று கூறியுள்ளார். இப்பொழுது, யாராவது வந்து “சரி ஒருவிதத்தில் நான்...'' என்பாரானால் “ஆமென்” அவர், “மனந்திரும்பி ஞானஸ்நானம் பெற்று பரிசுத்த ஆவியைப் பெறுங்கள்” என்று கூறியுள்ளாரானால், "ஆமென்,” பாருங்கள்? “விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான்” என்று கூறியுள்ளார். “ஆமென்”. “நான் மறுபடியும் திரும்ப வருவேன்” என்று அவர் கூறியுள்ளார்.  49. “ஆமென்”, அவர் என்ன கூறினாலும் நமக்குள்ளாக இருக்கும் பரிசுத்த ஆவி "ஆமென்” என்று கூறி அதை முத்தரிக்கும், பாருங்கள்? பிறகு அடுத்த காரியத்துக்கு எதிர்நோக்கியிருங்கள். பாருங்கள்? இப்பொழுது அந்த விதமான ஒரு விசுவாசத்தை நாம் கொண்டிருப்போமானால் அது - அது அற்புதமான ஒன்றாகும்.  50. இப்பொழுது அது சரியான ஒன்று என்று நான் அறிந்துள்ளதின் காரணம் என்னவெனில் வெளிப்படுத்தல் புத்தகத்தில், “ஒருவன் இந்த புஸ்தகத்திலிருந்து ஒரு பங்கை எடுத்துப் போட்டால் அல்லது இவைகளோடே எதையாகிலும் கூட்டினால் . . .'' என்று தேவன் கூறியிருக்கின்றார். ஓ, என்னே, அதைக்கொண்டுதான் அவர் அப்போது உலகத்தை நியாயந்தீர்ப்பார்.  51. ஓ, நீங்கள் “அவர் கிறிஸ்துவைக் கொண்டு அதை நியாயந்தீர்க்கப் போகின்றார்" என்று கூறுகிறீர்கள். அவர் தான் வார்த்தை. அதிலிருந்து புறம்பே செல்ல முடியாது. இப்பொழுது சரியாக திரும்ப மறுபடியும் அதற்கு வந்திருக்கிறோம். அவர்தான் அந்த வார்த்தையாவார். ஆகவே இப்பொழுது . . . இப்பொழுது அந்த வார்த்தை உண்மையானது என்று நாம் அறிவோம். நீங்கள் கிறிஸ்துவைக் கொண்டிருக்கிறீர்கள் என்று கூறிக்கொண்டு இந்த வார்த்தையை நீங்கள் விசுவாசிக்கவில்லையெனில், நீங்கள் கொண்டிருக்கின்றதிலே ஏதோ ஒரு தவறு இருக்கின்றது ....? ...... வார்த்தை சரியானதாகும். அது வார்த்தையாகத் தான் இருக்க வேண்டும்.  52. இப்பொழுது, தேவன் தம்முடைய பிள்ளைகளுக்குச் சிறந்ததை அளித்தார் என்று நாம் அறிந்துக்கொண்டோம். ஆகவே அவர் அதற்குச் சற்று சீர்த்திருத்தங்கள் செய்ய வேண்டிய அவசியமில்லை . அவர் .... அவர் மாற்றுவதே கிடையாது. தம்முடைய பிள்ளைகளின் பாதுகாப்பிற்காக முதல் முறை அவர் அளித்ததிலிருந்து ஒரு சிறு துளியைக் கூட அவர் மாற்றவில்லை . இப்பொழுது அவர் அறிந்த ..... பரலோகத்தில் நடந்த யுத்தத்தில் அவர் சாத்தானை உதைத்து வெளியே தள்ளவேண்டியிருந்தது. பிறகு அவர் பூமிக்கு வந்து தம்முடைய பிள்ளைகளைத் தம்முடைய வார்த்தையால் அரணிட்டு பாதுகாப்பிட்டார்.  53. நான் உங்களை ஒன்று கேட்க விரும்புகிறேன். சற்று சிந்தித்துப் பாருங்கள். அந்த ..... இப்பொழுது, அவருடைய வார்த்தையாகிய இந்த மகத்தான கோட்டையில் ஏவாள் நின்று கொண்டு அதைச் செய்யவில்லை..... இப்பொழுது சாத்தான் வெளியே இருந்துக் கொண்டு அந்த கோட்டையிலிருந்து ஏவாளை வெளியே கொண்டு வரத்தக்கதாக ஒரு யுக்தியைக் கையாள முயற்சித்தான். ஏனெனில், அவள் அந்த வார்த்தையின் பின்னால் தரித்திருந்த வரைக்கும் எல்லாம் அருமையாக இருந்தது. அங்கே தான். நாம் நம்முடைய தவறைச் செய்கின்றோம். நாம் வார்த்தையின் பின்னாலிருந்து அப்பால் செல்லும் போது தான் நாம் தவறு செய்கின்றோம். ஆனால் நாம் வார்த்தையை நமக்கு முன்னே செல்லத்தக்கதாக விடும் வரைக்கும் ...... வார்த்தைக்கு முன்னே செல்லாதீர்கள் ; வார்த்தை உங்கள் முன்பாகச் செல்லட்டும். பாருங்கள்? அது உங்கள் முன்பாகச் செல்லும்படிக்கு விட்டு விடுங்கள், நீங்கள் சரியாக அதன் பின்னால் இருந்து வாழுங்கள். அது குழியை நிரப்பும். நீங்கள் அதனுள் நடந்து செல்வீர்கள். பாருங்கள்? அந்த விதமாகத்தான் அது கிரியைச் செய்யும்.  54. இப்பொழுது, நாம் காண்பதென்னவெனில் இந்த மகத்தான சமயத்தில் ...... துவக்கத்தின் சமயத்தில் தேவன் தம்முடைய பிள்ளைகளைத் தம்முடைய கோட்டையாகிய வார்த்தையில் அரணிட்டு, அவர்களிடம் கூறினது...... இப்பொழுது சிந்தித்துப் பாருங்கள். ஏவாள் முழு காரியத்தையும் வேண்டாமென்று புறக்கணித்துத் தள்ளவில்லை. “உம், தேவன் முற்றிலும் தவறாக இருக்கிறார் என்று நான் யூகிக்கிறேன். அதன் ஒரு வார்த்தையைக் கூட நான் விசுவாசிப்பதில்லை” என்று கூறவில்லை. இல்லை, "கர்த்தாவே அதன் பாதி பாகத்தை நான் விசுவாசிக்கிறேன்'' இல்லை. சாத்தான் வார்த்தையின் ஒரு சிறு பகுதியைத் தவறாக வியாக்கியானித்தான். அந்த ஒரு சிறிய பதத்திற்கு மாத்திரம் ஏவாள் செவிகொடுத்ததால் அது ஒவ்வொரு சவ அடக்க ஊர்வலத்தைப் பிறப்பித்தது. ஒவ்வொரு கல்லறையையும், ஒவ்வொரு நரைத்த முடியையும், வியாதியுள்ள ஒவ்வொரு குழந்தையையும், செய்யப்பட்ட ஒவ்வொரு பாவத்தையும் அது பிறப்பித்தது. ஏனென்றால் தேவனுடைய வார்த்தையிலிருந்து ஒரு சிறு புள்ளியை எடுத்து அதைத் தவறாக கையாண்டதால் தான் நடந்தது.  55. இப்பொழுது, முடிவற்ற தேவன், முழுவதுமாக அன்பினால் நிறைந்திருக்கின்ற தேவன், தம்முடைய வார்த்தைத் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு (அதை முழுவதுமாக விசுவாசிக்காதே, அதின் ஒரு பாகத்தை மாத்திரம் விசுவாசி), அந்த வார்த்தையின் ஒரு சிறு பகுதியை அவிசுவாசித்ததால் இவை எல்லாவற்றையும் சம்பவிக்க விட்டு விட்டாரென்றால், நான் விசுவாசிப்பது என்னவென்றால் அதன் ஒவ்வொரு பங்கையும் நாம் திரும்பவுமாக எடுக்கப்போகின்றோம். ஏனென்றால் அதை சற்றுத் தவறாகத் திருப்பி, " வேதாகமம் இதைத்தான் கூறுகின்றது. ஆனால் உண்மையாகப் பார்ப்போமானால் அதன் அர்த்தம் அதுவல்ல” என்று கூறுதல் ஆகும். அந்த விதமாக அது இல்லை . பாருங்கள்? அது என்ன கூறுகின்றதோ அதன் கூற்றில் எந்த ஒரு மாற்றமும் கிடையாது. ஆகவே அவர் என்ன கூறியிருக்கின்றாரோ அந்த விதமாகவே நாம் அதைக் கைக்கொள்ள வேண்டும். 56. ஆனால் ஏவாள் .... இப்பொழுது, நாம் இப்பொழுது காண்பது என்னவெனில் அவள் ... சாத்தான் அவளுடைய கவனத்தை ஈர்க்க வேண்டியதாக இருந்தது. இப்பொழுது, அவன் தேவனோடும் அவருடைய பிள்ளைகளாகிய மனிதரோடும், பெண்களோடும் அவன் போரிட்டுக் கொண்டிருக்கிறான் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஆகவே இப்பொழுது நினைவில் கொள்ளுங்கள் தேவனுடைய போர் திறமாகிய அவருடைய பாதுகாப்பை எதிர்கொள்ள சாத்தான் ஒரு யுக்தியைக் கையாள வருகின்றான். அவனால் முடிந்தவரை ஒரு இன்னும் சிறந்த ஆயுதத்தை அவனால் கண்டு பிடிக்க முடியவில்லை. ஆகவே அவனால் செய்ய முடிந்த ஒரே செயல் முறை, யுக்தி என்னவென்றால் சொந்த மூளையைக் கொண்டு யோசித்துப் பார்த்தல் ஆகும். ஓ “வார்த்தை கூறுகிறது......'' என்று உங்கள் சொந்த மூளையைக் கொண்டு அதை யோசித்துப் பார்க்க முனைந்தால் ... "உம் அதை நான் சற்று யோசித்துப் பார்க்கட்டும். அதன் அர்த்தம் அதுவல்ல ...'' “அவருடைய தழும்புகளால் நாம் குணமானோம்”. “அது அவ்விதமாகக் கூறவில்லை ...'' அதன் அர்த்தம் அதுவல்லவே. அது சரியே.  57. “எவனாகிலும்...''  58. “சரி, சகோதரன் பிரன்ஹாம், பரிசுத்த ஆவி அந்நாட்களில் இருந்தவர்களுக்கு மாத்திரம் தான், ஆனால் ..... நான் அதை சற்று யோசித்து பார்த்த போது எனக்கு தோன்றினது என்னவென்றால் நமக்கு ...'' ஓ, இல்லை. அவ்விதமாகச் செய்யாதே, "எவனாகிலும்... உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும் நம்முடைய தேவனாகிய கர்த்தர் வரவழைக்கும் தூரத்திலுள்ள யாவருக்கும் உண்டாயிருக்கிறது.'' பாருங்கள்? சொந்த மூளையைக் கொண்டு யோசனைப் பண்ணாதீர்கள். யோசனைப் பண்ணத்தக்கதாக சற்று நிற்காதீர்கள். விசுவாசித்துக் கொண்டேயிருங்கள். அவர் என்ன கூறியிருக்கின்றாரோ அதை அப்படியே விசுவாசித்து அப்படியே இருங்கள்.  59. "நல்லது, சகோதரன் பிரன்ஹாம், நான் பத்து வருடங்களாக பரிசுத்த ஆவியைக் கேட்டுக் கொண்டே இருக்கிறேன்.'' நீ எதைக் குறித்து யோசித்துப் பார்த்துக் கொண்டிருக்கின்றாய்? நீ அவருடைய திட்டத்தை நிறை வேற்றியுள்ளாயானால் அப்படியே தொடர்ந்து சென்று கொண்டே இரு. அதை அப்படியே விசுவாசி. பாருங்கள்? அவர் திட்டத்தை வகுத்தார். நீ அந்த திட்டத்தை மாத்திரம் பின்பற்று. அப்பொழுது அது சரியாக நடந்தேறியே ஆக வேண்டும். அது நடக்கவில்லையெனில் அப்படியானால் அவர் தவறாக கூறினார் என்றாகும். பாருங்கள்? அவர் நமக்கு தவறான ஒன்றைக் கூறி தொடர்ந்து தேவனாக இருக்க முடியாது. ஆகவே நீங்கள் பாருங்கள். அது அவருடைய வார்த்தை என்று நீங்கள் விசுவாசித்தாக வேண்டும். இல்லையென்றால் அவரை நீங்கள் விசுவாசிக்க வேண்டாம். ஆகவே ... ஆகவே இது விசித்திரமானதல்லவா, அப்படித்தானே? ஆனால் அது நிச்சயமாக உண்மையானதே. அது உண்மையாகவே சத்தியமாகும்.  60. இப்பொழுது நாம் பார்ப்பது என்னவென்றால் தேவனுடைய இந்த மகத்தான சத்துரு “ஓ, அவர்கள் அந்த வார்த்தையை விசுவாசிக்கின்ற வரையிலும் என்னால் அவர்கள் கிட்டே செல்ல முடியாது. ஏதேனில் உள்ள அந்த குடும்பமானது அந்த வார்த்தையின் பின்னால் தங்கி இருக்கின்ற வரையிலும் என்னால் அவர்களைத் தொடக்கூட முடியாது” என்று நினைத்தான். இன்றைக்கும் கூட அவனால் முடியாது. அது சரியே. அவன் இன்னுமாக கிட்டே வரமுடியாதபடிக்கு தடுக்கப்பட்டிருக்கின்றான். அது சரியே. "ஆகவே நான் ஒரு நல்ல வியூகத்தை அமைத்து அதை உபயோகித்து அவர்கள் சொந்த மூளையைக் கொண்டு யோசித்துப் பார்க்க செய்தால் ...... நான் சில மானிட யோசனைகளை அளிப்பேன். ஏனென்றால் அவள் மானிட இனம் தானே. நான் சற்று மனித யோசனைகளை அளித்தால் அப்பொழுது நம்மால் - நம்மால் - நம்மால் போரில் வெற்றி பெற முடியும், சாத்தானும் அவனுடைய தூதர்களும்”, அப்பொழுது ஏவாள் ஒரு வழியை ஏற்படுத்திக் கொடுத்தாள்.  61. ஆகவே நம்முடைய சத்துருவை அவனுடைய தாக்குதலைக் கொண்டு நம்மால் அறிந்துக் கொள்ள முடிகின்றது. நான் கூறின விதத்தைக் கொண்டு ஒருக்கால் உங்களால் சரியாக அதைப் புரிந்து கொள்ளவில்லை போலும். நம்முடைய சத்துருவை நாம் அறிவோம். யாரொருவரும் எந்த ஆவியும், எந்த ஒரு நபரும் தேவனுடைய வார்த்தையுடன் ஒத்துப் போக வில்லையெனில் நினைவில் கொள்ளுங்கள், அது தான் உங்கள் சத்துருவாகும். அது தான் உங்கள் சத்துரு. இந்த அவனுடைய பழமையான தாக்குதலை நாம் அறிவோம். அந்த விதமாகத் தான் அவன் மானிட இனத்தை உடைத்துப் போட்டான். இன்றைக்கும் அந்த விதத்தில் தான் அவன் இன்னுமாக உடைத்துக் கொண்டிருக்கிறான். அந்த விதமாகத் தான் உங்களை அவன் தேவனிடமிருந்து எடுத்து விடுகிறான். அது என்னவென்றால் அவருடைய வார்த்தையை அவிசுவாசிப்பதேயாகும். நீங்கள் தேவனுடைய ஐக்கியத்தில் தரித்து, மாலையின் குளிர்ச்சியான பொழுதில் அவருடன் பேசுவதற்கான இருக்கின்ற ஒரே வழி என்னவென்றால் வார்த்தைக்குள்ளாக அரணிடப்பட்டு தரித்திருத்தலே ஆகும். தேவனுடைய வார்த்தை என்னும் திரை உங்களைச் சுற்றிலும் மூட விடுங்கள். அதின் நடுவில் நீங்கள் ஒரு சிறு மணி உருளைப் போல இருங்கள். அது சரி, அப்பொழுது நீங்கள் அரணிடப்பட்டு ..... ?..... 62. இப்பொழுது, இதைச் செய்ய வேண்டுமானால் அவன் அதை மிகக் கவருகின்ற ஒன்றாக அமைக்க வேண்டும். அது என்னவென்றால் சொந்த மூளையைக் கொண்டு யோசித்தல் என்பதே ஆகும். ஆகவே அந்த விதமாகத் தான் சாத்தான் செய்கின்றான். அவன் அலுவலை நன்கு செய்யும் ஒருவன் ஆவான். அவன் ஒரு அருமையான சத்துருவும் கூட (good adversary) அவன் அதைக் கவர்ச்சியூட்டுகின்ற ஒன்றாகச் செய்வான். அவன் அதை ஏவாளுக்கு கவர்ச்சிகரமானதாகத் தென்படும்படிக்குச் செய்தான். அவன் “இப்பொழுது, அருமையானவளே, சற்று கவனி, எது சரி எது தவறு என்று உனக்குத் தெரியாது. ஆகவே அந்த விருட்சம் கண்களால் காண்பதற்கு அழகான ஒன்றாக இருக்கின்றது என்பதை நீ - நீ நினைவில் கொள்ள வேண்டும். அது - அது - அது ஒருவனுக்குப் புத்தி தெளிவிக்கப் பண்ணும். அது ...... ஓ . அது ஒரு அருமையான கவர்ச்சியான தூண்டில் அல்லவா. "நீ டாக்டர் (Ph.D.) பட்டம் அல்லது எல். எல் (LL) பட்டம் L.Q.U.S.T.D. இரட்டைப் பட்டங்களை அல்லது அதை போன்ற ஒன்றைப் பெற்றால் போதுமானது. நீ புத்தி தெளிந்தவனாகி விடுவாய்”.  63. இப்பொழுது நினைவில் கொள்ளுங்கள், அதுவல்ல காரியம், நீங்கள் தேவனில் கொண்டுள்ள விசுவாசமே அதைச் செய்கின்றது. உங்கள் சுவரில் ஒட்டுவதற்கு போதிய அளவு பட்டங்களை நீங்கள் கொண்டிருந்து அதே நேரத்தில் இன்னுமாக தேவனை அறியாமல் இருக்கலாம். பாருங்கள்? நீங்கள் தேவனை விசவாசத்தினாலே தான் அறிந்தீர்கள். வேறு எந்த விதத்திலும் அல்ல. எப்படிப்பட்ட விசுவாசத்தினால்? அவருடைய வார்த்தையில் உள்ள விசுவாசத்தினால். அந்த ஒரே விதத்தில் தான் அவர் விசுவாசத்தை அங்கீகரிக்கின்றார். “விசுவாசம் கேள்வியினால் வரும். தேவனுடைய வசனத்தை கேட்பதினால் வரும்.'' அந்த விதமாகத்தான் அது வருகின்றது. தேவனுடைய வசனத்தைக் கேட்பதினால் தான் ஆகும். 64. இப்பொழுது சாத்தான் அதைக் கவர்ச்சியூட்டுகின்ற ஒன்றாகச் செய்தான். இன்னுமாக அவன் கவர்ச்சி யூட்டுகின்ற ஒன்றாக அதைச் செய்துக் கொண்டிருக்கிறான். இப்பொழுது, நான் எதையும் தரக்குறைவாகக் கூறவில்லை. நான் - நான், அந்த விதமாகக் கூற நான் விழையவில்லை . அந்த விதமாக என்னை நீங்கள் புரிந்துக் கொள்ள மாட்டீர்கள் என்று நான் நம்புகிறேன். ஆனால் சாத்தான் வேதாகமக் கல்லூரி பாடத்தையும் கல்வியையும் கவர்ச்சியூட்டுகிறதாகச் செய்ய முயற்சிக்கின்றான். மேலும், நாமும் இரண்டாயிரம் வருடங்களாக உலகத்திற்கு கல்வியறிவு ஊட்ட முயற்சித்து ஆனால் முன்பிருந்ததைக் காட்டிலும் நிலைமை இன்னும் மோசமாகிக்கொண்டே போகின்றது. நீங்கள் கல்வியினாலோ ஸ்தாபனத்தினாலோ மக்களைக் கிறிஸ்துவினிடமாகக் கொண்டு வர முடியாது. அவர்கள் அதை அழகானதாக்க முயற்சிக்கின்றார்கள். பாவம் அழகானதாகும். நிச்சயமாக, அது அழகு வாய்ந்தது. இப்பொழுது நீங்கள் வேதாகமத்தில் எடுத்துப் பார்த்தால். அதை நாம் காணலாம்.  65. எங்கோ ஓரிடத்தில் சில இரவுகளுக்கு முன்னர் நோவாவும் அவனுடைய நாட்களையும் குறித்த ஒரு பொருளின் பேரில் நான் பேசிக்கொண்டிருந்தேன். ஆதியாகமம் 6ஐ எடுங்கள், “தேவகுமாரர் மனுஷ குமாரத்திகளைக் கண்ட போது ஒரு முறை நான் வரலாற்றை ஆராய்ந்துக் கொண்டிருந்த போது அந்த வரலாற்றாசிரியரின் கருத்துகளை நான் கேட்டுக் கொண்டிருந்தேன். அவர் ..... ஓ இல்லை . என்னை மன்னிக்கவும், அது “தேவ குமாரர்” என்பதைக் குறித்து அவர் எண்ணியிருந்த கருத்தாகும். அவர் கூறினதாவது, விழுந்து போன தூதர்கள் மானிட மாம்சத்திற்குள்ளாக தங்களை புகுத்திக் கொண்டு பெண்கள் எவ்வளவு கவர்ச்சியூட்டுகிறவர்கள் என்று பெண்களைப் பார்த்தார்கள். ஆகவே இந்த தேவகுமாரர் மாம்சத்திற் குரியவர்கள் ஆனார்கள் என்பதே. 66. அப்பொழுது நான் “அந்த விதமாக நீங்கள் எடுத்துக் கொள்வீர்களானால், என் அருமை சகோதரனே, நீங்கள் என்னை விட மிகச் சாதுரியமானவர் தான். ஆனால் அவ்விதமான ஒரு கருத்து சரியென்றால், நீங்கள் பிசாசை ஒரு சிருஷ்டிகனாக ஆக்கிவிடுகிறீரே என்று நினைத்தேன். ஆகவே பிசாசால் சிருஷ்டிக்க முடியாது. தேவன் சிருஷ்டித்ததை அவன் தாறுமாறாக்கி விடுகிறான். அவ்வளவே தான். ஒரே ஒரு சிருஷ்டிப்பு தான் இருக்கிறது. ஒரே சிருஷ்டிகர். அவர் தேவனே. தவறு என்பது சரியான காரியம் தாறுமாறாக்கப்படுதலே. பொய்யென்பது உண்மை தாறுமாறாக்கப்படுதல் ஆகும். புரிகின்றதா? விபச்சாரம் என்பது சரியான ஒரு செயல் தவறாகப் பயன்படுத்தலேயாகும். புரிகின்றதா? எல்லா தவறும் என்னவென்றால் சரியானது தாறுமாறாக்கப்படுதல் தான். ஆகவே சாத்தானால் செய்ய முடிந்த ஒன்றே ஒன்று என்னவென்றால் தேவன் ஏற்கனவே செய்து முடித்திருந்ததை அப்படியே தாறுமாறாக்குவது தான் (பாருங்கள்?) தாறுமாறாக்கப்படுதல். அது சரி.  67. இப்பொழுது நாம் காண்பதென்னவெனில் சாத்தான் அநேக முறை அதை மிகக் கவர்ச்சியூட்டுகின்றதாக அமைத்து அதனால் நீங்கள் இன்னும் அதிக புகழ் பெற்றவர்களாக ஏதுவாக வைக்கின்றான் என்பதை நாம் காண்கிறோம். இப்பொழுது, அவன் அதைத்தான் ஏவாளுக்குச் செய்தான். ஞானம், சாதுரியம், செல்வம், இன்றைக்கு அதை மிக கவர்ச்சிகரமாக ஆக்கி மக்கள் சபைக் கூட்டத்திற்கு இலட்சக்கணக்கான டாலர்களை கொட்டும் படிக்குச் செய்து பிறகு கர்த்தருடைய வருகை சமீபம் என்று பிரசங்கிக்கின்றனர். சபைகள் பிரமாண்டமான அரங்குகளை கட்டுகின்றன. இன்னும் - இன்னும் அதிகமான நிலங்களை வாங்கி எல்லா காரியத்தையும் செய்து விட்டு பிறகு கர்த்தருடைய வருகை மிக சமீபமாக உள்ளது என்று பிரசங்கிக்கின்றன. ஆனால் ஊழியக் களத்தில் மிஷனரிகள் ஒரு முறை கூட கர்த்தரைக் குறித்து கேள்விப்பட்டிராத ஏழை மக்களுக்கு கர்த்தரை அளிக்க முயற்சித்து எவ்வளவாக பாடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். பாருங்கள்? என்னை நோக்கிப் பார்க்காதீர்கள்.  68. ஆனால் சாத்தான் அதை கவர்ச்சியூட்டுகின்ற ஒன்றாக ஆக்க முற்பட்டுக் கொண்டிருக்கிறான். அவன் சபைகளை விறைப்பாக்கி விடுகிறான். அதை ஒரு அறிவுப்பூர்வமான, நேர்த்தியான, புத்திக்கூர்மை வாய்ந்த சபையாக ஆக்குகிறான்.  69. நான் ஒரு குறிப்பிட்ட ஸ்தாபனத்தின் அருகில் வசிக்கின்றேன். அது அருமையான, நல்ல மக்களைக் கொண்டது என்று நான் நினைக்கின்றேன். ஒரு மனிதன்..... ஒரு வயதான மனிதன் ஜெபிக்கப்பட வெளியில் உட்கார்ந்து காத்துக்கொண்டிருந்தார். ஏனென்றால் இந்த போதகர் வியாதியஸ்தருக்காக ஜெபித்தல் என்பதன் பேரில் விசுவாசம் இல்லாத ஒருவராவார். அந்த சமயத்தில் நான் வீட்டில் இல்லை. அந்த வயதான மனிதன் காத்துக் கொண்டிருந்தார். அந்நேரத்தில் காற்று பலமாக வீசி மழை பெய்துக் கொண்டிருந்தது. அந்த பரிதாபத்திற்குரிய வயதான மனிதன் ஒரு பிச்சைக்காரன் போல இருந்தார். (அந்தக் காலில் அணிய போதிய அளவான காலணி இல்லை. அவருடைய மேலாடை மிகவும் கசங்கி கிழிந்த நிலையில் இருந்தது) ஆகவே .... அந்த மனிதன் மழையில் நனையாதவாறு இருக்க வெராண்டாவில் அமரும்படிக்கு கூட இந்த போதகர் அனுமதிக்கவில்லை . அப்பொழுது நான், நான், நாம் மேலே பரலோகத்திற்கு செல்கையில் அங்கே அறிவாளிகளுக்கு ஒரு விசேஷ இடமும், ஏழைகளுக்கும் மற்றவர்களுக்கும் வேறு இடம் இருக்கும் என்றால் எப்படி இருக்கும் என்று நான் எண்ணினேன். இப்பொழுது.  70. நியாயத்தீர்ப்பில் ஏமாற்றங்கள் அதிகமாக இருக்கும் என்று நான் நினைக்கின்றேன். ஏனென்றால் பவுல் எபிரெயர் 11ம் அதிகாரத்தில், “அவர்கள் செம்மறியாட்டுத் தோல்களையும் வெள்ளாட்டுத் தோல்களையும் போர்த்துக் கொண்டு திரிந்து குறைவையும் உபத்திரவத்தையும் அனுபவித்தார்கள்," என்று கூறியுள்ளதை நீங்கள் அறிவீர்கள். எலியா தன்னுடைய குகையில் எப்படி இருந்திருப்பான். இன்றைக்கு அவனை நம்முடைய வீட்டுக் கதவண்டை வருவதை நாம் பார்த்தால் எப்படியிருக்கும், அவன் முகம் முழுவதுமாக தாடி வளர்ந்து, அவனுடைய வழுக்கைத் தலை பளபளவென்று இருந்தது. அவனைச் சுற்றிலும் ஒரு செம்மறியாட்டுத் தோலை சுற்றிக்கொண்டு இருப்பான். நம்முடைய அறிவாளிகளான சகோதரர்கள் சிலர் அவனை வீட்டு முற்றத்தை விட்டே விரட்டி அடித்திருப்பார்கள். அது சரியே.  71. அந்தப் பழைய தோலுக்குள்ளாக என்ன அடித்துக் கொண்டிருந்தது என்பது உங்களுக்குத் தெரியாது. பாருங்கள்? ஒருக்கால் பரிசுத்த ஆவியானவர் அங்கே கூடாரமிட்டிருக்கக்கூடும். பாருங்கள்? நீங்கள் அவ்விதமாகச் செய்யவே கூடாது. நாம் சகோதரர்களாக இருக்க வேண்டும். ஒரு மனிதன் தவறில் இருந்தாலும் சரி. அவனை இன்னுமாக நல்ல விதத்தில் நடத்த வேண்டும். அவனிடம் அருமையாக நடந்துக் கொள்ளுங்கள். பரிசுத்த ஆவியை நீங்கள் பெறவில்லையெனில் ஏதோ தவறாக இருக்கின்றது. தம்மிடம் மோசமாக நடந்து கொண்டவர்களிடத்தில் இயேசு அருமையானவராக நடந்து கொண்டார். பாருங்கள்? நீங்கள் கிறிஸ்தவர்களாக இருந்து, முழுவதுமாக அன்பினால் நிறையப்பட்டு எந்த ஒரு மனித இனத்தவருக்கும், நிறத்தவருக்கும், வேறு கோட்பாடில் உள்ளவருக்கும் எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் உதவி செய்வதற்கு தயாராக இருங்கள். பாருங்கள்? நாம் அந்த விதமாகத் தான் இருக்க வேண்டும். அவர்கள் தான் கிறிஸ்தவர்கள். நாம் அந்த விதமாகத் தான் இருக்க வேண்டுமென்று கிறிஸ்து விரும்புவார். ஆகவே கிறிஸ்தவனாக இருக்க வேண்டுமென்றால் கிறிஸ்துவைப் போலவே இருத்தல் வேண்டும். 72. இப்பொழுது, சாத்தான் எல்லாவற்றையும் மிக கவர்ச்சியூட்டுகின்ற விதமாகச் செய்து மக்களை மறுபக்கத்திற்கு நடத்தி, “நீங்கள் இந்த கோட்பாட்டை விசுவாசிக்க வேண்டும். நீங்கள் இதை விசுவாசிக்கச்செய்தால் மாத்திரம் போதுமானதாகும். இந்த ஜெபத்தை நீங்கள் உச்சரித்து அந்த காரியத்தையெல்லாம் நிறுத்தி விட வேண்டும்” என்று கூறுகிறான். அது எப்படியுள்ளதென்றால் . . . மக்கள் தொடர்ந்து தங்கள் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக் கிறார்கள். தொடர்ந்து சூதாடிக் கொண்டிருக்கிறார்கள். புகைப்பிடித்துக் கொண்டிருக்கின்றனர், மது குடித்துக் கொண்டிருக்கின்றனர். பெண்கள் முன்பு செய்தது போலவே அவலட்சணமான ஆடைகளை அணிந்துக் கொண்டு, படக்காட்சிகளுக்கும், நடனங்களுக்கும் செல்கின்றார்கள். சீட்டு விளையாட்டுகளில் ஈடுபடுகிறார்கள். பாருங்கள்? ஆனால் அவர்கள் இன்னுமாக மகத்தான, பெரிய, அறிவாளிகளின் குழுவில் தொடர்ந்து இருக்கின்றனர். பாருங்கள், சாத்தான் அதை மிகக் கவர்ச்சிகரமானதாய்ச் செய்கின்றான். ஆனால் அது அவ்விதம் அல்ல.  73. காயீன் செலுத்தின பலியானது அது எவ்வளவு கவர்ச்சிகரமானதாகவும், அழகாகவும் இருந்ததென்று நீங்கள் கவனித்துப் பார்த்தீர்களா? நிலத்தின் கனிகளையும் மலர்களையும் கொண்டு அந்தப்பலி உண்டாக்கப் பட்டிருந்தது. ஆனால் ஆபேலின் பலியோ கவர்ச்சியூட்டுகிற விதமாக இல்லை. ஒரு சிறு ஆட்டுக்குட்டியை ஒரு சிறு (அந்நாட்களில் அவர்களிடம் சணற்கயிறு இல்லை என்று நான் நினைக்கின்றேன்), ஒருக்கால் அந்த ஆட்டின் கழுத்தில் ஒரு திராட்சைச் செடியின் கொடி சுற்றப்பட்டு இழுத்து வந்திருப்பான். அவன் அந்த ஆட்டுக்குட்டியை அங்கே மேலே கிடத்தி அதனுடைய சிறு தொண்டையை ஒரு பாறாங்கல்லைக் கொண்டு அந்த ஆடு இரத்தம் சிந்தி சாகும் வரைக்கும் கொத்தினான். அது காண்பதற்கு கவர்ச்சிகரமானதாக இல்லை . ஆனால் அது பாவத்திற்கு நீதி பதிலளித்தலாக இருந்தது.  74. ஆனால் தேவன் தம்முடைய வார்த்தையை எல்லா சமயத்திலும் நேர்மறையான ஐயத்திற்கிடமற்ற (Positive) ஒன்றாகவே கொண்டு வருகின்றார். அவர் அந்த வார்த்தையை மறுபடியுமாக சீரமைத்து வேறொன்றை கொண்டு வரவேண்டிய அவசியம் கிடையாது. அவர் தமது வார்த்தையை எல்லாகாலத்திற்கும் ஒத்ததான அதியுண்மையான வார்த்தையாகவே அமைத்திருக்கின்றார். ஆகவே வேதாகமம், “வெள்ளம் போல் சத்துரு வரும் போது தேவனுடைய ஆவியானவர் அதற்கு விரோதமாய்க் கொடியேற்றுவார் என்று கூறுகின்றது. பாருங்கள்? இப்பொழுது அது .... ஆகவே சத்துரு ஒரு வெள்ளம் போல வரும் பொழுது, தேவன் தம்முடைய மக்களின் பாதுகாப்பு அரணாக தேவனுடைய வார்த்தையைத் தான் வைத்திருக்கின்றார். ஆகவே அவர் வார்த்தையை, கொடியை அவனுக்கு விரோதமாக ஏற்றுகின்றார். ஆமென்.  75. இப்பொழுது, அவர் அதை மூன்று முறை ஏற்றியிருக்கின்றார். அதை நீங்கள் அறிவீர்களா? தேவன் எப்பொழுது மே மூன்றுகளில் கிரியை நடப்பிக்கின்றார். மூன்று தேவனுடைய பரிபூரண எண்ணாகும். தேவனுடைய பிழிவு (essence) உள்ளியல்பாகிய அன்பு, பரிசுத்த ஆவி, அண்டசராசரங்களை முழுவதுமாக நிரப்பி நித்தியத்திலிருந்து (ஒரு வரியானதாய் இருக்குமானால்) நித்தியம் வரைக்கும் மூடுகின்றது ..... எல்லா அன்பும், எல்லா வல்லமையும், உண்மையான வல்லமை. இப்பொழுது, அந்த அன்பானது ஃபீலியோ அன்பல்ல (அந்த கிரேக்க வார்த்தையானது “அன்பு” என்றுரைக்கிறது). ஆனால் .... ஐக்கிய அன்பு ; ஆனால் அது தேவ அன்பாகிய "அகபோ” அன்பாகும். அவரே தான் அந்த அந்த முழு அன்பின் ஊற்று. 76. ஆகவே இப்பொழுது அது எல்லாமே . . . பாலுணர்வினால் பிறந்த மனிதர்களாகிய தீர்க்கதரிசிகளை அவர் அபிஷேகித்தார். ஆனால் அது கிரியைச் செய்யவில்லை . பிறகு ஒரு சமயத்தில் தேவன் மனிதனானார். அந்த மனிதன் இயேசுவே. அவர் பிதாவின் வெளிப்படுத்தப்பட்ட சாயலாக இருந்தார். பாருங்கள்? வேறுவிதமாகக் கூறுவோமானால் இந்த முழு மகத்தான சுத்த அன்பானது, மகத்தான சுத்தமான வல்லமையானது, இந்த மகத்தான முழு காரியங்களும் அவருக்குள்ளாக வெளிப்பட்டது. ஆதலால் அவர் பாதாளத்திற்குச் சென்று நம்முடைய பரிசுத்தமாக்கப்படுதலுக் காகவும், நீதிமானாக்கப்படுதலுக்காகவும் மரித்து பிறகு நமக்குப் பரிசுத்த ஆவியை திரும்பவுமாக கொண்டு வருகின்றார். (பாருங்கள்?) ஆதலால் நாம் நீதிமான்களாக்கப் பட்டிருக்கின்றோம். கிறிஸ்து தேவனுடைய பரிசுத்தமாக்கப் படுதலாக இருந்தார். நீதிமானாக்கப்படுதல் நாமே, பரிசுத்தமாக்கப்படுதல் கிறிஸ்து, பிதாவானவர் தலையாவார். பாருங்கள்?  77. ஆதியிலே தேவனுடைய வார்த்தையானது, உரைக்கப் பட்ட வார்த்தை. ஏதேன் தோட்டத்திலே நம்மிடமாகப் பேசப்பட்டது. இரண்டாவது முறையாக அது மாம்சமாகி நம்மிடையே வாசம் செய்தது. மூன்றாவது முறையாக, பரிசுத்த ஆவி நமக்குள்ளாக வாசம் பண்ணிய போது, தேவன் மனிதனுக்குள்ளாக வந்த போது, அது நம்முடைய ஒரு பாகமானது, முதலில் வார்த்தையை உரைத்தது : சத்துரு அதை கிழித்துப்போட்டான். பிறகு வார்த்தை மாம்சமானது. அவர் சிலுவையிலறையப்பட்டார். ஆனால் இப்பொழுதோ (ஆமென்) வார்த்தையில் ஒரு வித்தியாசம் உள்ளது. வார்த்தையானது சபையாக ஆகியுள்ளது. சபை வார்த்தையாகும் தேவன்... தேவனின் முழுமை என்னவோ அதெல்லாம் கிறிஸ்துவுக்குள்ளாக ஊற்றப்பட்டது. கிறிஸ்துவின் முழுமை பரிசுத்த ஆவியாக சபைக்குள்ளாக ஊற்றப்பட்டது; இப்பொழுது சத்துரு ஒன்றைக்கொண்டிருக்கின்றான். பாருங்கள். அப்படியானால் அவன் இங்கே ஏதோ ஒன்றிடம் போரிடவில்லை.  78. அநேக மக்கள் எழுத்தை மாத்திரமே எடுத்துள்ளனர். “எழுத்து கொல்லுகிறது. ஆவியோ உயிர்ப்பிக்கிறது”. பாருங்கள். பாருங்கள்? ஆகவே அவர்கள் இந்த கோட் பாடுகளையும் இன்னும் மற்றவைகளையும் எடுத்துக் கொள்கின்றனர். அது இன்னுமாக கொல்கின்றது. ஆனால் நீங்கள் ஆவியை எடுக்கின்றீர்கள். அது தேவன் தாமே. அது தேவன் என்று நீங்கள் எப்படி அறிந்து கொள்வீர்கள்? ஏனென்றால் அவர் வார்த்தையை எடுத்து அதை வெளிப்படுத்துகின்றார். பாருங்கள்? ஆகவே அது தேவன் தாமே ஆகும். ஓ, என்னே, உரைக்கப்பட்ட வார்த்தை. பாருங்கள்? ஆம், ஐயா. ஓ, என்னே .  79. அங்கே முன்பு நோவாவின் நாட்களைக் குறித்து நான் நினைக்கின்றேன். இயேசு அதை இந்த நாளிற்கு ஒப்பிடுகின்றார். நோவாவின் நாட்களில் நடந்தது போல .... ஆதியாகமம் 6. அந்த வேத வசனத்தை மறுபடியும் இங்கே நான் எடுத்து விளக்குகிறேன். சற்று நீங்கள் கவனித்துப் பார்த்தீர்களா, தேவகுமாரர், ஆதாமிலிருந்து வந்த சேத்தின் குமாரர் வந்தனர். ஆதாமிலிருந்து தேவன், தேவனுடைய குமாரன் வந்தார். சேத்தின் குமாரன் ..... பிறகு மற்றுமொரு பிரிவு, சாத்தானின் பொய்யை விசுவாசித்த காயீனிடத்திலிருந்து வெளி வந்தது. சாத்தானின் குமாரர்.  80. இப்பொழுது, கானானிய ஸ்திரீகள் - சரியாக அழிவிற்கு முன்னர் கடைசி காலத்தில் - மிக அழகாக இருந்தனர். வயதான ஆண்களும் மற்றும் பெண்களுமாகிய நீங்கள் கடந்த சில வருடங்களாக பெண்களின் தோற்றத்தில் இருக்கின்ற வித்தியாசத்தை நீங்கள் கவனித்தீர்களா?  81. கடந்த நாளில் நான் பெர்ள் வைட் (PearlWhite) என்னும் பெண்ணைக் குறித்து நான் வாசித்துக் கொண்டிருந்தேன்... பழங்காலத்தவர்களாகிய நீங்கள் நம்முடைய தேசத்தில் இருந்த அழகான பெண்களில் இவள் தான் மிக அழகானவள் என்பதை நினைவில் கொண்டிருப்பீர்கள். ஸ்காட் ஜாக்சன் அவளைக் கத்தியால் குத்திக்கொன்றான். அவன் அவளுடைய அமைதியான காதலன். இரகசிய காதலன் .... அவள். அவளுடைய படமானது இன்றைக்கு அழகாக தெருவில் இருக்கும் பெண்களுக்கு நிகராக காணப்படவே முடியாது. ஆகவே நீங்கள் பாருங்கள், நாம் முடிவிற்கு அருகில் நெருங்கி வந்து கொண்டிருக்கின்றோம். பெண்கள் தங்களை மிக அழகாக வெளிகாட்டும் ஒரு - ஒரு ஆடையால் தங்களை சுற்றிக் கொள்கிறார்கள். பாருங்கள்? அது கானானிய காரியமாகும். நான் இப்பொழுது இங்கேயே நிறுத்தி சற்று கடந்து போனால் நலமாயிருக்கும் (பாருங்கள்?) ஏனென்றால் நான் மறுபடியுமாக அவைகளின் பேரில் பேசமாட்டேன் என்று கூறியுள்ளேன். 82. சரி, சாத்தான் தன்னுடைய அறிவுத்திறம் மிக்க பேராற்றல் வாய்ந்தவர்களை (இராட்சதர்களை) கொண்டிருக்கிறான். அந்நாட்களில் அங்கே தேசத்தில் இராட்சதர்கள் இருந்தனர் என்பதை நீங்கள் நினைவில் கொண்டிருக்கிறீர்கள். இராட்சதர்கள், அவன் அவர்களை இன்னுமாகக் கொண்டிருக்கின்றான். அவர்கள் அறிவுத்திறம் மிக்க இராட்சதர்கள். ஓ, என்னே, பாருங்கள்? "வெள்ளம் வரப்போகின்றது” என்று நோவா பேசின அந்த நாட்களில் பாருங்கள். அவர்கள் அதை விசுவாசிக்கவில்லை. ஆனால் இன்னுமாக அவர்கள் பக்திவாய்ந்தவர்களாக இருந்தனர். ஆனால் அவர்களோ- அந்த செய்தியானது அவர்களுடைய அறிவியலின் அளவுகோலின்படி அமைந்திருக்கவில்லை. அங்கே மேலே மழை என்பதே இல்லாதிருக்கையில் எப்படி இங்கே கீழே மழை வரும்; விஞ்ஞானத்தின்படி அது நிரூபிக்கப்படட்டும். அங்கே மேலே மழையே கிடையாது. வான்வெளியில் பறந்து சென்று உலகத்தை பதினேழு முறை சுற்றி வந்ததைக் குறித்து முன்பொரு நாள் அந்த ரஷிய நபர் கூறினது போலவே. அவன் தேவனை, பரிசுத்த ஆவியை, தூதர்களை அங்கே பார்க்கவில்லை என்று கூறினான். பரிதாபத்திற்குரிய ஒன்றுமே தெரியாத ஒரு மனிதன். ஆம், அவர்களுடைய விஞ்ஞானத்தைப் போன்றே தான் அவர்களும் உள்ளனர். அது .... அவர்கள் - அவர்கள் - அவர்கள் மிகவும் விஞ்ஞானப் பூர்வமாக பார்க்க ஆரம்பித்து ஒன்றும் அறியாத ஊமைகளைப் போல் மாறிவிடுகின்றனர். பாருங்கள்? என்னை மன்னியுங்கள். அவ்விதமாக நான் கூறியிருக்கக்கூடாது. நான் கூற விழைந்தது என்னவென்றால் அவர்கள் உண்மையான காரியங்களைக் காணத் தவறுகின்றனர். உங்களுக்குப் புரிகின்றதா? இப்பொழுது சரி.  83. ஆனால் இன்றைக்கு சாத்தான் தன்னுடைய அறிவாற்றல் வாய்ந்த இராட்சதர்களைக் கொண்டிருக்கின்றான். ஒவ்வொன்றையும் விளக்கிக் காண்பித்து உங்களை அதிலிருந்து விலகச் செய்ய அவர்களாலே முடியும். நிச்சயமாக. " அப்படிப்பட்ட ஒரு காரியமானது கிடையவே கிடையாது. ஹா ... தெய்வீக சுகமளித்தல் என்ற ஒன்று இருக்கின்றதா? ஹா, மனநோயுடையவர்கள்,” பாருங்கள்?  84. கர்த்தருடைய ஆவியானவர் . . . வேதாகமம், “தேவனுடைய வார்த்தையானது இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஊனையும் உருவக் குத்துகிறதாயும் இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது,'' என்று கூறுகின்றது. அது தேவனுடைய ஆவியாகும். இயேசு நின்று அவர்கள் எதைக் குறித்து சிந்தித்துக் கொண்டிருந்தனரோ அதை அவர் பகுத்தறிந்த போது அவர் - அவர் வார்த்தையாக இருந்தார்.  85. பிலிப்பு அவரிடம் வந்த போது - தன்னுடன் நாத்தான் வேலை அழைத்து வந்தபோது, அவர், “இதோ கபடமற்ற உத்தம இஸ்ரவேலன்” என்று கூறினார். அதற்கு அவன், “ரபீ, எப்பொழுதாவது என்னை பார்த்திருக்கிறீரா?” என்று கேட்டான். அவர், “பிலிப்பு உன்னை அழைக்கிறதற்கு முன்னே நீ மரத்தின் கீழிருக்கும் போது உன்னைக் கண்டேன்” என்று கூறினார். வியூ.  86. அது என்னவாயிருந்தது? அது வார்த்தையாகும். வார்த்தையானது கருக்கானதாயும் உருவக்குத்துகிறதாயும் .... கிணற்றண்டையிலே இருந்த ஸ்திரீ வந்த போது அவள் ... அவர் குடிப்பதற்கு தண்ணீர் கேட்ட போது அவள் “என்ன, இது வழக்கமல்லவே. இங்கே இனப் பிரிவு கொள்கை கடைப்பிடிக்கப்படுகிறது. நாங்கள் .... நீங்கள் யூதர்கள். நாங்கள் சமாரியர்” என்று கூறினாள். அதற்கு அவர் “நீ யாரிடத்தில் பேசிக் கொண்டிருக்கின்றாய் என்பதை நீ அறிந்திருந்தாயானால் நீயே என்னிடத்தில் கேட்டிருப்பாய்” என்றார். அந்த வார்த்தை . .... அவர் தம்முடைய தருணம் சரியாக அமைகின்றதைக் காணும் வரையிலும் உரையாடல் தொடர்ந்து நடந்தது. அந்நேரம் வந்த உடனே, “நீ போய் உன் புருஷனை இங்கே அழைத்துக் கொண்டு வா” என்றார். அதற்கு அவள், “எனக்குப் புருஷன் இல்லை ” என்றாள். அவர், “நீ உண்மையைச் சொன்னாய், ஐந்து புருஷர் உனக்கிருந்தார்கள். இப்பொழுது வாழ்ந்துக் கொண்டிருக்கும் அவனும் உனக்குப் புருஷனல்ல” என்றார்.  87. அவள், “ஐயா, நீர்தான் அந்த அபிஷேகம் பண்ணப்பட்ட கிறிஸ்து என்று நான் காண்கிறேன். நீர் ஒரு தீர்க்கதரிசி என்று காண்கிறேன்” என்றாள். மேலும் அவள், “இந்த அபிஷேகம் பண்ணப்பட்ட நபர் (அவர் வார்த்தையாக இருக்கப்போகின்றார்) வரும் போது இந்த காரியங்கள் எல்லாவற்றையும் எங்களுக்கு அறிவிப்பார்” என்று கூறினாள்.  88. அவர், “உன்னுடனே பேசுகிற நான் அவர்” என்று கூறினார். பாருங்கள், பாருங்கள்? அங்கே வார்த்தை இருந்தது. ஓ, அந்த வார்த்தை என்னே . ஆம் ஐயா, அது சரியே.  89. இப்பொழுது, பாருங்கள், வார்த்தையானது வார்த்தையாக இருக்கின்ற வரையிலும் அது விஞ்ஞானப் பூர்வமாக நிரூபிக்கப்படவேண்டிய அவசியமே இல்லை. அது விஞ்ஞானப் பூர்வமாக நிரூபிக்கப் படுமானால் அது வார்த்தையல்ல என்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. “அது விஞ்ஞானப் பூர்வமாக நிரூபிக்கப் படவில்லையெனில் அது உண்மையானதல்ல'' என்று நீங்கள் கூறலாம். அப்படியானால் உங்களுக்கு சிந்தை என்ற ஒன்று உள்ளதல்லவா ..... உங்களுக்கு சிந்தை என்கின்ற ஒன்று உள்ளது என்று நம்புகிறீர்களா? அப்படியானால் நீங்கள் சிந்தையைக் கொண்டிருக்கிறீர்கள் என்று விஞ்ஞானப் பூர்வமாக நிரூபியுங்கள் பார்க்கலாம். நீங்கள் அன்பு கூறுகிறீர்களா, எத்தனைப் பேர் அன்பு கூறுகிறீர்கள்? சரி, அங்கேயுள்ள ஏதாவதொரு மருந்துக் கடையில் அன்பை என்னால் வாங்க முடியுமா என்று நான் வியக்கின்றேன். ஏனென்றால் அது எனக்கு நிறைய தேவைப்படுகிறது. பாருங்கள்? அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடிய பொறுமை, சாந்தம், தயவு, பொறுமை மற்றும் விசுவாசம் போன்றவைகளான இவைகள் விஞ்ஞானப் பூர்வமாக நிரூபிக்கப்பட முடியாது. நாம் கொண்டிருக்கின்ற காரியங்களில் எப்பொழுதும் நீடித்திருக்கிறவைகள் இவை தான். அது சரி. அவை நீடித்திருக்கிறதுமன்றி அவை விஞ்ஞானப் பூர்வமாகவும் நிரூபிக்கப்படவில்லை. அது சரி.  90. இப்பொழுது, ஆனால் இன்றைக்கு.... நோவாவின் காலத்திலேயும் கூட அந்த விதமான மகத்தான இராட்சதர் இருந்தனர். இன்றைக்கும் கூட அந்தவிதமான மகத்தான அறிவாற்றலுள்ள இராட்சதர் (பெரிய மனிதர்) தேசத்தில் இருக்கின்றனர். அது சரியே. என்னால் ... இதைக்கூறுவதை நான் வெறுக்கிறேன். இங்கே அப்படிப்பட்ட ஒருவர் இருப்பாரானால் நான் உங்களைப் புண்படுத்தவில்லை என்று நான் நம்புகிறேன். ஆனால் அது சாத்தானுடைய உளவாளிகள் மறுபடியுமாக இருப்பதாகும். என்ன? நிச்சயமாக, அறிவாற்றலுள்ள பெரிய மனிதர் வந்து, மக்கள் கூக்குரலிட்டு "ஆமென்” என்று கூறுதலானது மற்றும் பலிபீடத்தண்டை சென்று உங்களுடைய பாவங்களுக்காக அழுவதானது வெறும் உணர்ச்சிவசப்படுதலே தான் என்று நிரூபிக்க விழைகின்றனர். பாருங்கள், அவர்கள் விஞ்ஞானப் பூர்வமான இராட்சதர்கள் (பெரிய மனிதர்) ஆவர்.  91. “அப்படி ஒரு காரியமானது கிடையவே கிடையாது”. இதோ அறிவாற்றல் மிகுந்த பெரிய மனிதர் (இராட்சதர்) கூறுவதாகும். உலர்ந்து போன கண்களைக் கொண்டு நடந்து வந்து, ஓ, “உம், நான் இந்தச் சபையைச் சேர்ந்துக் கொள்கிறேன் பிறகு நான் ...'' என்று சும்மா கூறுவார்கள். ஓ என்னே , “நல்லது, நான் இயேசு கிறிஸ்து தான் தேவனுடைய குமாரன் என்று விசுவாசிக்கின்றேன்” என்பார்கள். சாத்தானும் கூட அவ்விதமாக விசுவாசிக்கின்றான். ஆனால் அவன் இரட்சிக்கப் பட்டிருக்கின்றான் என்பதற்கான துளி அறிகுறி கூட காணப்படவில்லையே. பாருங்கள்? அதைக் காட்டிலும் இன்னும் அதிகம் தேவைப்படுகின்றது. ஒரு புதிய பிறப்பு தான் அதைச் செய்கின்றது. அது சரி ; அது சரி. ஆகவே அது .... பாருங்கள், அந்த வார்த்தை , புதிய பிறப்பு தான் அதைச் செய்கின்றது. சும்மா சொல்லிக் கொண்டிருப்பதல்ல, ஏதோ ஒன்று உன்னில் சம்பவித்து உன்னை வித்தியாசமானவனாகச் செய்கின்றது.  92. அதை இன்றிரவு நாம் பெற்றிருப்பதற்காக எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கின்றோம் அல்லவா. அந்த மறுபிறப்பை பெற்றுள்ளீர்கள் என்பதற்காக எத்தனைப் பேர் மகிழ்ச்சியா யிருக்கிறீர்கள்? ஓ, எனக்கு மிக்க மகிழ்ச்சி. நாம் ஒரு சிறிய அடியை எடுத்து வைப்போம். மற்ற எந்த ஒரு மனிதனைப் போலவே நானும் அநேகக் காரியங்களைக் கூறுகின்றேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். நான் எல்லாவற்றையும் குழப்பிக் கொள்வதும் உண்டு. ஆனால் சில நேரங்களில் கர்த்தர் சிலவற்றை எனக்கு அளிக்கின்றார். நான் - நான், அதை நான் மிகவுமாக விரும்புவதுண்டு. ஆகவே உங்களுக்குத் தெரியுமா, வாசிக்கும் போது ...... அவருடைய வார்த்தையை நான் வாசிக்கும் ஒவ்வொரு நேரமும் அப்படித்தான். ஏனென்றால் அது பரிபூரணமான ஒன்றாகும். ஆனால் சில சமயங்களில் அவர் நான் ஒன்றைக் கூறும்படிக்கு விடுகின்றார். அது எனக்கு மிக அருமையானதாக இருக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா. முன்னொரு நாளில் ஒன்றை நான் கூறும்படிக்குச் செய்தார். அது எனக்கு மிகவும் உதவிகரமானதாக இருந்தது. அது அளவிடற்கரிய மிக ஆழ்ந்த ஒன்றாக தொனிக்கின்றது. அதைக்கூறுவது அவபக்தியான ஒன்றல்ல, அல்லது அதைக்கூறுவது சரியானது அல்ல என்றல்ல.  93. அது என்னவென்று நான் உங்களுக்குக் கூறுகின்றேன். நான் நம்முடைய உத்தரவாதத்தைக் குறித்து சிந்தித்துக் கொண்டிருந்தேன். நமக்கு எப்படித் தெரியும் ... அநேக வித்தியாசமான காரியங்கள் உள்ளன. நீங்கள் தான் சரி என்று எப்படி உங்களுக்குத் தெரியும்? உலகத்தில் அநேக மதங்களும் மற்றும் காரியங்களும் உள்ளன. கவனியுங்கள். ஒரு காலத்தில் இஸ்ரவேல் எகிப்தில் தேவனுடைய ஜனங்களாக நானூறு வருடங்களாக அங்கே இருந்தனர். அவர்கள் அடிமைகளாக இருந்து சுற்றி சுற்றி விரட்டப்பட்டுக் கொண்டிருந்தனர். அப்பொழுது சத்துரு அங்கே வந்து ஒரு கூடை நிறைய புழுதி கலந்த ரொட்டிகளை எடுத்துத் தூக்கி வீசுவான். அவர்கள் அதை உண்ணத்தான் வேண்டும். அல்லது மரித்துத்தானாக வேண்டும். அவர்களுடைய இளம் பெண் பிள்ளைகள் கற்பழிக்கப்பட்டனர். அவர்களால் ஒன்றுமே செய்ய முடியவில்லை ; ஒன்றுமே முடியாதிருந்தது. அவர்களுடைய குமாரர்களைக் கொல்ல விரும்பினர் ; கொன்று போட்டனர்; அவ்வளவு தான். என்ன ஒரு பயங்கரமான காரியமாக அது இருந்தது.  94. ஆகவே அங்கே வனாந்தரத்திலிருந்து அக்கினி ஸ்தம்பத்துடனே ஒரு தீர்க்கதரிசி வந்தான். அந்த அக்கினி ஸ்தம்பம் அவனைப் பின் தொடர்கிறது என்று கூறினான். அவர்களுக்கு 'உங்களுக்கென ஒரு தேசத்தை தேவன் வைத்திருக்கின்றார்' என்கின்ற ஒரு செய்தியை அளிக்க அவன் வந்துகொண்டிருந்தான். அவர்கள் இந்த தீர்க்கதரிசிக்கு செவி கொடுத்தனர்.  95. வெளியே . . . தேவனுடைய கரத்தினாலே அவர்கள் எகிப்தை விட்டு வெளியே சென்றார்கள். காதேஸ்பர்னேயா என்கின்ற ஒரு இடத்திற்கு வந்தனர். காதேஸ்பர்னேயா நியாயத்தீர்ப்பின் சிங்காசனமாகும். உலகத்தில் ஒரு காலத்தில் அது ஒரு நியாயத்தீர்ப்பின் ஸ்தலமாக இருந்தது என்று என்னிடம் கூறப்பட்டது. அங்கே அவர்கள் மத்தியில் யோசுவா என்று பெயர் கொண்ட ஒரு மகத்தான போர் வீரன் இருந்தான். யோசுவா என்றால் “யெகோவா இரட்சகர்” அல்லது “யெகோவா இரட்சகர்” என்று அர்த்தம் என்று நான் நம்புகிறேன் : யோசுவா  96. இந்த மகத்தான போர்வீரன். அவன் என்ன செய்தான் என்று உங்களுக்குத் தெரியுமா? அவன் பிள்ளைகளுக்கு அந்த ஸ்தலத்தை காண்பிக்க விரும்பினான். அவர்களில் யாருமே அந்த இடத்திற்கு சென்றதில்லை. அந்த விதமான ஒரு தேசம் இருக்கிறதென்று அவர்களுக்கு உண்மையாகவே தெரியாதிருந்தது. அவர்கள் அதை அப்படியே விசுவாசித்தனர். அவ்வளவு தான். அவ்வளவுதான். இந்த தீர்க்கதரிசி கர்த்தருடைய வார்த்தையை அவர்களுக்குக் கொண்டு வந்தான். ஆம் வார்த்தை தீர்க்கதரிசி மூலமாகத் தான் வருகின்றது. உங்களுக்குப் புரிகின்றதா? ஆகவே அவர்கள்... ஆகவே அது... கர்த்தருடைய வார்த்தை இந்தத் தீர்க்கதரிசிக்கு வந்தது. அவன் அதை எடுத்து அவர்களிடமாக கொண்டு வந்து "அங்கே பாலும் தேனும் ஓடுகின்ற ஒரு தேசம் இருக்கின்றது. அதில் நீங்கள் உங்கள் சொந்த நிலங்களைக் கொண்டிருந்து உங்கள் பிள்ளைகளை வளர்த்து அவர்களைப் போஷித்து சமாதானத்தோடே வாழலாம்" என்று கூறினான். 97. ஆகவே அந்த மகத்தான காதேஸ்பர்னேயாவின், நியாயத்தீர்ப்பின் அருகில் யோசுவா சென்ற போது..... அந்த நிகழ்வுகள் நம் எல்லோருக்கும் தெரியும். அங்கே இஸ்ரவேலும் கூட தன்னுடைய நியாயத்தீர்ப்பை பெற்றுக்கொண்டது. ஆகவே யோசுவா யோர்தானைக் கடந்து வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்குள்ளாகச் சென்று, அந்த தேசம் உண்மையான ஒன்று என்பதற்கான அத்தாட்சியுடன் திரும்பி வந்தான். அவன் திராட்சைப் பழங்களைக் கொண்டு வந்தான். அம்மக்கள் அந்த திராட்சைப் பழத்தை ருசி பார்த்து அந்த தேசம் உண்மையானதே என்று அறிந்துக் கெள்வார்கள் என்று அவன் அதைக் கொண்டு வந்தான். நீங்கள் உங்கள் கையை நீட்டி அந்த திராட்சைகளை ருசி பார்க்கலாம் என்றான். என்ன, அந்த திராட்சைகுலைகள் மிகப் பெரியதாக இருந்ததால் இரண்டு பேர் அதைக்கட்டி தூக்கி வந்தனர். அவன் “ஓ, அந்த தேசம் உண்மையானதுதான்” என்று கூறினான். 98. பிறகு மக்கள் கடந்து சென்றனர். தங்களுக்கென வீடுகளைக் கட்டிக் கொண்டனர். தங்களுக்கென ஒரு சொந்த தேசத்தைக் கொண்டிருந்து சமாதானத்துடன் வாழ்ந்தனர். தேவனுடைய கரம் அவர்கள் மேல் இருந்து அவர்களை ஆசீர்வதித்து அந்த மகத்தான மனிதருக்கு .... பிறகு சிறிது காலம் கழித்து அவர்கள் வயது முதிர்ந்து மரித்தனர். அவர்கள் மரித்தனர். முதலாவதாக நடந்ததென்ன என்று உங்களுக்குத் தெரியுமா? மலையோரங்களெல்லாம் நீதிமான்கள், தீர்க்கதரிசிகள், ஞானிகள், ராஜாக்கள் மற்றும் நீதியுள்ளவர்களின் கல்லறைகள் மற்றும் கல்லறை நினைவுச் சின்னங்களால் நிரம்பின.  99. ஆகவே பிறகு மற்றுமொரு போர் வீரர் வந்தார். ஓ, அவர்களெல்லோருக்கும் அவர் இராஜாவாக இருந்தார். அவர் தான் வீரரான இயேசு (ஃப்ரென்ச் மக்கள் அவரை "ஜேசு” என்னு அழைப்பர்). யெகோவா. ஆகவே அவர் கீழே வந்து அவர்களை நேசித்தார். அவர் அவர்களிடம், “நீங்களெல்லாரும் வயது முதிர்ந்து மரிக்கவேண்டியவர்களாக இருக்கிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியுமல்லவா. ஆனால் மரணத்திற்குப் பிறகு ஒரு வாழ்வு இருக்கின்றது. மரணத்திற்குப் பிறகு ஒரு வாழ்க்கை . என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு : அப்படியில்லாதிருந்தால், நான் உங்களுக்குச் சொல்லியிருப்பேன்' " என்று கூறினார். பாருங்கள். அவர் என்ன செய்து கொண்டிருக்கின்றார்? வயதான மக்களான நமக்கு அங்கே ஒரு தேசம் உள்ளதென்று கூறுகின்றார் . . . நாம் நம்முடைய வாழ்க்கையை இங்கே முடித்த பிறகு அங்கே வேறொரு தேசம் இருக்கின்றது. அந்த அக்கினி ஸ்தம்பம் பின்பற்ற மாத்திரம் செய்யவில்லை. அவரே அந்த அக்கினி ஸ்தம்பமாக இருந்து .....? ...... பாருங்கள்? அவர் உடன்படிக்கையின் தூதனாக இருந்தார்.  100. ஆகவே இங்கே அவர் கூறினார். அவர், “ஒரு மனிதனின் வாழ்க்கை இங்கே முடிவுற்ற பிறகு, உங்கள் வாழ்க்கைக் காலத்தை முடித்து ..... இது வித்தின் காலமாகும். இந்த பூமிக்கு அப்பால் மனிதன் வாழத்தக்கதாக ஒரு தேசம் இருக்கின்றது” என்று கூறினார். அவர் தம்முடைய காதே ஸ்பர்னேயாவிற்கு வந்தார். அது கல்வாரி என்றழைக்கப்பட்டது. அங்கே அவர் நியாயத்தீர்ப்பு மாத்திரம் அடையவில்லை. ஆனால் அவர் உங்களுக்காகவும் எனக்காகவும் நியாயத்தீர்ப்படைந்தார். அவர் ஆதாமின் பாவங்களை எடுத்துக்கொண்டார். அங்கே அவர் நியாயத்தீர்ப்பில் நின்று, மரணமென்னும் யோர்தான் நதியைக் கடந்தார். ஆனால் மூன்றாம் நாளில் அவர் திரும்பி வந்தார். அவர் என்னவாக இருந்தார்? யோசுவாவைப் போல அத்தாட்சியை அவர் கொண்டு வந்தார். அந்த தேசம் உண்மையான ஒன்றாகும் என்னும் அத்தாட்சியைக் கொண்டு வந்தார். ஒரு மனிதன் மரணத்திற்குப் பிறகு வாழ்கின்றான். அல்லேலூயா. மனிதன் மரித்தபின் ஜீவிக்கின்றான்.  101. யோபு 14ல் “மனுஷன் செத்தபின் பிழைப்பானோ? அவன் மறுபடியும் பிழைப்பானோ? எனக்கு மாறுதல் எப்போது வருமென்று எனக்குக் குறிக்கப்பட்ட போராட்டத்தின் நாளெல்லாம் நான் காத்திருக்கிறேன். என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்று நான் அறிந்திருக்கிறேன்,'' என்று யோபு கூறுகிறான். அவன் தீர்க்கதரிசியாக இருந்தபடியினாலே நூற்றுக்கணக்கான வருடங்களுக்கு முன்னரே ... எலிகூ அவனிடம் பேசின போது - கொடிய பருக்களால் பீடிக்கப்பட்டு மிக மோசமான நிலையில், இந்த தீர்க்கதரிசியின் மீது தேவனுடைய ஆவி வந்தது.... தன்னுடைய ஜீவனைத் தவிர மற்ற எல்லாவற்றையும் அவன் இழந்து போயிருந்தான்.  102. அவன் அங்கே உட்கார்ந்திருந்த போது ஆவியானவர் அவன் மீது வந்தார். அப்பொழுது அவன் காலத்தினூடாக நான்காயிரம் ஆண்டுகளுக்குப்பால் நோக்கிப் பார்த்து கர்த்தருடைய வருகையைக் கண்டான். அப்பொழுது அவன் “என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்றும் கடைசி நாட்களில் அவர் பூமியின் மீது நிற்பார் என்றும் நான் அறிந்திருக்கிறேன். இந்த தோல் புழுக்கள் இந்த சரீரத்தை அழித்துப் போட்டாலும், நான் என் மாம்சத்தில் இருந்து தேவனைப் பார்ப்பேன் ; அவரை நானே பார்ப்பேன் ; அந்நிய கண்கள் அல்ல. என் கண்களே அவரைக் காணும்.” என்று கூறினான். 103. ஆகவே அவர் யோர்தானைக் கடந்து உலகத்திற்காக நியாயத்தீர்ப்பில் நின்றுவிட்டு பிறகு இங்கே நின்றுக் கொண்டிருந்தார். அவர் யோர்தானைக் கடந்து சென்று மறுபடியும் அவர் திரும்பி வந்தார். அவர்களில் சிலர் "அது ஒரு ஆவி” என்று கூறினர்.  104. “என்னை தொட்டுப் பாருங்கள். நீங்கள் காண்கிறபடி, எனக்கு மாம்சமும் எலும்புகளும் உண்டாயிருக்கிறது போல ஒரு ஆவிக்கு இராதே'' என்றார். அதன் பிறகு, அவர் "புசிக்கிறதற்கு ஏதாகிலும் இங்கே உண்டா ?" என்று கேட்டார். ஆம், அப்பொழுது அவர்கள் அவருக்கு மீனையும் அப்பத்தையும் கொடுத்தார்கள். அப்போது அவர் அதைப் புசித்தார். “ஒரு ஆவி இதைப் போல ஆகாரம் புசிக்காதே” என்றார். ஆமென்.  105. அப்பொழுது அவர் “பிள்ளைகளே, நீங்கள் சென்று இப்பொழுதே என்னுடைய நாமத்திலே ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள். உங்கள் பாவங்களை நீங்கள் அறிக்கை செய்ய வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நீங்கள் சென்று எருசலேம் நகரத்தில் காத்திருங்கள். நான் அதன் அச்சாரத்தை உங்களுக்கு அளிக்கப் போகிறேன். உங்கள் இரட்சிப்பின் அச்சாரத்தை நான் உங்களுக்கு அளிக்கப்போகிறேன்” என்று கூறினார். அச்சாரம் என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா. அது செலுத்தப்பட்ட கிரயமாகும். அது என்னவென்றால் ...... அது உண்மையாயிருக்கின்ற ஒன்றின் பாகத்தின் சிறிய ஒரு பகுதியாகும். "அதன் அச்சாரத்தை நான் உங்களுக்கு அளிக்கப் போகிறேன். அவர்கள் அது வருவதற்காக அந்த நாள் வரைக்கும் காத்திருந்தார்கள். அப்பொழுது தங்கள் இரட்சிப்பின் அச்சாரத்தை அவர்கள் பெற்றுக் கொண்டனர்.  106. இப்பொழுது, நண்பர்களே அதைக்குறித்து சற்று சிந்தித்துப் பாருங்கள். இனிமேல் ஒன்றும் கிடையாது. நாம் நம்முடைய பிரயாணத்தில் இருக்கின்றோம். எங்கே? வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு எதை வைத்துக் கொண்டு நாம் பிரயாணப்படுகிறோம்? அந்த அச்சாரத்துடன் நம்முடைய யோசுவா திரும்ப வந்துள்ளார். மகிமை. நாம் அந்த அச்சாரத்தைக் கொண்டிருக்கிறோம். ஏனெனில் நாம் ஒரு காலத்தில் பாவத்திலும் அக்கிரமங்களிலும் இருந்தோம், ஆனால் நாம் உலகத்தின் காரியங்களுக்கு மரித்தோம். நாம் அவர்களுக்குள்ளாக அடக்கம் பண்ணப்பட்டு அவருடைய உயிர்த்தெழுதலில் நாமும் அவருடனே உயிரோடெழுந்தோம். இப்பொழுது நாம் மரணத்திலிருந்து ஜீவனுக்குள்ளாக பிரவேசித்து அக்காரியங்களுக்கு மேலே இருக்கின்றோம். நாம் அந்த அச்சாரத்திற்குள்ளாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அவர் ஜீவிக்கின்றார் என்று எப்படி நீங்கள் அறிந்து கொள்வீர்கள்? ஆம், ஏற்கனவே அதிலிருந்து எழுப்பப்பட்டு அதற்கு மேலாக நாம் ஜீவித்துக் கொண்டிருக்கிறோம். உயிர்த்தெழுதலின் முதற்பலன்களை ருசித்தாயிற்று. அதுதான். அதைக் குறித்துத் தான் நான் பேசிக்கொண்டிருக்கிறேன்.  107. இப்பொழுது, ஆம் ஐயா, அந்த உளவாளிகள், அறிவுத்திறம் வாய்ந்த வேவுக்காரர்கள் வேவு பார்க்க வருகின்றனர். எதாவதொன்று இங்கே ஆரம்பிக்கும் போது அவர்கள் அதன் மேல் தங்கள் தாக்குதலை ஆரம்பித்து எல்லா பெண்களும் தீமையாக ஆடையணியச் செய்து, எல்லா ஆண்களும் வெறுக்கவும், பொய் சொல்லும்படியாகவும் செய்கின்றனர். ஓ, அதை அவர்கள் மேல் அப்படியே ஊற்றிவிட அவனால் முடியும் (உங்களால் காணமுடிகின்றதா?) ஏனெனில் அவர்களெல்லாரும் உண்மையாகவே இராட்சதர்கள். பெரியவர்கள். ஆனால் உங்களுக்கு ஒன்று தெரியுமா, ஏழையான மற்றும் தாழ்மையான தேவனுடைய பிள்ளைகளுக்கு அக்காரியங்களாவன மிக அப்பாற்பட்ட ஒன்றாகும். ஆம், அது சரியே.  108. இந்த மக்கள் பக்க வழியாக நுழைந்து அவர்களை அழைத்துச் சென்று விடுகின்றனர் என்று உங்களுக்குத் தெரியுமா. யூதாவின் புத்தகத்தில் யூதா கூறியிருப்பது உங்களுக்குத் தெரியுமா, "அவர்கள் பக்க வழியாய் நுழைந்திருக்கிறார்கள். பூர்வகால மனிதர் இந்த ஆக்கினைக் குள்ளாவார்கள்'' என்று யூதா கூறுகிறான். நீங்கள் இதை விசுவாசிக்கவில்லையெனில் அதைக் குறித்தென்ன? ஆமாம். “இந்த ஆக்கினைக்குள்ளாவார்களென்று பூர்வத்திலே எழுதியிருக்கிறதே.'' (ஆங்கில வேதாகமத்தில் முன் குறிக்கப்பட்டுள்ளது என உள்ளது - தமிழாக்கியோன்). என்ன? உள்ளே வருகின்றனர். இந்த அறிவுத்திறம் மிக்க இராட்சதர்கள் உள்ளே வருகின்றனர். ஊர்ந்து உள்ளே நுழைகின்றனர். " நமது தேவனுடைய கிருபையைக் காம விகாரத்துக்கேதுவாகப் புரட்டி (உங்களால் காணமுடிகிறதா?) மக்களின் விசுவாசத்தைப் புரட்டிப் போடுகிறார்கள்.” ஓ, என்னே. அவர்கள் என்ன செய்கின்றனர்?  109. அவர்கள் உள்ளே வந்த பின் என்ன செய்கின்றனர்? அவர்கள் உங்களை ... அவர்கள் சாத்தானின் வேவுக்காரர்களாயிருந்து உங்களிடம் “அற்புதங்களின் நாட்கள் கடந்து விட்டது. பரிசுத்த ஆவி என்கின்ற ஒன்று கிடையவே கிடையாது” என்று கூறுவர். ஓ, அவர்கள் அவ்விதமாகக் கூற மிகவும் காலம் கழித்து வந்துள்ளனர். நாம் மிஞ்சிய மேன்மையுடையதை அறிந்துள்ளோம். ஆமாம், உங்கள் சிறு இருதயம் ஆசீர்வதிக்கப்படுவதாக. நாம் மேன்மையுடையதை அறிந்துள்ளோம். ஆம், ஐயா.  110. ஆனால் அவர்கள் என்ன செய்தனர்? சாத்தான் செய்தது போல, வார்த்தையில் நீங்கள் வைத்துள்ள விசுவாசத்தை இழக்கும்படியாக அந்நபர்கள் முயற்சி செய்கின்றனர். அவர்கள் உங்களிடம் "அற்புதங்கள் நாட்கள் கடந்து விட்டன. அது வெறும் மன நிகழ்வே. அது ஒன்றுமே கிடையாது. எல்லா காரியங்களும் இங்கே தான் இருக்கின்றன'' என்று கூற முயற்சிக்கின்றனர். எல்லா மகிமையும் எல்லா நலமானதையும் நீங்கள் தள்ளிவிடும்படிக்கு மிகக்கூர்மையாக உங்களிடம் விளக்கவுரை அளிக்க முற்படுகின்றனர். "ஓ தெய்வீக சுகமளித்தல் என்கின்ற ஒன்று கிடையவே கிடையாது. ஓ-ஓ, தேவன் அவ்வித அர்த்தத்தில் கூறவில்லை ...." 111. சகோதரனே சற்று கவனியுங்கள், தேவன் அதைச் சபைக்கு எங்கே வாக்களித்திருக்கின்றார் என்று என்னால் உங்களுக்குக் காண்பிக்க முடியும், உங்களாலும் என்னிடமாகக் காண்பிக்க முடியும். ஆகவே இப்பொழுது, நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்றால் அவர் அந்த வாக்குத்தத்தத்தை எடுத்து விட்டார் என்று எங்காகிலும் கூறப்பட்டுள்ளதா என்று என்னிடமாகக் காண்பிக்க வேண்டியது மட்டுமே. சரியா. அவர் அவ்விதமாகச் செய்யவே மாட்டார். அவர் செய்யமாட்டார். அப்படி எதாவதொன்றுள்ளதென்றால் அவர் சிறிதளவு சேர்ப்பாரே தவிர அதிலிருந்து எடுத்துப் போடவே மாட்டார். பாருங்கள்? அவர் தம்முடைய வார்த்தைக்கு செய்தது போல அதனோடு இன்னும் அதிகமாக சேர்ப்பார். அவர் தம்முடைய வார்த்தையை உரைத்தார். அது தான் முடிவு.  112. பழைய ஏற்பாடும். பழைய உடன்படிக்கையும், பழைய பாவ நிவாரணபலியும் தன்னிடத்தில் சுகமளித்தலைக் கொண்டிருக்குமானால் அதைவிட இன்னும் அதிகமான இந்த காரியத்தில் எவ்வளவாக சுகமளித்தலானது இருக்கும்? நிச்சயமாக. ஆத்துமா, சரீரம் மற்றும் ஆவியின் மற்றும் எல்லாவற்றிற்கான சுகமளித்தலையும் கொண்டிருக்கின்றது ... அது .... ? . . . அது நித்திய ஜீவனைத் தனக்குள்ளாகக் கொண்டிருக்கின்றது. நிச்சயமாக அது கொண்டிருக்கின்றது. ஏனென்றால் வார்த்தையை விசுவாசிப்பதினாலே தேவனுடைய ஜீவனானது அவருடைய வார்த்தையில் வெளிப்படுத்தப் படுகின்றது.  113. இப்பொழுது அவர்கள் பக்க வழியாக ஊர்ந்து உள்ளே வருகின்றனர். சரியா. அவர்கள் உள்ளே வந்து உங்கள் விசுவாசத்தை கெடுத்துப் பாழாக்கிப் போடுகிறார்கள். அவர்கள் தங்கள் மெருகேற்றப்பட்ட வேதாகமக் கல்லூரி அறிவின் விளக்கங்களினாலே (பாருங்கள்?) உங்கள் விசுவாசத்தை எடுத்துப் போட முயற்சிக்கின்றார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா, அவர்கள் உள்ளே வந்து, “இதோ பார், அந்த விதமாக இப்பொழுது இருக்குமா? இயேசுவின் நாட்களின் இந்த இதே காரியத்தைச் செய்திருப்பார்களா என்று சற்று கற்பனை செய்து பார்? பார், இது சற்று முரண்பாடானதாக இருக்கிறதல்லவா..." என்று அறிவாராய்ச்சித் திறமையின் வாதத்தை முன் வைப்பார்கள்.  114. என்னால் இதைக் கற்பனை செய்து பார்க்க முடிகின்றது... பிலிப்பு நாத்தான்வேலுடன் வந்ததை நினைத்து அதற்கு நான் எப்போதும் நாடக உருவங்கொடுத்து கற்பனை செய்து பார்க்க முயற்சிப்பதுண்டு. நாத்தான்வேல் பிலிப்பை நோக்கி, “பிலிப்பே, வா, நாம் சற்று இதை விவாதிக்கலாம். இதோ பார், மேசியா வருகையில் அவர் வானத்தின் நடைக்கூடங்களின் வழியாக கீழே இறங்கி வருவார்..... அவர் எப்படி வருவாரென்று உனக்குத் தெரியுமா? அவர் கீழே இறங்கி மோசே பிரதிஷ்டை செய்திருந்த (அது மோசேயின் காலமாகும். அது சரி) தேவாலயத்தின் முற்றத்திற்கு நேராக நடந்து வருவார். அவர் அங்கே வந்து நிற்பார். அப்பொழுது நம்முடைய பிரதான ஆசாரியரான காய்பா அங்கே சென்று எல்லாவற்றையும் விளக்கமாக அறிந்து கொள்வார்” என்று கூறினான். பாருங்கள். இது வெறும் சொந்த மூளையைக் கொண்டு யோசித்தலே ஆகும். 115. ஆனால் எவ்விதமாக அவர் வந்தார்? அவர் வானத்தின் நடைக்கூடத்தின் வழியாக நடந்து வரவில்லை. ஆனால் யோர்தான் நதிகரையோரத்தின் சேற்றில் நடந்தார். அவர் நேராகக் காய்பாவிடம் செல்லவில்லை. ஆனால் ஆட்டுத் தோலைக் கொண்டு தன் உடம்பை மூடி மிகவும் மோசமாக தோற்றத்தில் காணப்பட்ட ஒரு பிரசங்கியிடம் தான் அவர் வந்தார். அப்பிரசங்கி அந்நாளில் ஸ்தாபனங்களை தாக்கிப் பிரசங்கித்துக்கொண்டிருந்தான். “புல்லின் கீழ் பதுங்கி இருக்கும் பாம்புக் குட்டிகளே! வருங்கோபத்துக்குத் தப்பித்துக் கொள்ள உங்களுக்கு வகைக்காட்டினவன் யார்?” என்று கூறினான். என்ன ஒரு வித்தியாசம் பாருங்கள். ஆனால் அவர், தாம் வருவதாகக் கூறியிருந்த வழியிலேயே சரியாக அவ்விதமாகவே வந்தார். ஆனால் அவர்களோ அதைச் சற்று மிகைப்படியாகப் படித்து விட்டனர். உங்களால் அதைக் காண முடிகின்றதா? அவர்களுடைய அறிவாற்றல் மிக்க இராட்சதர்கள் தான் அவர்களுக்கு வாசித்துக் காண்பித்துக் கொண்டிருக்கின்றனர். உங்களால் காணமுடிகின்றதா? ஆனால் தேவன் அதை உங்களுக்கு வாசித்துக் காண்பிக்க நீங்கள் அனுமதிக்க வேண்டும். பரிசுத்த ஆவியானவர் தான் அந்த வார்த்தையை எழுதினார். ஆகவே பரிசுத்த ஆவியானவரே வார்த்தையை வியாக்கியானம் செய்கின்றார் ..... ?.....  116. இப்பொழுது சரி, அவர்கள் தங்களுடைய நாட்களிலே நோவா தேவனுடைய வார்த்தையை அவிசுவாசிக்கச் செய்யும்படிக்கு அவனை சோதிக்க முயற்சித்தனர். நோவா பேழைக்குள்ளாகச் செல்வதை என்னால் காணமுடிகின்றது. அதை நீங்களும் அறிவீர்கள். நோவா பிரசங்கம் செய்தான். அவன் " மழை வரப்போகின்றது; அவ்வளவு தான். மழை கீழே வந்துக் கொண்டிருக்கின்றது என்று கூறினான்.  117. அந்த அறிவாளி இராட்சதர்களோ, “ஓ, என்ன அந்த அறிவு மங்கிப்போன பழமை நாகரீகம் கொண்ட வயதானவன் கூறுவதற்கு உங்கள் கவனத்தைச் செலுத்த வேண்டாம். அவனுக்கு மனநிலை சரியில்லை” என்றார்கள். பாருங்கள்? ஆனால் நோவாவோ தொடர்ந்து பிரசங்கித்து, நூற்றிருபது ஆண்டுகள் இந்த பேழையைச் செய்து முடித்தான்.  118. இப்பொழுது, என்னால் இதைக் கற்பனைச் செய்து பார்க்க முடிகிறது ..... தேவன் அவனிடம், 'சரி நோவா, இதற்கு எதிராக கடைசி பெரியவன், இராட்சதன் பேசப் போவதை நான் கேட்கப் போகிறேன் என்று நம்புகிறேன். நீ முன்னே சென்று பேழைக்குள்ளாக ஏறு” என்று தேவன் கூறின பிறகு, நோவா அங்கே சென்று உள்ளே நோக்கிப் பார்த்தான். அங்கே சிங்கம், சிறுத்தைகள் இரண்டிரண்டாக உள்ளே சென்றன. அப்பொழுது அங்கே குழுமியிருந்த எல்லா மக்களும் "ஓ உருளும் பரிசுத்தனே, நாற்றமெடுக்கின்ற உன்னுடைய மிருகங்களோடே மேலே ஏறிப்போ" என்று கூறுவதை என்னால் காண முடிகின்றது. உங்களுக்குப் புரிகின்றதா? “உனக்கு விருப்பமென்றால் அந்த வயதான துர்நாற்றம் வீசுகின்ற மிருகங்களோடே கூட நீயும் ஏறிப்போ ” என்று கூச்சலிட்டுக் கொண்டிருந்தனர். ஆனால் அவனோ அந்த துர்நாற்றம் வீசின மிருகங்களுடன் தங்கவில்லை. அவன் பேழையின் உச்சிக்கு செல்லும் வரைக்கும் அவன் ஏறிக்கொண்டிருந்தான். அப்பொழுது தேவன் கதவை அடைத்தார்.  119. ஆகவே என்ன நடந்ததென்று உங்களுக்குத் தெரியுமா? நோவாவின் விசுவாசம் சோதிக்கப்பட்டது. ஆம், அவன் சோதிக்கப்பட்டான் (பாருங்கள்?). ஏனென்றால் அவன் பிப்ரவரி மாதம் பதினேழாம் தேதியன்று பேழைக்குள்ளாகச் சென்றான் என்பது உங்களுக்குத் தெரியுமா? அதன் பிறகு என்ன சம்பவித்தது? ஏழு நாட்களுக்கு மழையே பெய்யவில்லை. முதலாம் நாள் கடந்து சென்றது. அப்பொழுது சில எல்லைக்கோட்டு விசுவாசிகள் அங்கே வந்து "உம், அந்த வயதான மனிதன் சரியாகத் தான் கூறியிருப்பான். நம்மால் கண்டு கொள்ள முடியாத ஏதோ ஒன்று அங்கே மேலே இருந்திருக்கும். ஒருக்கால் விஞ்ஞானம் சற்று உயரத்திற்குத் தான் பார்த்திருக்குமே தவிர அதற்கு மேலாக கண்டிருக்காது. ஆகவே நாம் .....? நாம் அங்கே சென்று அந்தக் கூட்டத்திற்கு சென்று அங்கே நின்று என்ன நடக்கிறது என்று சற்று பார்க்கலாம்” என்று கூறியிருப்பார்கள் என்று என்னால் கற்பனை செய்து பார்க்க முடிகின்றது.  120. ஓ, என்னே, அந்தக் காரியமானது இன்னும் மாறவில்லை . ஒரேயொரு தவறைக் காண்பிக்க அவர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அவர்கள் ஒன்றைக் கண்டுபிடித்ததைப் போலக் காணப்பட்டது. ஏனென்றால் முதல் நாள் அவர்கள் வந்து, "சரி, நாம் அங்கே மேலே ஏறுவோம். அவர் சொன்னது உண்மையென்றால் நாம் அப்பா நோவாவைக் கூப்பிட்டு அவரை கீழே வரச்சொல்லி ஒரு ஏணியை இறக்கச் செய்து நாம் ஏறும்படிக்கு ஏதுவாக இருக்கச் செய்வோம்” என்று கூறினார்கள். ஆகவே அந்த எல்லைக்கோடு விசுவாசிகள் எல்லோரும் அங்கே சுற்றி வந்து நின்றார்கள். ஏனைய மற்றவர்கள் குலுங்கி வாய்விட்டு சிரித்துக் கொண்டிருந்தனர். மற்றப்பிரிவினர் அங்கே சுற்றிக்கொண்டு நின்று நோவா கூறினதை எப்பொழுதாவது ஒரு முறை கேட்டு "ஒருக்கால் அப்படி இருக்கலாம் அல்லவா, ஆகவே நாம் இங்கே நிற்போம், பேழையின் கதவு மூடப்பட்டாலும் நம்மால் உள்ளே செல்ல முடியும். நோவா நல்ல உள்ளம் கொண்டவராவார். அவர் நம்மை உள்ளே அனுமதிப்பார்" என்று கூறினார்கள். ஆனால் உங்களுக்குத் தெரியுமா, தேவன் கதவை மூடிவிட்டார். நோவாவினால் ஒன்றுமே செய்ய முடியாது.  121. ஆகவே முதலாவதாக என்ன ஆயிற்று என்று உங்களுக்குத் தெரியும். முதலாவதாக நோவா, “எல்லோரும் இப்பொழுது ஆயத்தமாகுங்கள். பிள்ளைகளே இப்பொழுதே நீங்கள் எல்லோரும் ஆயத்தமாகுங்கள். நீங்கள் இப்பொழுது ஏதோ ஒன்று தட்டுகின்ற சத்தமொன்றைக் கேட்கப் போகிறீர்கள். நீங்கள் இது அதைக் குறித்து அறிந்திராத ஒன்றாக அது இருக்கப்போகின்றது. அந்த விதமான ஒரு சத்தத்தை நீங்கள் கேட்டதேயில்லை. ஒரு வெடி சத்தத்தை விட மிக மோசமான ஒன்றாக இது இருக்கப்போகின்றது. அது வானத்திலிருந்து மற்றும் அந்த பெரிய இருளிலிருந்து வெளியே வரப்போகின்றது. அது வருவதை நான் ஒரு தரிசனத்தில் கண்டேன். பெரிய ஊற்று போல தண்ணீர் பொழியப் போகின்றது' என்று கூறினான்.  122. முதலாம் நாளிலே சூரியன் மேலெழும்பி வந்தது. அப்பொழுது அவர்கள் “ஹே” என்றனர். பத்து மணி ஆயிற்று. பன்னிரண்டு மணி ஆயிற்று. மூன்று மணி ஆயிற்று ; இன்னும் மழை பெய்யவில்லை . "ஒரு நிமிடம் காத்திருக்கலாம்' என்று நோவா நினைத்தான்.  123. அப்பொழுது அவர்களெல்லாரும் "ஆவ், ஒன்றுமே நடக்கவில்லை. சரி, இன்னொரு நாள் வருகின்றதா என்று பார்க்கலாம்” என்றார்கள். இரண்டாவது நாள். “இக்காலை மழை வந்துவிடும். சிறிது தாமதமாகின்றது. அவ்வளவு தான் ; மழை வந்து விடும்”. பிறகு அடுத்த நாள் காலை ஒன்பது மணி, பத்துமணி, பதினொன்று மணி ஆயிற்று; மழை வரவேயில்லை. ஐந்து நாட்கள் கடந்து சென்றது. ஆறு நாட்களாயிற்று. அவன் மிகவும் அரும்பாடுபடவேண்டியதாயிற்று. அது சரி.  124. நாமும் கூட அரும்பாடுபட வேண்டியவர்களாக இருக்கிறோம். அஹ் - அஹ் - தேவன் எதையாவது ஒன்று கூறியிருந்தால், சரியாக அதனுடனே தரித்திருங்கள். அது, "அவருடைய தழும்புகளால் நாம் குணமாகிவிட்டோம்”. நாம் அவருடைய வார்த்தையை எடுத்துக்கொண்டோம். அரும்பாடு படுங்கள். தேவன் பரிசுத்த ஆவியை வாக்குத்தத்தம் செய்துள்ளார். பட்டி ராபின்சனைப் (Buddy Robinson) போல இருங்கள். அவர் கர்த்தாவே, நீர் எனக்குப் பரிசுத்த ஆவியைத் தரவில்லையெனில், நீர் திரும்ப வரும் போது சரியாக இங்கேயே ஒரு எலும்புக்குவியல் இருப்பதைக் காண்பீர்” என்று கூறினார். அதுதான் ஒரு நிலையை எடுத்தல். அரும்பாடு படுங்கள். "தேவன் கூறியுள்ளார்" என்று அப்படியே அங்கேயே தரித்து நில்லுங்கள். ஆபிரகாம் அந்தக் குழந்தைக்காக இருபத்தைந்து வருடம் அரும்பாடு பட்டான். பிறகு அது ....? ...... என்ன வித்தியாசம்? அது அப்படியே வருகின்றது. அது மாத்திரமே தேவைப்படுகின்றது. அவர் அதை வாக்குரைத்துள்ளார். அதனோடு அப்படியே தரித்து நில்லுங்கள்.  125. ஆகவே ஏழு நாட்களுக்குப் பிறகு, அக்காலையில் அவன் எழுந்து "ஓ, ஓ, அது வந்துவிட்டது பாருங்கள்” என்று கூறினான். ஓ, என்னவிதமான ஒரு உள்ளுணர்ச்சியை அது பிறப்பித்திருக்கும். என்னே, உங்களால் அதைக் கற்பனை செய்துப் பார்க்க முடிகின்றதா? அந்த வாக்குத்தத்தமானது அருகாமையில் உள்ளது என்று அவன் அறிந்திருந்தான். ஏன்? அவனால் அதை உணர முடிந்தது .... அந்த நாளின் காலை வேளையிலே எந்த ஒன்றுமே நடப்பதற்கு முன்னதாகவே, அது தூரத்தில் வந்து கொண்டிருந்ததை அவனால் கேட்க முடிந்தது. அது ஒரு பெருஞ்சத்தமாயிருந்தது. அங்கே மேல்புறத்தில் ஒரு ஜன்னல் இருந்தது. அது ஒருக்கால் இருபது அடிக்கு அப்பால் அல்லது அதற்கு அதிகமாகவோ குறைவாகவோ இருக்கலாம். அங்கே கீழே மிகவும் சூடான, தீய்ந்து கருகிப்போன நிலத்தின் மேல் அந்த அனல் கொண்ட சூரியன் மேலே நின்று கொண்டிருந்தது என்பது உங்களுக்குத் தெரியும். அந்த ... ஒரு நீண்ட காலத்திற்கு மழையே பெய்யாமல் காய்ந்து போன நிலையில் தூரத்தில் உள்ள மழையிலிருந்து ஒரு குளிர்ந்த காற்று வருவதை உங்களால் உணர முடியும் என்று உங்களுக்குத் தெரியுமா? அது வருகின்றது என்று அவன் அறிந்திருந்தான்.  126. இன்றைக்கு உலகில் இருக்கின்ற காரியம் அதுதான். மக்கள் சுற்றுமுற்றும் பார்த்து “ஓ, அணுகுண்டு இருக்கின்றது. ஆகவே அதிலிருந்து தப்பிக்க ஒரு பாதுகாப்பான இடத்தை நாங்கள் கட்டப்போகின்றோம். நாங்கள் இதைச் செய்யப் போகின்றோம் ....'' என்று கூறுகின்றனர். முட்டாள்தனம், முட்டாள்தனமான ஒன்றாகும். நீங்கள் எதைக்குறித்து மிகவும் பயந்து போயுள்ளீர்கள்?  127. நோவா, “நான் .... அவர் என்னிடம் கூறினவிதமாகவே அது இருப்பதை என்னால் உணர முடிகின்றது” என்று கூறினான். அதே - அதே விதமாகத்தான் இப்போதும் உள்ளது. அவர் என்னிடமாகக் கூறினதைப் போலவே நிலைமையானது காணப்படுகின்றது. ஆம், அது என்னை மாற்றினது. கர்த்தருடைய வருகையானது மிக அருகாமையில் இருப்பதால் அதிலிருந்து வருகின்ற தென்றல் காற்றை நம்மால் உணர முடிகின்றது. ஆகவே அவருடைய வருகை மிக அருகாமையில் உள்ளது என்று நான் விசுவாசிக்கின்றேன். அதுதான் மக்களை பயமுறுத்துகின்றது. ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்படுவதற்காக, அந்த ரேப்சருக்காக (Rapture) சபையை ஆயத்தப்படவும் அது செய்கின்றது. நிச்சயமாக, நாம் கடைசி காலத்தில் இருக்கின்றோம். நிச்சயமாக.  128. ஆகவே முதலாவது காரியமாக என்ன நடந்ததென்று உங்களுக்குத் தெரியுமா, மழை பெய்யத்துவங்கினது. வெள்ளம் மேலெழும்பத் துவங்கினது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நாளும், தெருக்களெல்லாம் தண்ணீரினால் நிறைந்தது. அவ்வளவாக வெள்ளம் வந்து இருந்த மலைகளிலே பெரிய மலையை விட இருபது அடி உயரத்திற்குத் தண்ணீர் நிறைந்து எழும்பி நின்றது. அந்த எல்லா அவிசுவாசிகளெல்லோரும், அவர்களெல்லாரும் தண்ணீரில் மாண்டு போனார்கள். நோவா சரியாக அதனூடாக மேலாக மிதந்துச் சென்றான். ஆமென், ஆமென், ஆமாம்.  129. ஓ, தேவனுடைய வார்த்தையை விசுவாசியுங்கள். அது எவ்வளவாக விஞ்ஞானப்பூர்வமாக இல்லாதிருந்தாலும் சரி, அதை விசுவாசியுங்கள். ஏனென்றால் அது நிரூபிக்கப்பட முடியுமானால், அது இன்னுமாக விசுவாசம் என்கின்ற ஒன்றாக இருக்க முடியாது. அது நிரூபிக்கப்பட முடியாதிருக்கையிலே நீங்கள் அதை விசுவாசித்தாக வேண்டும். நீங்கள் - நீங்கள் அதை விசுவாசித்துத் தானாக வேண்டும். இல்லையெனில் அது உங்களை வார்த்தையினுள்ளும், மற்றும் தேவனுடைய வார்த்தையினுள்ளும் கொண்டிருக்கின்ற விசுவாசத்தை நீங்கள் இழக்கும்படிக்குச் செய்துவிடும். ஆனால் அவர்களோ தங்கள் அறிவுப்பூர்வமான பங்கை எடுத்து அதைச் செய்ய விரும்புகின்றனர். அது சரியே. அவர்கள், “இதுதான் அது” என்று கூறுகின்றனர்.  130. நாம்..... சாதாரணமானவர்களுடனும், மாம்சத்தோடும், இரத்தத்தோடுமல்ல, ஆனால் ஆவிகளின் சேனைகளின் வல்லமைகளோடு நமக்குப் போராட்டம் உண்டு என்று வேதாகமம் கூறுகின்றது. நான் சற்று முன்னர் கூறினதுபோல, நாம் இப்பொழுது அவருடனே உயிரோடெழுந்துள்ளோம் என்பதை நீங்கள் உணர்வீர்களானால் எப்படியிருக்கும். நீங்கள் மரிக்கப் போவதில்லை. நீங்கள் ஏற்கனவே மரித்து விட்டீர்கள். பாருங்கள்? ஆனால் நம்முடைய ஆவி அவருக்குள்ளாக உயிரோடிருக்கின்றது. ஆகவே மாம்சக்காரியங்களோடும், விஞ்ஞானகாரியங்களோடும் நமக்குப் போராட்டம் இல்லை; நாம் ஆவியின் சேனையின் வல்லமை யோடுதான் நாம் மல்யுத்தப் போரிட்டுக் கொண்டிருக்கிறோம் (Wrestle என்பதற்கான தமிழ் அர்த்தம்-தமிழாக்கியோன், போராடிக் கொண்டிருக்கிறோம்.  131. மல்யுத்த வீரர்கள் கால்விரல் பகுதியையும் மற்றவைகளையும் உடைக்க பயிற்சி எடுப்பார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். ஆனால் உண்மையாகவே கால்விரல் பகுதியை உடைக்கமாட்டார்கள். இல்லை, இப்பொழுது ஒரு மல்யுத்த வீரன் தன்னுடைய கை நகங்களில் வர்ணம் தீட்டிக் கொண்டு, குறுங்கால் சட்டையை அணிந்து கொண்டு அதைச் சுற்றிலும் எல்லாவிதமான பொன்னால் செய்யப்பட்ட செப் மாலைப் போன்று மணி உருண்டைகளை போட்டுக் கொண்டு வெளியே வருவானா என்று சற்றுக் கற்பனை செய்து பாருங்கள். பார்ப்பதற்கு ஒரு அழகான மல்யுத்த வீரனாக காட்சியளிப்பான். ஆனால் அவையெல்லாம் அறிவாற்றல் திறத்தால் ஆனதாகும். அந்த வீரனுக்குள்ளாக மறைந்துள்ள அந்த பலம் இவனுக்கு இல்லாதிருக்குமானால், எதிராளியானவன் இவனுடைய கால் பெருவிரலை பிடித்து அப்படியே இழுத்து கீழே போட்டு விடுவான். (அல்லேலூயா), அவனைச் சுற்றிலும் இருக்கும் அறிவாற்றல் உருண்டை மணிகள் எந்த ஒரு வித்தியாசத்தையும் உண்டாக்காது. ஆகவே பிசாசின் பிடியை உடைத்தெறியத் தக்கதாக உள்ளுக்குள்ளாக மறைந்திருக்கும் பரிசுத்த ஆவியின் வல்லமை (அல்லேலூயா) இல்லாதிருக்குமானால் நம்முடைய எல்லா அறிவாற்றல் திறத்தினால் ஒரு காரியமும் ஆகாது.  132. ஆகவே நாம் ஒரு மல்யுத்த போட்டியில் இருக்கின்றோம். ஒரு அழகான ஆடையணிந்த அறிவாற்றல் திறம் வாய்ந்த உளவியல் திறமையைக் கொண்டு நாம் மல்யுத்த போராட்டம் செய்யவில்லை. ஆனால் எந்த நேரத்திலும் பிசாசின் பிடியை உடைத்தெரியக்கூடிய தேவனுடைய வல்லமையையும் வாக்குத்தத்தத்தையும் கொண்டுதான் நாம் போரிட்டுக் கொண்டிருக்கிறோம். நம்முடைய கர்த்தராகிய இயேசு, இம்மானுவேலாக, தேவன் தம்மைத்தாமே நம் மத்தியில் மாம்சத்தில் இருந்தபோது அதை நிரூபித்தார். அவர் சாத்தானை சந்தித்தபோது, சாத்தான் வார்த்தையினால் தோற்கடிக்கப்படுவான் என்பதை காண்பிப்பதற்காக, ஒவ்வொரு முறையும் சாத்தான் தம்மிடம் வந்த போது “எழுதியிருக்கிறதே, எழுதியிருக்கிறதே” என்று கூறினார். ஓ, அவர்" எழுதியிருக்கிறதே'' என்பதைக் கொண்டு எத்தனை முறை அவர் சாத்தானின் வல்லமையை முறித்ததாக அவர் கூறியுள்ளவைகளைக் குறித்து நான் இங்கே வைத்திருக்கும் குறிப்பின் பேரில் அதிக நேரம் பேசி (ஓ, என்னே) தேவனுடைய வார்த்தையினால் தன்னை அரணிட்டு அதன் பின்னால் பாதுகாப்பாக இருந்து, அந்த வார்த்தையின் பின்னால் தரித்திருக்கும் ஒரு நபர் “அப்படி எழுதியிருக்கிறது. அவனைக் கட்டவிழ்க்கிறேன். சாத்தானே, நான் கட்டவிழ்க்கிறேன். ஏனெனில் அப்படி எழுதியிருக்கிறது,'' என்று சத்தமிடலாம் என்பதைக் காண்பிப்பது எவ்வளவு அருமையானதாக இருக்கும். "நீங்கள் என்னிலும் என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால் நீங்கள் கேட்டுக் கொள்வதெதுவோ .... அது சரியானதாகும். அது தவறானதாக இருக்க முடியாது ; அது சரியானதாக இருக்கத்தான் வேண்டும்.  133. ஆம். சிம்சோன் கொண்டிருந்த அந்த மறைந்திருந்த வலிமை நமக்கு தேவையாயிருக்கிறது. யாரோ ஒருவர் தன்னுடைய அறிவாற்றலைக் கொண்டு சிம்சோனின் படத்தை வரைந்திருந்ததை நான் கண்டிருக்கிறேன். அவனுடைய தோள்கள் வரையப்பட்டிருந்த விதமாவது, நேர்மையாகக் கூறப்போனால், உடற்கட்டுப் போட்டி மேடைகளில் கூட அப்படிப்பட்ட தோள்களைக் கொண்டு ஒரு மனிதன் நின்றிருப்பான் என்று எனக்கு நம்பிக்கையே இல்லை. அந்த விதமான ஒரு தோள்களை நான் கண்டதேயில்லை. அந்த படத்தைப் பார்க்கும் போது எப்படி ஒரு மனிதன் ஒரு சிங்கத்தை எடுத்து அதை இரண்டாக கிழிப்பான் என்பதும், ஒரு பட்டணத்து வாசலை அப்படியே தூக்கி அதை எடுத்துக் கொண்டு மலையின் மேல் நடப்பான் என்பதும் அல்லது அதைப் போன்ற காரியத்தைச் செய்வான் என்பதும் மறைபொருளான ஒன்றாகக் காணப்படவில்லை. அந்த விதமான உருவம் கொண்ட ஒரு மனிதன் அதைச் செய்வான் என்பது ஒரு பெரிய இரகசியமல்ல. 134. ஆனால் சிம்சோனோ ஒரு மிகச் சிறிய, சுருட்டை முடி கொண்ட குள்ள மனிதனாவான். ஒரு அம்மாவின் சிறு செல்லப் பிள்ளையைப் போல அவன் காணப்பட்டான். அவனுடைய சுருளான முடி அப்படியே தொங்கிக் கொண்டிருந்தது. ஆனால் அந்த பலம் எங்கே இருந்தது. அது எங்கே இருந்தது.... எப்படி அவனால் ஒரு கழுதையின் தாடை எலும்பை எடுத்து ஒன்றரை அங்குலம் அளவு தடிப்பான திண்மை கொண்ட அந்த தலைக்கவசங்களை அடிக்க முடிந்தது என்று அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. அந்த உலர்ந்த தாடை எலும்பானது ஒரே அடியில் சுக்கு நூறாக, தூள் தூளாக உடைந்து போயிருக்கும். ஆனால் அந்தத் தாடை எலும்பைக் கொண்டு பெலிஸ்தியர்களை வலது புறமும் இடது புறமும் மாறி மாறி அடித்தான். அது என்னவாயிருந்தது? அது மறைந்திருந்த வல்லமையாகும். பாருங்கள்? அது எங்கேயிருந்ததென்று தெரியவே இல்லை. பாருங்கள்?  135. இன்றைக்குச் சபைக்கும் கூட அதுதான் உள்ளது. நீங்கள் மறைந்திருக்கும் வல்லமையைக் கொண்டிருக்கிறீர்கள் (ஓ, என்னே) அது அவர்களை அரணிட்டு பாதுகாத்துக் கொண்டிருக்கின்றது. அது என்ன? அதுதான் வார்த்தை. தேவனுடைய கிருபையானது தம்முடைய மக்களுக்குள்ளாக வெளிப்படுதலாகும்......? ....... ஆம், ஐயா, ஆம், நீங்கள் அந்த மறைந்திருக்கும் வல்லமையைக் கொண்டிருக்க வில்லையெனில் . . . இன்றைக்கு நாம் பள்ளிகளில் படித்துக் கொண்டிருக்கிறோம். நாம் நம்முடைய பிள்ளைகளை வேதாகமப் பள்ளிகளுக்கு அனுப்புகிறோம். அது சரிதான் (அஹ்-அஹ்), அதற்கெதிராக ஒன்றுமே இல்லை . அது தான் காரியம் என்றல்ல.  136. உங்களுக்குத் தெரியுமா, அன்றிரவு பேதுரு, ஓ, அவன் எவ்வளவாக .... அந்த பிரதான ஆசாரியன் (அவனுடைய வேலைக்காரன்) வந்த போது, பேதுரு தன்னுடைய பட்டயத்தை வெளியே எடுத்தான். அவனால் வாட் போரிட முடிந்தது. அவன் தன்னுடைய பட்டயத்தை எடுத்து அவனுடைய காதை வெட்டிப் போட்டான். ஆம், அவன் தன்னுடைய கரங்களில் அதிக பலத்தைக் கொண்டிருந்தான். ஆனால் ஆவிக்குரிய தைரியம் என்னும் நிலைக்கு அவன் வந்த போது, அந்த தைரியத்தை அவன் கொண்டிருக்கவில்லை. அவன் கர்த்தருடைய வார்த்தையை மறுதலித்தான். ஏனென்றால் கிறிஸ்துதான் தேவனுடைய வார்த்தையின் வெளிப்பாடாக இருந்தார். ஆகவே அவன் அதை மறுதலித்தான்.  137. ஓ, அதைக்குறித்து சில நிமிடங்களுக்குப் பேச எனக்கு எவ்வளவு விருப்பமாக உள்ளது தெரியுமா, எப்படி அந்த வார்த்தை ...... அவர் “என் பிதாவின் கிரியைகளை நான் செய்யாதிருந்தால், நீங்கள் என்னை விசுவாசிக்க வேண்டாம். ஆனால் நான் பிதாவின் கிரியைகளைச் செய்தேனானால், அந்தக் கிரியைகளை விசுவாசியுங்கள்” என்று கூறினார். அவர், ''மாயக்காரரே, வானத்தின் அடையாளங்களை உங்களால் காண முடிகின்றதே, (மழை வரப்போகிறது என்கின்றவைகள் போன்றவை என்று உங்களுக்குத் தெரியும்) ஆனால் காலங்களின் அடையாளங்களை நிதானிக்க உங்களால் கூடாதா? ஏனென்றால் ... நீங்கள் என்னை அறிந்திருந்தால் என்னுடைய நாளையும் அறிந்திருப்பீர்கள்" என்று கூறினார். உங்களால் அதை அறிந்து கொள்ள முடிகின்றதா?  138. ஆகவே பேதுரு அவை எல்லாவற்றையும் கண்டிருந்தான். அவை எல்லாவற்றையும் கேட்டிருந்தான். ஒரு ஆசாரியனின் வேலைக்காரனுடைய ..... வெட்டின அந்த கரத்தைக் கொண்டு அவன் பட்டயத்தை நன்கு பிரயோகிக்கும் ஒருவனாக இருந்திருப்பான். ஏனென்றால் அவன் ஆசாரியனுடைய வேலைக்காரனாகவும், காவலாளியாகவும் இருந்தான். அவன் அங்கே வந்து தன்னுடைய ஈட்டியை உபயோகப்படுத்தக் கூடியவனாக இருந்தான். ஆனால், சாத்தான் இல்லை- இல்லை பேதுரு ஈட்டியை மிக நன்றாக உபயோகப்படுத்தக் கூடியவனாக இருந்திருப்பான். அல்லது தன்னுடைய ஈட்டியைக் காட்டிலும் தன்னுடைய பட்டயத்தை நன்கு உபயோகப்படுத்துகிறவனாக இருந்தான். அவன் பட்டயத்தால் அவனுடைய காதை வெட்டிப் போட்டான். 139. ஆனால் அவனுக்குள்ளாக அந்த உண்மையான தைரியம் உள்ளதா என்கின்ற ஒரு சூழ்நிலை வந்த போது, அவனுக்கு அந்த தைரியமானது இல்லாதிருந்தது. இல்லவே இல்லை, அவன் அந்த தைரியத்தைக் கொண்டிருக்கவில்லை. அவன் வார்த்தையானது .... கண்ட போது ..... இப்பொழுது, நான் பக்தி வசப்படப் போகிறேன். அந்த வார்த்தையானது மாம்சமாக்கப்பட்டதை அவன் கண்டு, அது அங்கே இருக்கப்போவதன் நாள் அது தான் என்பதை அவன் அறிந்து, தாம் செய்யப்போவதாக தேவன் கூறியிருந்து சரியாக அதை நிரூபித்ததை அவன் கண்ட போது தன்னுடைய எல்லா அறிவாற்றல் திறத்தின் பலம், மற்றும் தன்னுடைய சரீர பலத்தைக் கொண்டு அவன் ....  140. இன்றைக்கும் அதே விதமாகத் தான் உள்ளது. மனிதர் நேராக நடந்து சென்று ஒரு புத்தகத்தில் தங்களுடைய பெயர்களைச் சேர்த்துக்கொள்கின்றனர். ஒரு போதகரின் கைகளைக் குலுக்குகின்ற அவர்கள் ..... பணியில் இருக்கின்ற போது எஜமான் வந்து அவர்களுக்கு சிறிது மதுவைத் தருவாரெனில் அப்பொழுது அவர்கள் அப்படியே ஏற்றுக் கொள்கின்றனர். தங்கள் வேலையைக் குறித்து அவர்கள் பயந்து போயுள்ளனர். 141. உங்கள் சபையில் உங்கள் தசமபாகங்களை செலுத்துகின்ற காரியத்தில், அதை செலுத்த பயப்படுகிறீர்கள். ஏனென்றால் நீங்கள் பட்டினியாயிருந்து மரித்து விடுவீர்களோ என்று பயப்படுகிறீர்கள். தேவன் உங்களைப் பார்த்துக் கொள்வதாக வாக்குத்தத்தம் செய்துள்ளாரே, அப்படியிருந்தும் பயப்படுகிறீர்கள். இந்த எல்லா காரியங்களும்.  142. நீங்கள் சபைக்கு வருகையில் பரிசுத்த ஆவி மக்களின் மத்தியில் இறங்கும் போது, ஏதோ ஒன்று உங்கள் இருதயத்தில், "இதுதான் அது, அதுதான் வார்த்தையாகும்” என்று கூறுகின்றது. நீங்கள் ஞானஸ்நானத்தையும் மற்றும் வார்த்தையிலுள்ள எல்லாமும் தெளிவாக வெளிக்கொணரப்படும் போது, அதை எடுக்க நீங்கள் பயப்படுகிறீர்கள். எதனாலே? துணிந்து நிற்கத்தக்கதான ஆவிக்குரிய தைரியம், தைரியம் உங்களிடத்தில் இல்லாதிருக்கிறது.  143. ஆகவே அவனிடத்தில் அந்த தைரியம் இல்லாதிருந்தது. அவனால் பட்டயத்தைக் கொண்டு போரிட முடிந்தது. அவனால், “இப்பொழுது, நான் இன்னினதைச் சேர்ந்தவன் ; என்னால் இதைப் புரிந்து கொள்ள முடியும்” என்று கூற முடிந்தது. ஆனால் என்னவாக இருக்க வேண்டுமோ அந்தவிதமாக அது இருக்கவில்லை. ஆனால் அந்த வார்த்தை மாம்சத்தில் வெளிப்பட்டதை அவன் கண்டு, பிறகு அதை அவன் மறுதலித்து, ஓ, அது எவ்வளவு பயங்கரமான ஒன்றாக இருந்ததல்லவா.  144. ஆனால், சகோதரனே, பெந்தெகொஸ்தேவிற்குப் பிறகு அவன் மேலே சென்று தேவனுடைய முழு சர்வாயுத வர்க்கத்தையும் தரித்துக் கொண்டான். இப்பொழுது அந்த அதே ஆளைப் பாருங்கள். கிறிஸ்துவின் மேல் விசுவாசம் கொண்ட விசுவாசியாக, ஒவ்வொரு மணி நேரமும் அவரைப் பின்பற்றினான். அவன் வார்த்தையை எழுத்தாக மாத்திரம் கண்டிருந்தான் ; அது வெளிப்படுத்தப்பட்டதை மாத்திரம் அவன் கண்டிருந்தான். ஆனால் இப்பொழுதோ அது அவனுக்குள்ளாக இருந்தது. மகிமை அல்லேலூயா. வார்த்தையானது ... தேவனுடைய கொழுந்து விட்டு எரிகின்ற வார்த்தையானது அவனுடைய சொந்த மாம்சத்திற்குள் எரிந்து கொண்டிருந்தது. அது என்னவாயிருந்தது? தேவன் அவனுக்குள்ளாக இருத்தல். ஆமென், தேவன், மகிமையின் நம்பிக்கையாகிய கிறிஸ்து மாம்சமான ஒரு மனிதனுக்குள்ளாக வெளிப்படுத்தப்பட்டார். தாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பதை தேவன் அறிந்திருந்தார். ஆம், ஐயா, இதை, அதை அல்லது மற்றதை நம்பி காரியத்தை செய்ய வேண்டும் என்றிருக்கவில்லை. ஆனால் தேவன் தாமே காரியத்தைச் செய்தார். ஆமென். 145. அப்பொழுது அங்கே அவன் எழுந்து நின்று, “இஸ்ரவேலரே, யூதேயாவில் வாசம் பண்ணுகிற ஜனங்களே, என் சத்தத்தைக் கேளுங்கள். நீங்கள் நினைக்கிறபடி இவர்கள் வெறிக்கொண்டவர்களல்ல. தீர்க்கதரிசியாகிய யோவேலினாலே உரைக்கப்பட்டது தான் இதுவாகும். கடைசி நாட்களில் நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன். அப்பொழுது உங்கள் குமாரரும் குமாரத்திகளும் ... என்னுடைய ஊழியக்ககாரர்மேலும், என்னுடைய ஊழியக்காரிகளின் மேலும் என் ஆவியை ஊற்றுவேன் என்று தேவன் உரைத்திருக்கிறார்," என்று கூறினான். ஆமென். இந்தக் காரியமானது அறிவாற்றல் திறத்தால் விளைந்த ஒன்றல்ல. அவன் ஏதோ ஒன்றைக் கொண்டிருந்தான்.  146. அது என்னவாயிருந்தது? அவன் தேவனுடைய முழு சர்வாயுத வர்க்கத்தைத் தரித்திருந்தான். ஒரு பிரதான ஆசாரியனுடைய ஆடையைத் தரித்திருக்கவில்லை ; ஆனால் தனக்குள்ளாக ஏதோ ஒன்றை அவன் கொண்டிருந்தான். தேவனுடைய சர்வாயுதக் கவசமானது உள்ளே இருக்கின்ற ஒன்றாகும். அறிவாற்றல் திறத்தின் கண்களால் காண முடியாதபடிக்கு மறைந்திருக்கின்ற தேவனுடைய வல்லமை அதுவாகும். “உங்களால் காண முடிந்ததா?" என்று இயேசு கேட்கவில்லை. அவர், “நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா?" என்று கேட்டார். ஆமென். ஓ, என்னே.  147. நான் எப்பொழுதுமே ஒரு சிறு தேவையில்லாத தவறைச் செய்வதுண்டு. ஒருக்கால்... அதைச் செய்ய வேண்டும் என்று நான் விழையவில்லை. ஆனால் ஒருக்கால் நான் அதைத் தவறாகக் கூறியிருக்க வேண்டும். ஆனால் நான் எப்பொழுதுமே கூறினதுண்டு. ... பேதுரு, “இது தான் அது” என்று கூறினான். ஆகவே அது இந்தக்காரியமாக இல்லாவிடில், அது வரும் வரைக்கும் நான் இதைக் காத்துக்கொள்ள விரும்புகிறேன். நான் - நான் - நான் இதை விசுவாசிக்கின்றேன். ஆனாலும் அது ஒரு சிறு பாவியாகிய என்னை எடுத்து ஏதோ ஒன்றை எனக்குச் செய்தது. என்னுடைய இருதயத்திலே கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கின்ற ஒரு அன்பை அது உள்ளே வைத்தது. ஓ, என்னே, ஆகவே இப்பொழுது, அது கடந்த முப்பது வருடங்களாக எரிந்து கொண்டிருக்கின்றது. இன்னும் தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கின்றது. அந்த இடத்தை நான் சென்று கொண்டிருக்கின்ற எல்லா நேர காலத்திலும் அது இன்னும் அதிகப் பிரகாசமாக எரிந்துக் கொண்டிருக்கின்றது. ஆம், ஐயா, ஓ, என்னே, அவருடைய வார்த்தை .  148. பேதுரு அங்கே நின்று அவரை மறுதலித்துக்கொண்டிருந்தான். ஆனால் சில நாட்கள் கழித்து அங்கே முழு மக்கள் கூட்டத்திற்கு முன்னால் நின்று கொண்டிருந்தான். ஏன்? அப்பொழுது அவன் ஒரு பட்டயமாகிய அறிவாற்றல் திறத்தைக் கொண்டிருந்தான். “கடந்த வருடம் இன்னும் பத்து இலட்சம் பேர்களைக் கொண்டிருந்தோம். எங்கள் ஸ்தாபனத்தில் அதிகம் பேர்களைச் சேர்த்தேர்ம்.'' ஆனால் இப்பொழுதோ ஏதோ ஒன்றை தனக்குள்ளாகக் கொண்டிருந்தான். ஓ, என்னே, அவன் முழு சர்வாயுதவர்க்கத்தை உடுத்திக் கொண்டான். ஓ, என்னே, எவ்வளவு அற்புதமானது. ஓ, என்னே . அது சரி.  149. ஓ, அப்பொழுது தேவன் தம்முடைய சேனையில் தம்மை முன்நிலைப்படுத்தி காட்சியில் நிறுத்திக் கொள்கின்றார். நீங்கள் அதை விசுவாசிக்கின்றீர்களா? இப்பொழுது தேவன், “நான் அவர்களிடம் வார்த்தையை அனுப்பினேன். ஏவாள் அதை விசுவாசித்து, சரியாக அதற்கு மேலாக நடந்து சென்று விட்டாள். நான் அதை மாம்சத்தில் வெளிப்படுத்தினேன். அவர்களோ அதைச் சிலுவையிலறைந்து விட்டனர். "நடக்கும் காரியங்களைப் பார்த்துப் பார்த்து எனக்குப் போதுமென்றாகி விட்டது. ஆகவே நானே வருகின்றேன்” என்று கூறினார். ஆகவே இங்கே அவர் வந்துள்ளார்; தேவன் உனக்குள்ளாக இருக்கின்றார். தேவன் நமக்கு மேலாக அக்கினி ஸ்தம்பமாக இருக்கின்றார். இயேசு கிறிஸ்துவுக்குள்ளாக தேவன் நம்மோடு இருக்கின்றார். பரிசுத்த ஆவியாக தேவன் நமக்குள்ளாக இருக்கின்றார். அது என்ன? அந்த அதே வார்த்தை, அதே தேவன். ஆமென். 150. இனிமேல் எந்த ஒன்றையும் நம்புவது என்கின்ற காரியமானது இனிமேல் கிடையாது. தேவன் தாமே வருகின்றார். இந்த வேலையானது ஒரு மனித அளவு பணியாகும். ஆகவே அவர் அதை அப்படியே கீழே கொண்டு வந்தார். அவர் தாமே இறங்கி வந்தார். "இந்தக் காரியத்தில் அவர்கள் எந்த ஒரு பங்கும் வகிக்கத் தேவையில்லை . அவர்கள் என்னிடத்தில் அப்படியே சரணடையட்டும். அப்பொழுது நான் அவர்களுக்குள்ளாக நடப்பேன். அவர்களுக்குள்ளாக பேசுவேன், அவர்களுக்குள்ளாக உரைப்பேன், அவர்களுக்குள்ளாக கிரியை செய்வேன்.'' ஓ, என்னே , அது தான் காரியம். "நான் அந்த - நான் அந்த வேலையைச் செய்வேன். அவர்கள் தங்களைத் தாழ்த்த மாத்திரம் செய்யட்டும். அவர்கள் தங்களை வெறுமையாக்கட்டும். அப்பொழுது நான் அங்கே வெளியே இருக்கின்ற என் சத்துருவை அவர்கள் மூலமாக அடித்து வீழ்த்துவேனாக. அது தான் காரியம். அந்த சத்துருவுக்கு ஈடு கொடுக்க முடியாது. உங்களால் முடியாது. ஆனால் தேவன் அதைச் செய்ய நீங்கள் விட்டு விட்டு, வார்த்தையை உங்களுக்குள்ளாக எடுத்துக் கொள்வீர்களானால், அப்பொழுது எல்லாக் காரியமும் பார்த்துக் கொள்ளப்படும்.  151. இப்பொழுது, தேவன் தம்முடைய சேனையை அரணிட்டு பாதுகாப்பாகவைத்துள்ளார். எதைக் கொண்டு அரணிட்டுள்ளார்? தீர்க்கதரிசிகள், அப்போஸ்தலர்கள், போதகர்கள், மேய்ப்பர்களின் வடிவத்தில் தாமே அரணிப்பாகிப் பாதுகாக்கின்றார். அவர் என்ன செய்தார்? தேவன் என்ன செய்து கொண்டிருந்தார்? கவனியுங்கள். சபையில் உள்ள அந்த அலுவல்கள் எதற்காக அமைக்கப் பட்டுள்ளதென்று எப்பொழுதாவது நீங்கள் சிந்தித்துப் பார்த்ததுண்டா? அது தேவனுடைய யுத்த ஆடையாகும். உள்ளே இருக்கின்ற ஆடையாகும். அப்போஸ்தலன், தீர்க்கதரிசி, ஞானதிருஷ்டிக்காரன், சாத்தான் அதை அடையும் முன்னரே அதை முன்னதாகக் கண்டு அதை உரைத்ததாகும். அது என்ன? தேவன் தம்முடைய சபையில் யுத்த உடையுடுத்தி தயாராக இருத்தல் ஆகும். இந்த அலுவல்களெல்லாம் தேவனுடைய ஆடைகளாகும். மேய்ப்பர்கள், போதகர்கள், சுவிசேஷகர்கள், ஆகிய அந்த அலுவல்களை நீங்கள் காண்கையில், அது என்னவாயிருக்கின்றது? அது தேவனுடைய யுத்த ஆடையாகும். தேவனுடைய பிரசன்னமாகும். அது மனிதனினூடாக கிரியை செய்யும் தேவனுடைய ஆவியாகும்.  152. ஆகவே இந்த அலுவல் இந்த வார்த்தையின் எந்த ஒன்றையும் மறுதலிக்குமானால் அப்பொழுது அது தேவனால் உடுத்திவிக்கப்பட்ட ஒன்றல்ல. இல்லை, அப்படி இருக்காது. அது ஆட்டின் தோல் போர்த்திய ஓநாயாகும். அந்த ஆளை நன்கு கவனியுங்கள். அவனைக் குறித்து ஜாக்கிரதையாயிருங்கள்.  153. ஆனால் வார்த்தை என்ன கூறுகின்றதோ அதை அப்படியே அவன் எடுப்பானானால், நினைவில் கொள்ளுங்கள். அது தேவனாகும். ஏனென்றால் அவர் தாமே தம்முடைய வார்த்தையை பேசுகின்றார். பாருங்கள்? ஆனால் அவர், "நல்லது, அப்படி அல்ல. ..” என்பாரானால், ஓ, ஓ, ஓ, ஓ, ஓ, ஓ, என்னே, ஆடுகளே, தொடர்ந்து சென்று கொண்டே இருங்கள். தொடர்ந்து சென்று கொண்டே இரு.  154. அதற்காக அவர் என்ன செய்தார்? இப்பொழுது, அந்த மனிதன் மறுபடியும் உயிரோடெழுந்து விட்டார் என்று உலகமானது நம்பாது. முதல் முறையாக கேள்விப்பட்ட உடனேயே அவர்கள் நம்பவில்லை. அவர்கள், “என்ன அப்படியா, அவர்கள் அவரைத் திருடிக் கொண்டு சென்று விட்டார்கள். அவருடைய சீஷர்கள் வந்து அவரை திருடிச் சென்று விட்டனர்'' என்று கூறினர். ஆம். அவர்கள் அதை நம்பவில்லை. அவர்கள் அதைக் கண்டிருந்தனர். ஆகவே தேவன் "சரி, ஒரு நிமிடம் பொறுங்கள், நானே வந்து அதற்குள்ளாகவே நான் இருக்கப் போகிறேன். நான் என் சத்துருவை என் சபையில் சந்திக்கப் போகிறேன். அவனை அவனுடைய சொந்த இடத்திலேயே வீழ்த்தப்போகிறேன்” என்று கூறினார். 155. ஒரு முறை அதைச் செய்திருக்கின்றார். ஆமாம், அவர் என்ன செய்தார் என்று உங்களுக்குத் தெரியுமா? அவர் மோசேயை எடுத்து அவனை நேராக சத்துருவின் முன்னிலையிலேயே நிறுத்தினார். மோசேக்கு சத்துருவே போஷித்து, அவனை வளர்த்தெடுக்கும்படிக்குச் செய்தார். அதன் பிறகு மோசே சென்று அந்த சத்துருவை தோற்கடித்து அவனைச் செங்கடலின் ஆழத்திற்கு அமிழ்த்திப் போட்டான். பாருங்கள்? அது சரி, நிச்சயமாக அவர் செய்வார். அப்படியானால், "ஓ, முடிவற்ற தேவனே” என்று மாத்திரமே நினைக்க வேண்டும். ஆகவே எதைக்குறித்தும் நாம் கவலையடையத் தேவையில்லை. அவர் தேவன். அப்படியே முன்னே சென்று அவரை விசுவாசிக்க மாத்திரம் செய்யுங்கள். நிச்சயமாக.  156. இப்பொழுது அவர் செய்வதாகக் கூறினார் - என்ன செய்வதாக அவர் கூறினார்? அவர் வந்து தம்மைத்தாமே தம்முடைய சபையில் உறுதிப்படுத்துவார். அவர்கள் அவருடைய உயிர்த்தெழுதலை அவருடைய கிரியைகளினாலே உறுதிப்படுத்துவார்கள். பாருங்கள்? ஆமாம், யோவான் 14 : 12. அது சரி என்று நான் நினைக்கின்றேன். ஆம், யோவான் 14: 12, இயேசு, “என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கின்ற கிரியைகளைத் தானும் செய்வான்” என்று கூறினார்.  157. அது என்னவென்று உங்களால் காணமுடிகின்றதா? இப்பொழுது நீங்கள், “நான் விசுவாசிக்கின்றேன்” என்று கூறலாம். அது ஒரு வார்த்தை மாத்திரமே. ஆனால் நீங்கள் இது தான் அது என்று உண்மையாகவே விசுவாசிப்பீர்களானால் ; அவர் தான் அந்த வார்த்தையானால் நீங்கள் அந்த முழு வார்த்தையையும் விசுவாசித்துத்தான் ஆக வேண்டும். “என்னுடையது எல்லாவற்றையும் விசுவாசிக்கிறவன் (ஒரு பகுதியை மாத்திரம் விசுவாசிப்பதல்ல, என்னுடையது எல்லாவற்றையும் விசுவாசி), அப்பொழுது நான் செய்கின்ற கிரியைகளைத் தானும் செய்வான், “ஏனெனில் அவர் இன்னுமாக அந்த அதே வார்த்தையாக இருக்கின்றார் அது அந்த அதே வார்த்தையாக இருக்குமானால், அது அந்த அதே கிரியைகளைச் செய்யும்.  158. இங்கே இன்றைக்கு இருக்கின்ற அந்த அதே பரிசுத்த ஆவி, ஆதியிலே இருந்த அதே வார்த்தையாக இருக்க வில்லையென்றால் . . . அந்த அதே வார்த்தையாக இருக்கின்றதென்றால், அதே கிரியைகளையே அது செய்யும். அதன் காரணமாகத் தான் இயேசு, “என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கின்ற காரியங்களைத் தானும் செய்வான்” என்று கூறினார். ஓ, அதன் பேரில் சிறிது பேசலாம் என்று எனக்கு விருப்பம். ஆனால் நேரம் மிகவும் கடந்து கொண்டிருக்கின்றது. ஏன்? அந்த அதே வார்த்தை , அதே கிரியைகள் (பாருங்கள்?). ஏனெனில் இயேசு தேவனுடைய கிரியைகளாயிருந்தார், அதை நாம் அறிவோம்.  159. மத்தேயு 28 கூறுகின்றது. “நான் என் சேனையுடன் இருப்பேன். அது மாத்திரம் அல்ல, நான் என் சேனையில் செல்வேன்,” ஓ, என்னே, அதைக் குறித்துச் சிந்தித்துப் பாருங்கள். நம்முடைய மகத்தான போர்வீரர். மகத்தான வெற்றி சிறந்தவர். நம்முடன் இருக்கின்ற வார்த்தை படைத்தளபதி, ஜெனரல் (General) நமக்குள்ளாக இருக்கின்றார். ஒவ்வொரு பிசாசின் மேலும், ஒவ்வொரு வியாதியின் மேலும், மரணத்தையும், நரகத்தையும், பாதாளத்தையும் வென்ற மாம்சமான வார்த்தையானவர் தாமே நமக்குள்ளாக இருக்கின்றார். நம்முடன் இருக்கின்றார். எவ்வளவு காலமாக இருப்பார்? “உலகத்தின் முடிவுபரியந்தம்”, சரியாகக் கூடவே இருப்பார். அதைக்குறித்து சற்று சிந்தித்துப் பாருங்கள். யுத்தத்தை முன்னின்று நடத்துகின்ற அவரே தான்.  160. சத்துருவின் ஒவ்வொரு வல்லமையும் தோற்கடிக்கப்பட்டு விட்டது. அவர் இங்கே பூமியில் இருந்த போது வார்த்தையை எடுத்து சாத்தான் கொண்டிருந்த ஒவ்வொன்றின் மேலும் அவர் வெற்றி சிறந்தார். அவர் மரணத்தை ஜெயித்தார். அவர் பாதாளத்தை ஜெயித்தார். அவர் கல்லறையை ஜெயித்தார். இந்த மகத்தான போர் வீரர், வார்த்தையாக இருந்த அந்தப் போர்வீரர், அவர் மூன்றாம் நாளிலே உயிரோடெழுந்தார். அவர் இப்பொழுது திரும்ப வந்து தம்முடைய சபையில் ஜீவித்துக் கொண்டிருக்கின்றார். வார்த்தையாகிய அந்த அதே போர் வீரர் நமக்குள்ளாக இருந்து, தாமே நமக்குள்ளாக ஜீவித்து, அவருடைய உயிர்த்தெழுதலின் மற்றும் அவருடைய வருகையின் அடையாளங்களையும் அழுத்தமாக உறுதிப்படுத்திக் கொண்டிருக்கின்றார். ஆமென். இன்றைக்கு இந்த சாயங்கால வேளையிலே, அந்த மகத்தான சாயங்கால வெளிச்சங்கள் பிரகாசிக்க ஆரம்பிக்கையில் அவர் அதைச் செய்துக் கொண்டிருக்கின்றார். அல்லேலூயா. மகத்தான போர் வீரராகிய கிறிஸ்து ஏற்கெனவே ஜெயங்கொண்டு விட்டார். அவரைப் பின்பற்றுவதைத் தவிர, வேறு எந்த ஒரு காரியத்தையும் நான் செய்ய வேண்டியதேயில்லை. ஆமென். ஒவ்வொரு வல்லமையும் முறியடிக்கப்பட்டு விட்டது. அது எனக்கு மிகவும் பிடிக்கும் (இங்கு அநேக வேத வசனங்களைக் கூறாமல் அப்படியே கடந்து விடுகிறேன்)  161. அதைக் குறித்து சற்று சிந்தித்துப் பார்க்கின்றேன். சில வருடங்களுக்கு முன்னர் ஒரு சமயம் இங்கே ஜெஃபர்சன்வில்லில் உள்ள ப்ஃபாவு (Pfau) எண்ணெய் நிறுவனம் தீப்பிடித்துக் கொண்டது. அப்பொழுது ஒரு சில சிறிய தீயணைப்பு வண்டிகள் அங்கே இருந்தன. அவர்கள் அங்கே ஒரு சிறு பையன் குழாயைப் பிடித்துக் கொண்டு நின்றது போல நின்று கொண்டிருந்தனர். அப்பொழுது தீயணைப்புப் படைத் தலைவன் அங்கே சுற்றுமுற்றம் ஓடி "அஹ், அங்கே சற்று தண்ணீ ரைப் பீய்ச்சி அடி (ஒலி நாடாவில் காலியிடம் - ஆசி) இங்கே அடி” என்று கூறிக்கொண்டிருந்தார். அந்த தலைவன் ஒரு சுருட்டைத் தன் வாயில் வைத்து கொம்பில்லாத டெக்சாஸ் மானைப் போல மென்று கொண்டிருந்தார். இந்த இடத்திற்கு ஓடி, 'இந்த பகுதியில் சற்று தண்ணீர் பாய்ச்சு' என்று கூறிக்கொண்டிருந்தார். அங்கே இருந்த எல்லா தீயணைப்புப் படை வீரர்களும் “சரி ஐயா, மதிப்பிற்குரிய ஐயா” என்று நீளமான குழாயை எடுத்துக் கொண்டு அங்கே ஓடினார்கள். (சகோதரன் பிரன்ஹாம் விவரிக்கின்றார்-ஆசி) அங்கே தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது.  162. சிறிது நேரம் கழித்து அவர்கள் லூயிவில் தீயணைப்புப் படையை அழைத்தார்கள். அங்கே அந்த பாலத்தைக் கடந்து ஒரு பெரிய தீயணைப்பு வண்டி வந்தது. அங்கே அந்த வண்டி வந்து நின்றவுடனேயே மடிக்கும் வசதி கொண்ட ஒரு ஏணியை எடுத்தார்கள். அங்கே நின்று கொண்டிருந்த .... அந்த ஏணி நிறுத்தி வைக்கப்பட்டபோது, தீயணைப்புப்படை தலைவன் மேலேயே ஏறிச் சென்றார். அவர் ஜன்னல் அருகே சென்று அங்கேயே நின்றுவிடவில்லை. “இங்கே தண்ணீரைப் பாய்ச்சு, அங்கே தண்ணீரைப் பாய்ச்சு” என்று கூறவில்லை. அவர் என்ன செய்தார் தெரியுமா? ஒரு கோடாரியை எடுத்து ஜன்னலை உடைத்து உள்ளே போட்டு “பையன்களே வாருங்கள்.........." அதைத்தான் நம்முடைய தலைவரும் செய்துள்ளார். அல்லேலூயா. மரணம், நரகம் மற்றும் பாதாளத்தினூடாகச் சென்று வழி வகுத்து, வழி நடத்தி, “பையன்களே முன்னே வாருங்கள்" என்று கூறினார். ஏதோ ஒரு விதமான போதகத்தைக் கொண்டு அல்ல, ஓ, முன்னே வா : அவர் வழி நடத்துகின்றார். அல்லேலூயா. அடுத்த சில நிமிடங்களில் தீ அணைந்து போனது.  163. உங்கள் போதகமாகிய ஜன்னல்களையும் கதவுகளையும் அவர் உடைத்துப் போட்டு ஒரு முறை அவர் உள்ளே வரவிடுங்கள். எல்லா மூட நம்பிக்கைக் காரியங்களும் பிசாசுகளும் பறந்து போகும் ............ மகிமை. காரியங்கள் மாறிப் போகும். நமக்கு அறிவாற்றல் திறம் வாய்ந்த இராட்சதர்கள் தேவையில்லை. நாம் தலைவரை மாத்திரம் பின்பற்ற வேண்டியவர்களாக இருக்கிறோம். நம் தலைவர் தாமே கீழே வந்து தேவனுடைய வார்த்தையை எடுத்து அதை தெளிவாகப் பிட்டுக் கொடுத்து, “இதோ இது உங்களுக்குத் தான்' என்று கூறினார். 164. உங்களுக்குத் தெரியுமா, ஒரு ஜெட் விமானம் ஒலித்தடை வரைக்கும் மிக வேகமாக செல்லும் என்று என்னிடம் கூறப்பட்டது. பிறகு அந்த ஒலித்தடையை (Sound Barrier) நீங்கள் கடக்கும் வரைக்கும் அந்த விமானம் அதிர்ச்சியினால் குலுங்கி அப்படியே ஆடும். அந்த கட்டத்தைக் கடந்த பிறகு அந்த விமானம் சீராகப் பறக்கும். ஆம், சகோதரனே, அது அந்த விதமாகத்தான் இருக்கின்றது. அந்த பாவத்தடையினூடாக (Sin Barrier) நீங்கள் கடக்கும் வரைக்கும் நீங்கள் எல்லாவற்றிற்கும் அப்படியே மரிக்கிறீர்கள். அந்த பாவத்தடை அவிசுவாசம் ஆகும். அதைக் கடந்து செல்லுங்கள். பிறகு எல்லாக் காரியமும் அருமையாகச் செல்லும். நீங்கள் அவருடைய வார்த்தையின்படி தேவனை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களானால் உங்களிடமிருந்து ஒவ்வொரு பிசாசையும் குலுக்கி எடுத்துப்போட்டு சுதந்திரமாக ஓடுவீர்கள். எல்லா காரியமும் நடக்கும். முழு சர்வாயுத வர்க்கத்தைத் தரித்துக் கொள்ளுங்கள். ஆம். ஐயா.  165. தலைவர் வழி நடத்துகின்றார். நம்மை வீட்டிற்கு வழிநடத்திக் கொண்டிருக்கிறார். ஆமென். வீட்டிற்கு வாருங்கள். "என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு. அப்படியில்லாதிருந்தால், நான் உங்களுக்குச் சொல்லியிருப்பேன். நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடேன். நான் திரும்பவும் வந்து உங்களுடனே இருப்பேன், இதோ உலகத்தின் முடிவு பரியந்தமும் உங்களுக்குள்ளாக நான் இருப்பேன். இன்னும் கொஞ்ச காலத்திலே உலகம் என்னைக் காணாது. நீங்களோ என்னைக் காண்பீர்கள். ஏனெனில் நான் உலக முடிவுபரியந்தம் உங்களுடனே கூட இருப்பேன்.'' தலைவர் வழிநடத்துகின்றார். ஆமென்.  166. வனாந்திர வழியினூடாக செல்லுகின்ற பாதையை என் கர்த்தர் அறிந்திருக்கின்றார். நான் செய்ய வேண்டியதெல்லாம் அவரைப் பின்பற்றுவதேயாகும். ஆமென். இந்த எல்லா அவிசுவாசம், மற்றும் இந்த வயதான காகங்களும், பருந்துகளும் இங்கே சுற்றிலும் கூச்சலிடும் சத்தங்களுக்கு எந்த ஒரு கவனத்தையும் கொடுக்காமல் சேனையானது வெற்றியை நோக்கி அணிவகுத்துச் செல்வதின் சத்தத்தை, சத்தத்தை, சத்தத்தத்தைக் கேளுங்கள். நாம் கழுகுகள், இந்த எல்லா காரியத்திற்கும் அப்பால் உயர நாம் பறப்போமாக. ஆமென்.  167. இங்கே இராணுவத்தில் சில காலத்திற்கு முன்னர் .... தேசமானது முதன் முதலாக தலைக்கவசத்தை அளித்த போது (ஓ, என்னே !) புதிதாய் சேர்ந்த அந்த சிறிய வாலிபன் அந்த தலைக்கவசத்தை அணிவதற்கு விருப்பங்கொள்ளவில்லை ; அது தேவையில்லாதது போலக் காணப்பட்டது. ஆனால் அவன் போரிற்குச் சென்ற போது அக்கவசம் அவனுக்குத் தேவைப் பட்டது. ஒரு காரியத்திற்கான உபயோகம் உள்ளதென்று அவர் நிர்ணயிப்பதைத்தான் தேவன் அளிக்கின்றாரே தவிர வேறெதையும் அவர் அளிப்பதில்லை. ஆகவே அவர் உங்களுக்கு அளிக்கின்ற ஒவ்வொன்றையும் நீங்கள் எடுத்துக் கொள்வது நல்லது. ஏனென்றால் அவை உங்களுக்கு நிச்சயமாகத் தேவைப்படும்.  168. இராணுவத்தில் புதிதாய்ச் சேருகின்ற ஒருவன் அவன் முதுகில் தொண்ணூறு பவுண்ட் எடையுள்ள (41 கிலோ) மூட்டையைச் சுமந்து .... அவன் புதிய யுத்த ஆடையை அணிந்து அதன் மேலே இந்த தொண்ணூறு பவுண்ட் எடையுள்ள மூட்டையில் உள்ள கடப்பாறை, மண் வாறும் கருவியான மண்வாரி, கையெரி குண்டுகள் மற்ற எல்லாவற்றையும் அவன் இப்பொழுது சுமக்க வேண்டிய அவசியம் இல்லை என்று நினைப்பான் என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆனால் அவனை ஒரு முறை போருக்கு அனுப்பி வையுங்கள். அவ்வளவுதான். நீங்கள் அவைகளைக் கொண்டிருக்க வேண்டிய ஒரு தருணம் வரும். அது சரியே.  169. அதன் காரணமாகத் தான் முழு ஞானத்தையும் உடைய தேவன் தம்முடைய சேனைக்கு பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைக் கொண்டு ஆயுதமணியச் செய்துள்ளார். இந்த அறிவாற்றல் திறம் வாய்ந்த பெரியவர்கள், இராட்சதர்கள் இந்த கடைசி நாட்களில் நிற்பார்கள் என்பதை அவர் அறிந்திருந்தார். அல்லேலூயா. அவர்கள் நிற்பார்கள் என்றும், அவர்கள் தங்கள் மகத்தான அறிவுக்கூர்மையுடனும் சாத்தானின்வல்லமையுடனும் விளக்கமளிப்பார்கள் என்பதையும் அவர் அறிந்திருந்தார். பேதுரு “அவர்கள் கெர்ச்சிக்கிற சிங்கம் போல் எவரை யெல்லாம் விழுங்கமுடியுமோ அவர்களெல்லோரையும் விழுங்குவார்கள்” என்று கூறுகிறான். ஆம்.  170. ஆனால் அவர், “நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடேன். நான் மறுபடியும் வருகிறேன். நான் உங்களுடனே கூட இருக்கப்போகிறேன்” என்று கூறினார். அவர் தம்முடைய சேனையைப் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைக் கொண்டு ஆயுதந்தரித்துள்ளார். அவர், “நீங்கள் ஒவ்வொருவரும் சென்று அங்கே காத்திருங்கள். (லூக்கா 24:49) என் பிதா வாக்குத்தத்தம் பண்ணினதை இதோ, நான் உங்களுக்கு அனுப்புகிறேன். நீங்களோ உன்னதத்திலிருந்து வரும் பெலனால் தரிப்பிக்கப் படும் வரைக்கும் எருசலேம் நகரத்தில் இருங்கள். அதன்பிறகு பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும் போது நீங்கள் எருசலேமிலும் யூதேயாவிலும் (அப். 1:8) பூமியின் கடைசிபரியந்தமும் எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்று கூறினார்.  171. பரிசுத்த ஆவி அவர்கள் மீது விழுந்து, அக்கினி அவர்கள் மீது விழத் தொடங்கின போது அவர்களெல்லோரும் பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டனர். அப்பொழுது அவர் களெல்லோரும் தெருக்களில் ஒன்று சேர்ந்து ஓடினார்கள். அங்கிருந்தவர்கள், “இங்கே நடப்பது என்ன, இதென்னமாய் முடியுமோ? நம்மில் அவரவரர்களுடைய ஜென்ம பாஷைகளிலே இவர்கள் பேசக் கேட்கிறோமே, இதெப்படி?” என்று கூறி அவர்கள் என்னென்ன பாஷைகளில் பேசினர் என்பதை அறிந்து அந்த பாஷையின் பெயரைக் கூறிக்கொண்டிருந்தனர். மற்றவர்களோ “இவர்கள் மதுபானத்தினால் நிறைந்திருக் கிறார்கள்” என்று கூறி பரியாசம் பண்ணினார்கள். 172. அப்பொழுது பேதுரு அவர்கள் மத்தியில் எழுந்து நின்று, “யூதேயாவில் வாசம் பண்ணுகிறவர்களே, எருசலேம் ஜனங்களே, நீங்களெல்லோரும் அறிந்து கொள்வீர்களாக, என் வார்த்தைகளுக்குச் செவி கொடுங்கள். நீங்கள் நினைக்கிறபடி இவர்கள் வெறிகொண்டவர்களல்ல, என்ன, பொழுது விடிந்து மூன்றாம் மணி வேளையாயிருக்கிறதே ....” என்று கூறினான். காலை ஒன்பது மணியாயிற்று. மதுபானம் விற்பனை செய்யும் மையங்கள் இன்னும் திறக்கப்படவில்லை. பாருங்கள்? “இது தான் அது” ஆம் ஐயா, “இது மதுபானம் குடிப்பதினாலல்ல, ஆனால் தீர்க்கதரிசியாகிய யோவேலினால் உரைக்கப் பட்டபடியே இது நடந்தேறுகிறது.'' வார்த்தைக்கு மறுபடியுமாக திரும்பி வருதல். அவன் அதை வெட்டி எடுத்தான். ஒரு பக்கத்திலிருந்து மறு பக்கத்திற்கு வெட்டினான். ஆமென்.  173. அப்பொழுது அந்த மூப்பர்கள் தங்கள் இருதயத்திலே குத்தப்பட்டவர்களாகி "மனிதரே, சகோதரரே, நாங்கள் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டனர்.  174. அவன், “நீங்கள் மனந்திரும்பி ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள். அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள். வாக்குத்தத்தமானது உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும் நம்முடைய தேவனாகிய கர்த்தர் வரவழைக்கும் தூரத்திலுள்ள யாவருக்கும் உண்டாயிருக்கிறது" என்று கூறினான். அதுதான் ஒரு மாதிரியாகும். அதுதான் செய்யப்பட வேண்டும் என்று கூறினான். அதை உடனடியாகப் பின்பற்றி அது சரியானது தானா என்று பாருங்கள். ஆமென். ஆம் ஐயா, எனக்கு அது பிடிக்கும், ஏனென்றால் அது ஒரு வாக்குத்தத்தம் ஆகும்.  175. பழைய ஏற்பாட்டில் மன்னாவானது விழுந்த போது ... முதல் மன்னாவானது விழுந்த போது, தேவன் அவர்களை நோக்கி, நீங்கள் அங்கே வெளியே சென்று ஒரு ஓமர் அளவு முழுவதுமாக மன்னாவை எடுத்து அதை மகா பரிசுத்த ஸ்தலத்தில் வைத்து விடுங்கள் என்று கூறினார். அவர்கள் அந்த அளவிற்கு அதிகமாக வைத்துக் கொள்வார்களானால் அந்த மன்னாவில் விக்கில்டெயில் பூச்சிகள் மற்றும் கறையான்கள் பிடித்தது. சிறிய விக்கில்டேயில் பூச்சிகள் எப்படிப்பட்டவை என்று உங்களுக்குத் தெரியும், அங்கே தெற்கில் அந்த விதமாகத் தான் அதை அழைப்பார்கள். அப்பூச்சிகள் நீர்த் தொட்டிகளிலும் மற்றவைகளிலும் இருக்கும். அந்தச்சிறு - சிறு பூச்சிகளை நீங்கள் அறிவீர்கள். இன்றைக்கு அநேக மக்களின் அனுபவங்களில் அந்த விதமாகத் தான் நடக்கின்றன. இரண்டு வருடங்களுக்கு முன்னர் தாங்கள் கொண்டிருந்ததை அப்படியே தொடர்ந்து வைத்துக் கொண்டிருக்க முயற்சி செய்து (பாருங்கள்?) கடைசியாக அதில் பூச்சிகள் பிடித்து விடுகின்றன. என்னே, இப்பொழுது நாம் அதை மறுபடியுமாக பார்ப்போமாக.  176. அந்த மன்னா ஒவ்வொரு இரவும் விழுந்தது. அந்த மன்னா கிறிஸ்துவாகும். பாருங்கள். நேற்றைய அனுபவத்தை நீங்கள் வைத்துக் கொண்டிருக்க முடியாது. சரியாக இப்பொழுது ஒன்றைக் கொண்டிருக்க வேண்டியவர்களாக இருக்க வேண்டும் பாருங்கள்? இன்று, அது சரி தான். ஆனால் சில மன்னாக்கள் அங்கே மகா பரிசுத்த ஸ்தலத்தில் வைக்கப்பட்டிருந்தது. அது அப்படியே கெட்டுப் போகாமல் இருந்தது, அவர், “உனக்குப் பின் வருகின்ற எல்லா சந்ததிகளும் ஆசாரியத்துவத்திலே அவர்கள் ஆசாரியர்களாகின்ற போது முதலில் விழுந்த இந்த மூல மன்னாவிலிருந்து சிறிது கடித்துக் கொள்ளலாம்” என்று கூறினார்.  177. கவனியுங்கள், இப்பொழுது பேதுரு அதே காரியத்தைத் தான் கூறுகிறான். அவன் .... அவர்கள் கூறினர் ...... அவன் “இது தான் அது ; இது தான் அது” என்றான். அவன், “நீங்கள் மனந்திரும்பி ஒவ்வொருவரும் உங்களுடைய பாவ மன்னிப்புக்கென்று கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள். அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள். வாக்குத்தத்தமானது உங்களுக்கும் (இப்பொழுது நாம் ராஜரிகமான ஆசாரியக்கூட்டமாயும் உள்ளோம்) உங்கள் பிள்ளைகளுக்கும் நம்முடைய தேவனாகிய கர்த்தர் வரவழைக்கும் தூரத்திலுள்ள யாவருக்கும் உண்டாயிருக்கிறது'' என்று கூறினான்.  178. இந்த மருந்துச் சீட்டு, சூத்திரத்தின் வழியாக வருகின்ற ஒவ்வொருவரும், வந்து உண்மையாக மனந்திரும்பி ஞானஸ்நானம் பெற்று தேவனை நோக்கிப் பார்ப்பார்களானால், அப்பொழுது அவர் ஒரே ஒரு பிடி மட்டும் கொடுக்கமாட்டார். ஆனால் நம்முடைய பசி தீருகின்ற வரைக்கும் கொடுப்பார். ஏதோ ஒன்றை அல்ல. ஏதோ ஒரு உணர்ச்சி வசப்படுதல் அல்லது ஒரு உளவியல் பூர்வமான ஒன்று அல்ல. ஆனால் பெந்தெகொஸ்தே நாளில் விழுந்த அந்த மூல, உண்மையான பரிசுத்த ஆவியை அளிப்பார். ஆமாம், நீங்கள் அந்த மருந்து சீட்டை பின்பற்றினால் அவர் அளிப்பார்.  179. மருந்தை அளிப்பது போல, இன்றைக்கு அநேக மருத்துவர்கள். ... மருத்துவர் எழுதியுள்ள விதமாக மருந்தை வாங்காமல் மருந்து கடைக்காரர் சொல்லும் மருந்தை வாங்கி நீங்கள் சாப்பிடுவீர்களானால் எப்படியிருக்கும். என்ன நடக்கும் என்று உங்களுக்குத் தெரியுமா? அது உங்களைக் கொன்று விடும். அதன் காரணமாகத் தான் நீங்கள் மரித்த சபை உறுப்பினர்களை நிறைய பேர்களைக் கொண்டிருக்கிறீர்கள். மகிமை, சகோதரனே, முறைகேடான வழியில் அதில் மாற்றங்களைச் செய்ய விழையாதே. அது மருத்துவர் எழுதியிருக்கின்ற ஒன்றாகும். அது எழுதியிருக்கின்ற விதமாகவே அதை எடுத்துக்கொள். நீ செய்ய வேண்டியது அதை மாத்திரமே. மருந்து கடைக்காரர்கள் மிக அதிகம் பேர் உள்ளனர். ஆம் ஐயா.  180. தம்முடைய சேனைக்கு என்ன தேவைப்படுகின்றது என்பதை அவர் அறிந்திருக்கிறார். அதன் காரணமாகத் தான் அவர் அதை பரிசுத்த ஆவியினால் ஆயுதமணிவித்துள்ளார். அவர்கள் செய்யவேண்டியது . . . அவர் அவர்களைக் கொண்டிருக்க வேண்டும். அவர்களும் அவரைக் கொண்டிருக்க வேண்டும். ஆம், ஐயா, அவர் ஆற்றல் வாய்ந்த மெய்யான சாட்சியாக இருக்கின்றார். அவர்கள், அவருடைய உயிர்த்தெழுதலுக்குச் சாட்சியாக இருக்க வேண்டுமானால் பரிசுத்த ஆவியை அவர்கள் கொண்டிருக்க வேண்டியவர்களாக இருக்கின்றனர்.  181. இப்பொழுது, அவர், மாற்கு 16ல் “நீங்கள் உலகமெங்கும்போய் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள் (வேறு விதமாகக் கூறினால், அதன் வல்லமையைச் செய்து காண்பியுங்கள் என்பதே), சுவிசேஷத்தை ஏற்றுக் கொள்கிறவர்களை இந்த அடையாளங்கள் பின் தொடரும்” என்று கூறினார். பாருங்கள்? வெறும் அறிவாற்றல் திறம் மிக்க வார்த்தைகளைச் சொல்வதல்ல. இல்லை, இல்லை, அறிவாற்றல் திறம் மிக்க வார்த்தைகளைக் கொண்டு அவர்களால் அதைச் செய்ய முடியவில்லை. அந்த வார்த்தை மாம்சமாக்கப்பட்டு வெளிப்படுத்தப்பட வேண்டியதாக இருந்தது, பாருங்கள்? "விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் பின் தொடரும். என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள். நவமான பாஷைகளைப் பேசுவார்கள். சர்ப்பங்களை எடுப்பார்கள். சாவுக்கேதுவான யாதொன்றைக் குடித்தாலும் அது அவர்களைச் சேதப்படுத்தாது. வியாதியஸ்தர்கள் மேல் கைகளை வைப்பார்கள். அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள்" என்றார். வெளிப்படுத்தப்பட்ட வார்த்தையாகிய பரிசுத்த ஆவியின் வல்லமையைச் செய்து காண்பியுங்கள். "நான் உங்களுக்குக் கூறுகிறேன். இந்த அடையாளங்களெல்லாம் சம்பவிக்கும் (உயிர்ப்பிக்கப்பட்ட வார்த்தையைப் போல), இவை சம்பவிக்கும்” - பரிசுத்த ஆவியின் வல்லமையை நீங்கள் உங்களுக்குள்ளாகக் கொண்டிருக்கிறீர்கள். அது நீங்கள் அல்ல. பரிசுத்த ஆவியே அதைச் செய்கிறது. பாருங்கள்? 182. இப்பொழுது, தேவனுக்கென்று ஆற்றல் வாய்ந்த மெய்யான சாட்சியாக இருக்கவேண்டுமென்றால் நீங்கள் பரிசுத்த ஆவியைக் கொண்டிருக்க வேண்டும். ஏனெனில் பரிசுத்த ஆவி இல்லாமல் அதை ஜீவிக்கச் செய்ய உங்களால் முடியாது. அதில்லாமல் நீங்கள் என்ன செய்வீர்கள் தெரியுமா? பரிசுத்த ஆவியைக் குறித்து யாரோ ஒரு அறிவாற்றல் திறம் வாய்ந்த ஒரு பெரிய ஆள், இராட்சதன் கூறியிருக்கும் ஒரு கருத்தை எடுத்துக் கொண்டு, சரியானதைப் புறக்கணித்து விட்டு “அது அப்போஸ்தலர்களுக்கு மாத்திரம் தான்” என்று கூறுவீர்கள். பெந்தெகொஸ்தே நாளில் விழுந்த அக்கினியின் ஜுவாலையினால் இதயங்கள் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கும் மக்கள் எவ்விடத்திலும் உள்ளனர் அது சுத்திகரித்து பரிசுத்தமாக்கியது ஓ, அது என் இருதயத்தில் எரிந்து கொண்டிருக்கிறது அவர் நாமத்திற்கே மகிமை நானும் அவர்களில் ஒருவன் என்று கூறிட முடிந்ததால் சந்தோஷமே! (அதைக் குறித்து மகிழ்ச்சி தானே,) இந்த ஜனங்கள் கல்லாதவராயினும் உலகக் கீர்த்தியில்லாதவராயினும் அவர்கள் யாவரும் தங்கள் பெந்தெகொஸ்தேயை பெற்றுவிட்டனர் இயேசுவின் நாமத்தில் ஞானஸ்நானம் பெற்றனர் அவர்கள் இப்போது அறிவிக்கின்றனர் அவரது வல்லமை மாறாமல் உள்ளதென்று நானும் அவர்களில் ஒருவன் என்று கூறிட முடிந்ததால் சந்தோஷமே  183. ஓ, அதைக்குறித்து எனக்கு மகிழ்ச்சி. ஆம், ஐயா, ஆம் ஐயா, இந்த சாயங்கால வெளிச்சங்களை வெளிப்படுத்திக் காண்பிக்க நீங்கள் பரிசுத்த ஆவியைக் கொண்டிருக்க வேண்டியவர்களாக உள்ளீர்கள். அது சரி. மாற்கு - எபிரெயர் 13 : 8, இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவ ராயிருக்கிறார் என்பதை தத்ரூபமாக்க அது தேவை. அது சரி. தேவனுடைய முழு சர்வாயுத வர்க்கத்தைத் தரித்துக் கொள்ளுங்கள். அதை ஒரு ஆடையாகவோ அல்லது மேலும் கீழும் அணிவகுத்து நடக்கவோ அதை உபயோகப்படுத்த வேண்டாம். ஆனால் அது என்னவாயிருக்கிறது? தேவனுடைய முழு சர்வாயுதவர்க்கத்தைத் தரித்துக்கொள்ளுங்கள். ஆதலால் நீங்கள் தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தைப் பெறும் போது, நீங்கள் தேவனுடைய பட்டயத்தை விசுவாசத்தினாலே எடுத்து, அதைக் கொண்டு வெட்டிச் சாய்த்துக் கொண்டே முன்னேறிச் சென்று உங்களுக்கென தேவன் அளித்திருக்கும் எந்த ஒரு வாக்குத்தத்தத்தையும் சென்றடையலாம். 184. உங்கள் பாதையில் வியாதி நின்று கொண்டிருக்கின்றதா, பாதையிலிருந்து அதை வெட்டித் தூக்கியெறி : அது தேவனுடைய வாக்குத்தத்தம். பாவம் உங்கள் வழியில் நிற்கின்றதா, அதை வெட்டித் தூக்கியெறியுங்கள். அது சரி, அந்த முழு சர்வாயுதவர்க்கம் ... பிசாசானவன் ஒரு அஸ்திரத்தை எய்வானானால், பட்டயத்தைக் கொண்டு அதை தகர்த்தெறியுங்கள். வெட்டிச் சாய்த்துக்கொண்டே இருங்கள். அது சரி, “யுத்தம் செய்வோம் வாரும் கிறிஸ்து வீரரே, இயேசு சேனை சிலுவை பின் செல்வோமே” அல்லேலூயா. நானும் அவர்களில் ஒருவன் என்று கூறிட முடிந்ததால் சந்தோஷமே அவர்களில் ஒருவன், அவர்களில் ஒருவன் நானும் அவர்களில் ஒருவன் என்றுகூறிட முடிந்தததால் சந்தோஷமே (அதைக் குறித்து உங்களுக்கு மகிழ்ச்சி தானே? ஆமென். ஆம் ஐயா) அவர்கள் மேல்வீட்டறையில் கூடி வந்து யாவரும் அவர் நாமத்தினால் ஜெபித்துக் கொண்டிருந்தனர், அவர்கள் பரிசுத்த ஆவியினால் ஞானஸ்நானம் பண்ணப்பட்டிருந்தனர். ஆராதனைக்கான வல்லமை வந்தது. அந்நாளிலே அவர்களுக்கு அவர் என்ன செய்தாரோ, அதையே உங்களுக்கும் அவர் செய்வார், நானும் அவர்களில் ஒருவன் என்று கூறிட முடிந்ததால் சந்தோஷமே அவர்களில் ஒருவன், அவர்களில் ஒருவன், நானும் அவர்களில் ஒருவன் என்றுகூறிட முடிந்ததால் சந்தோஷமே  185. ஒரு நாள் மெம்ஃபிஸ் (Memphis) ..... நான் அதைக் கூறினதை நீங்கள் கேட்டீருக்கிறீர்கள் என்று யூகிக்கிறேன். அதைக் குறித்து இப்பொழுது சிந்தித்தேன். அந்தச் சிறிய பாடலைப் பாடிக்கொண்டு நான் வந்து கொண்டிருந்தேன். விமானம் நிறுத்தப்பட்டிருந்தது. அதற்கு முந்தைய இரவில் ஒரு புயல் வந்து அடித்தது. அப்பொழுது நான் டெக்சாசிலுள்ள டல்லாஸிலிருந்து வந்து கொண்டிருந்தேன், விமானம் மெம்ஃபிசில் நிறுத்தப்பட்டது. அப்புயல், விமானம் தரையிறங்கும்படிக்குச் செய்தது. அவர்கள் என்னை ஒரு பெரிய விடுதியில் தங்க வைத்து அடுத்த நாள் காலை ஏழு மணிக்கு என்னை அழைப்பதாகக் கூறினர். அதிகாலை சுமார் ஐந்து மணிக்கு ஒரு கடிதத்தை அனுப்புவதற்காக நான் தபால் நிலையத்திற்குச் சென்றுக் கொண்டிருந்தேன். அன்றிரவு நான் சரியாக உறங்கவில்லை. அங்கே சாலையில் சென்று கொண்டிருந்த போது பரிசுத்த ஆவியானவர் "திரும்பு , அங்கே இருக்கின்ற அந்த வழியில் செல்லு” என்று கூறினார்.  186. நான் இன்னும் சற்று தூரம் நடந்து சென்றேன். அங்கே கயிறுகள் இருந்தன. துப்பாக்கிகளும் சில உபகரணங்களும் ஒரு கடையில் வைக்கப்பட்டிருந்தன. பெரிய உருவங்கொண்ட ஐரிஷ் போலீஸ்காரர் ஒருவர் அங்கே நின்றுகொண்டிருந்தார். நான் மேலும் கீழும் பார்த்துக்கொண்டே அந்த கயிறுகளை நோக்கி நடந்து சென்றேன். நான் "அந்த ஆள் நம்மை பார்ப்பதை நிறுத்தி விட்டாரே'' என்று நினைத்தேன். அப்பொழுது நான் ''கர்த்தாவே என்னை அழைத்தது நீர் தானா?” என்றேன். தேவனுடைய பிள்ளைகள் தேவனுடைய ஆவியால் நடத்தப்படுகின்றனர் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அப்பொழுது “திரும்பி அந்த வழியாகச் செல்” என்றார். அப்பொழுது நான் திரும்பி நடந்து சென்றேன். நான் சாலையைக் கடந்து தெற்கு மெம்ஃபிஸ் நோக்கிச் சென்று அங்கே கறுப்பு இன மக்கள் வாழும் இடத்தில் அவர்கள் மத்தியில் சென்றேன். நான் சென்று கொண்டே இருந்த போது, “என்னே" என்று நினைத்து என் கைக்கடிகாரத்தைப் பார்த்தேன். “ஓ விமானம் புறப்படுவதற்கான நேரமாயிற்றல்லவா” என்று நினைத்தேன். ஆனால் ஏதோ ஒன்று “சென்று கொண்டே இரு" என்று கூறிக்கொண்டேயிருந்தது. சூரியன் வெளிவந்து பிரகாசிக்க ஆரம்பித்தது என்று உங்களுக்குத் தெரியுமா.  187. நான் அங்கே சென்று கொண்டே இருந்து நேரடியாக உற்றுப் பார்த்தேன். அங்கே வெளியே இருந்த ஒரு சிறு வாயிலில் சாய்ந்து . . . அங்கே ஒரு கறுப்பு இன சகோதரி நின்று கொண்டிருந்தார்கள். இங்கே உள்ள ஜெமிமா ஆண்டியைப் போல காணப்பட்டாள், அவளுடைய பெரிய தடித்த கன்னங்கள் தொங்கிக்கொண்டிருந்தன. அவள் கன்னங்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருந்தது. அப்பொழுது அவள், “காலை வணக்கம் பார்சன் (parson)” (போதகர் என்று அர்த்தம் - தமிழாக்கியோன்) என்றாள்.  188. நான், “காலை வணக்கம்” என்றேன். நான், “ஆண்ட்டி , நான் ஒரு பார்சன், போதகன் என்று எப்படி உங்களுக்குத் தெரியும்?” என்று கேட்டேன். அங்கே தெற்குப் பகுதியில் ஒரு ஊழியக்காரன் பார்சன் என்று தான் அழைக்கப்படுவார், நான், நான், "நான் ஒரு பார்சன் என்று எப்படி உங்களுக்குத் தெரியும்”? என்றேன்.  189. அதற்கு அவள், “ஆ, நீர் ஊழியக்காரன் என்று எனக்குத் தெரியும்” என்று கூறினாள். மேலும், “ஒரு காரியத்தை நான் கூறாமல் விட்டு விட்டேன். நீங்கள் ஒரு பழுப்பு நிற சூட்டை அணிந்து உங்கள் தலையின் ஓரத்தில் ஒரு சிறு தொப்பியை அணிந்திருப்பீர்களே, நீங்கள் வைத்திருந்த அந்த சிறு பெட்டி எங்கே?” என்று கூறினாள். அப்பொழுது நான் உட்கார்ந்தேன். நான், “அதை ஹோட்டலில் வைத்துவிட்டேன்” என்றேன். "நீங்கள் வருவீர்கள் என்று எனக்குத் தெரியும்” என்று கூறினாள். நான், “என் பெயர் பிரன்ஹாம், அது உங்களுக்குத் தெரியுமா?” என்றேன்.  190. அதற்கு அவள், “இல்லை , ஐயா, பார்சன் பிரன்ஹாம், எனக்குத் தெரியாது” என்றாள். மேலும் அவள், " வேதாகமத்தில் சூனேமியாளைக் குறித்து கூறப்பட்டுள்ளதை எப்பொழுதாவது நீர் கேள்விப்பட்டுள்ளீரா?” என்றாள். நான் “ஆமாம்” என்று கூறினேன்.  191. அவள், “உங்களுக்குத் தெரியுமா, அவளுக்கு ஒரு குழந்தை இருந்தது. அவளுக்கு குழந்தை பெற்றெடுப்பதற்கான வயதைக் கடந்திருந்தாள். ஆனாலும் அவள் ஒரு குழந்தையைப் பெற்றாள். அந்த தீர்க்கதரிசியான எலியா அவளிடம் சென்று அந்தக் குழந்தையைக் குறித்து அவளிடம் கூறினான். ஏனென்றால் அவள் அந்தத் தீர்க்கதரிசியிடம் அன்பான, தயாள குணத்துடன் நடந்து கொண்டாள்.” என்றுகூறினாள். நான், “ஆம் ஆண்ட்டி , அந்தச் சம்பவம் எனக்கு மிக நன்றாகத் தெரியும்” என்று கூறினேன்.  192. அதற்கு அவள், “ஆம், நானும் அந்தவிதமான ஒரு பெண் தான். நானும் என் கணவனும் கர்த்தரிடம் ஜெபித்து எங்களுக்கு ஒரு குழந்தையை அளிக்கும்படி கேட்டோம். அதற்கு சூனேமியாள் வளர்த்தபடி நானும் அக்குழந்தையை வளர்ப்பேன் என்று கூறினேன். கர்த்தர் எங்களுக்கு அருமையான ஒரு பையனைக் கொடுத்தார். ஆனால் என் பையன் தவறான பாதையில் செல்ல ஆரம்பித்தான். அவன் பாவிகளின் மத்தியில் சென்று பாவ வழியில் சென்று விட்டான். இதோ உள்ளே அவன் படுத்து மரித்துக்கொண்டிருக்கிறான். அவனைப் பால்வினை நோய் பிடித்துக்கொண்டது. அதோ அவன் உள்ளே மரித்துக்கொண்டிருக்கிறான். இங்கேயுள்ள கிறிஸ்தவர்களாகிய எங்களுக்கு அதைக் குறித்துத் தெரியாது. அந்த பால்வினை அப்படியே இருந்து கிரந்தி நோயாக , மேகப் புண்ணாக (Syphilis) முற்றிவிட்டது. அதோ அவன் மரித்துக் கொண்டிருக் கிறான்" என்று கூறினாள்.  193. மேலும் அந்தப் பெண், “மருத்துவர் வந்து பார்த்துவிட்டு ஒன்றுமே செய்ய முடியாது என்று கூறிவிட்டார். அவனுடைய இரத்த நிலை நான்கு புள்ளி நிலையை அடைந்தது. அவனுக்கு சல்வர்சன் 606 மற்றும் மெர்குரி மருந்துகள் மற்றும் எல்லா மருந்துகளையும் அளித்தார்கள். ஆனால் அதினால் எந்த ஒரு முன்னேற்றமும் காணப்படவில்லை. அந்த பால்வினை நோய் மிக முற்றிய நிலையை அடைந்து அவனுடைய இருதயத்தில் ஓட்டைகளைப் பிறப்பித்தது. அவன்மரித்துக் கொண்டிருக்கிறான். பார்சன், என் குழந்தை மரித்துக் கொண்டிருப்பதை என்னால் பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை" என்று கூறினாள்.  194. அவள், "அவன் தந்தை இன்று காலை வேலைக்குச் சென்றுள்ளார். நான் முழு இரவும் விழித்திருந்து ஜெபித்துக் கொண்டிருந்தேன். கர்த்தராகிய தேவனே எலியாவின் நாட்களில் இருந்த அதே தேவனாகத் தான் இன்றும் இருக்கின்றீர். அந்த சூனேமியாளைப் போலத் தான் நானும் கூட இருக்கிறேன். இங்கேயும் நீர் எனக்கு ஒரு குழந்தையை அளித்தீர். அவன் தவறான பாதையில் சென்று விட்டான். கர்த்தாவே, நான் மரக்கட்டைகளைக் கழுவி உமக்குச் சேவை செய்ய முயன்று, உம்முடைய சபைக்கு சென்று உம்முடைய பார்சன்களின் செய்திகளைக் கேட்டேனே, நான் செய்ய வேண்டும் என்று என்னிடம் கூறப்பட்ட ஒவ்வொன்றையும் நான் செய்தேனே. என் குழந்தை அந்த விதமாக மரிப்பதை நான் பார்க்க விரும்பவில்லை. கர்த்தாவே, நான் என்ன செய்வது?" என்று ஜெபித்தேன்” என்று கூறினாள். 195. மேலும் அவள், “நான் உறங்கி விட்டேன். அப்பொழுது நான் ஒரு சொப்பனத்தில் நீர் தெருவில் வருவதை கண்டேன். நான் உறக்கத்திலிருந்து எழுந்த போது, 'வெளியே போய் அங்கே வாயிற்கதவண்டை நில்' என்று அவர் கூறினார் " என்றாள். அவளுடைய முதுகுப்பகுதி இன்னுமாக ஈரமாக இருந்தது. அவள் தலையைச் சுற்றி ஒரு மனிதனின் சட்டையைக் கட்டியிருந்தாள். அப்பொழுது நான் அங்கே நோக்கிப் பார்த்தேன். அவளை நோக்கிப் பார்த்து “என்னே" என்று நினைத்தேன். “நீங்கள் உள்ளே வருவீரா?” என்று கேட்டாள்.  196. ஓ, என்னே, நான் அந்த பழைய கேட்டைத் திறந்தேன், அந்தக் கதவு திறந்து கொள்ளாமலிருக்க ஒரு சிறு கட்டை அதில் தொங்கிக்கொண்டிருந்தது. அது எப்படி இருக்குமென்று உங்களுக்குத் தெரியும். அப்பொழுது நான் வீட்டிற்கு உள்ளே சென்றேன். நான் ராஜாக்களின் அரண்மனைகளுக்குச் சென்றிருக்கிறேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆனால் அந்த கறுப்பு இனத்தவரின் சிறு வீட்டில் அக்காலையில் நான் இருந்த போது நான் பெற்ற வரவேற்பிற்கு எந்த ஒன்றுமே ஈடாகாது. ஒரு சிறு பழைய தரை, ஒரு சிறு கட்டிலின் இரும்பு கட்டம், ஏழை வீடு. அங்கே கட்டிலில் அருமையாக காணப்பட்ட ஒரு பெரிய பையன் படுத்துக் கிடந்தான். சுமார் நூற்று தொண்ணூறு பவுண்ட் எடையுள்ள சற்று பலமிக்க உடலுரமிக்கவனாகக் காணப்பட்டான். அவன் தன்னுடைய கையில் ஒரு போர்வையைப் பிடித்துக் கொண்டிருந்தான் அல்லது அது அவன் மீது போர்த்தப்பட்டிருந்தது. “அஹ், அஹ், அஹ்” என்று முணகிக்கொண்டிருந்தான்.  197. நான், “ஐயா, காலை வணக்கம்” என்றேன்.  198. அப்பொழுது அவள், "ஓ, பார்சன், கடந்த மூன்று நாட்களாக அவனுக்கு ஒன்றுமே தெரியவில்லை. அவன் ஒரு சமுத்திரத்தில் அல்லது ஏதோ ஒரு பெரிய இடத்தில் இருப்பதாக நினைக்கின்றான் - அவன் நினைக்கின்றான். அது மிகவும் இருண்டதாக இருப்பதாகக் கூறுகிறான். அவன் ஒரு படகில் இருப்பதாகவும் அவனால் திரும்பி வர முடியவில்லை என்றும் கூறுகிறான். அது தான் என் இருதயத்தை நொறுக்குகிறது. அவன் காப்பாற்றப்பட்டான் என்று அவன் கூறி அதை நான் கேட்டால் எனக்குப் போதும்”, என்றாள். நான், "ஆண்ட்டி நான் வியாதியஸ்தருக்காக ஜெபிப்பவன்” என்றேன்.  199. அப்பொழுது அவள் அதைக்குறித்து ஆர்வம் கொள்ளவில்லை. அந்தப் பையன் இரட்சிக்கப்படுவதைக் காணவே அவள் விரும்பினாள். அந்தப் பையன் இரட்சிக்கப் படுகின்றதை, அந்த ஒன்றைத் தான் அவள் காண விரும்பினாள். அவனை மறுகரையிலே மறுபடியுமாக தான் காணப் போகிறேன் என்று அவள் அறிந்திருந்தாள். அவள், “இதோ, இவன் தவறான வழியில் சென்று விட்டான். நீங்கள் இவனுக்காக ஜெபம் ஏறெடுக்க மாட்டீரா?” என்றாள். நான், “நல்லது, நாம் ஜெபிப்போம்” என்றேன். “நாம் ஜெபிப்போம்” என்றேன்.  200. நாங்கள் இருவரும் அமர்ந்தோம். நான், "ஆண்ட்டி , முதலாவதாக நீங்கள் ஜெபியுங்கள்" என்று கூறினேன். ஓ, என்னே, அந்த அருமையான வயதான பரிசுத்தவாட்டி ஜெபிக்க ஆரம்பித்தாள், நீங்கள் ... ஜெபிப்பது என்பது அவர்களுக்கு புதிதான ஒரு காரியமல்ல. முன்பு எப்படி அவரிடமாக பேசினாளோ அதே விதமாக அவரிடமாகப் பேசினாள். ஆம், அவள் செய்தாள். என் உடல் முழுவதுமாக அப்படியே குளிருணர்ச்சி ஏற்பட்டது. அப்பொழுது நான், "ஓ தேவனே, இப்படிப்பட்ட ஒரு இடத்திற்கு நீர் என்னை எப்படி வழிநடத்தினீர்? "ஓ, தேவனே நீர் மிக அற்புதமானவர் அல்லவா," என்று நினைத்தேன். 201. நான் அவளைக் கவனிப்பேன். நான் எழுந்து கொண்டேன். அவளைக் கவனித்துப் பார்த்தேன். அவளுக்குக் கண்ணீர் வழிந்தோடிக் கொண்டிருந்தது. அவள், “கர்த்தாவே, இதோ நானிருக்கிறேன். நான் ஜெபித்த போது நீர் ஒரு சொப்பனத்தை அளித்து இந்த பார்சன் வந்து கொண்டிருக்கிறார் என்று கூறினீரே. நான் அங்கே காத்துக் கொண்டிருந்தேன்" என்றாள். தேவன் ஒரு கோட்டின் இரு முனையிலும் கிரியை செய்கிறார் என்று நான் விசுவாசிக்கின்றேன். அது .......... “அவர் இங்கே வரும் வரையிலும் நான் காத்திருந்தேன். இதோ இங்கே அவர் இருக்கின்றார். கர்த்தாவே, என் குழந்தை ‘நான் இரட்சிக்கப்பட்டு விட்டேன்' என்று கூறுவதை நான் கேட்டால் போதும், அதுவே எனக்குப்போதுமானது” என்று கூறினாள். அவள் ஜெபித்தாள். பிறகு ஜெபிப்பதை நிறுத்தி, “ஆமென்” என்று கூறினாள். பிறகு, “பார்சன், நீங்கள் ஜெபிப்பீர்களா?” என்றாள்.  202. “ஆம், அம்மையே, சகோதரியே” என்றேன். நான் என் கரங்களை அவனுடைய கால்களின் மீது வைத்தேன். அக்கால்கள் குளிர்ந்து போய் இருந்தன.  203. அவள் எழுந்து தன்னுடைய கன்னங்களில் வழிந்த கண்ணீரை அந்த விதமாகத் துடைத்தாள். அவன் கன்னத்தில் முத்தமிட்டாள். அவன் எந்தவிதமான ஒரு இழிவான நிலையில் இருந்தாலும் சரி, "இவன் அம்மாவின் குழந்தை" என்று கூறினாள். இப்பொழுது பாருங்கள், அந்த - அந்த .... அவன் எந்த விதமாக இருந்திருந்தாலும் சரி, அவன் இன்னுமாக அவளின் குழந்தையாக இருந்தான். பாருங்கள்? எப்படி இருந்தாலும் சரி... பாருங்கள் அது தான் காரியம், ஒரு தாயின் அன்பைக் குறித்து சிந்தித்துப் பாருங்கள். ஆனால், “ஒரு தாய் தன் பாலகனை மறக்கக்கூடும். ஆனால் என்னால் உன்னை மறக்க முடியாது” என்று தேவன் கூறியிருக்கின்றார். பாருங்கள்? “என் கரங்களின் உள்ளங்கையில் உன் பெயரானது வரையப் பட்டிருக்கின்றது.” அவர் உங்களை நேசிக்கின்றார். ஆகையால் கவலை கொள்ளாதீர்கள். நீங்கள் அவருடைய வார்த்தையை எடுத்து நம்புவீர்களானால், அப்படியே செய்து கொண்டேயிருங்கள்.  204. அவள் திரும்பவுமாக முழங்காலிட்டாள். நான் என் கரங்களை அவன் பாதத்தின் மீது வைத்தேன். அவன், “அஹ், அஹ், இங்கே இருட்டாக இருக்கிறதே, அஹ், அஹ், அங்கே இருட்டாக இருக்கிறதே, ஓ, அம்மா” என்று கூறிக் கொண்டேயிருந்தேன். விடம் நீங்கள் பேசலாம் அல்லவா? ஏன் பேசவில்லை ?” என்றேன். “இல்லை, தான் எங்கே இருக்கின்றான் என்று அவனுக்கு தெரியாது. இந்த விதமாகத் தான் அவன் அநேக நாட்களாக கூறிக்கொண்டேயிருக்கின்றான்” என்று கூறினாள்.  205. அப்பொழுது நான், “பரலோகப் பிதாவே, அந்த விமானம் ஏன் தரையிறங்கினதென்று எனக்குப் புரியவில்லை . இப்பொழுதோ, நேரமானது மிகவும் காலதாமதமாகி விட்டிருக்கிறது. என்னால் அந்த விமானத்தை இப்பொழுது பிடிக்க முடியாது. ஆனால் இங்கே இந்த வழியாக நீர் என்னை வரச்செய்திருக்கின்றீர். அந்தச் சகோதரி இந்த எளிய சிறிய வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்தார்கள். நான் இங்கே வந்தது ... நான் ஏன் இங்கு இருக்கிறேன் என்று எனக்குத் தெரியாது. கர்த்தாவே,. நான் அப்படியே பின் தொடர்ந்து கொண்டே வந்தேனே...” என்றேன். அப்பொழுது அவன், “ஓ, அம்மா, ஓ, அம்மா” என்றான். அப்பொழுது நான் கூறினேன், நான் சிறிது கூர்ந்து கவனித்தேன். அந்த அம்மையார், "ஆம் தேனே” என்றாள். அவன், "அம்மா, அறையில் வெளிச்சம் வர ஆரம்பிக்கின்றது" என்றான். 206. சிறிது கழித்து ... அதற்குப் பிறகு சுமார் ஒரு வருடம் கழித்து நான் ஃபீனிக்ஸிற்கு ஒரு இரயில் வண்டியில் பயணித்துக் கொண்டிருந்தேன். இரயிலில் விற்கப்படும் தின்பண்டமான சாண்ட்விச் மற்றும் சிறு தின்பண்டங்களின் விலை மிக அதிகமாக நிர்ணயிக்கப்பட்டு விற்கப்படுவது உங்களுக்குத் தெரியும். ஆகவே இரயில் மெம்ஃபிஸில் நின்ற போது இறங்கி ஒரு பை நிறைய ஹாம்பர்கர் வாங்க இறங்கினேன். நான ஃபீனிக்ஸ் சென்றடையும் வரைக்கும் அது போதுமானதாக இருக்கும். அப்பொழுது .... ஒரு இரவு மற்றும் ஒரு பகல் பிரயாணமாக இருந்தது. அங்கே நான் ஒரு ஹாம்பர்கரை பதினைந்து செண்டுகளுக்கு வாங்கலாம் என்று உங்களுக்குத் தெரியும். ஆகவே நான் வாங்க இறங்கி ஓடின போது யாரோ ஒருவர், “ஹலோ, இங்கே பாருங்கள் பார்சன் பிரன்ஹாம்” என்று கூப்பிட்டதை என்னால் கேட்க முடிந்தது. நான் சத்தம் வந்த திசை நோக்கிப் பார்த்த போது சிகப்பு தொப்பி அணிந்த ஒரு நபர் நின்று கொண்டிருந்தார். நான் “ஹலோ, சகோதரனே எப்படி இருக்கிறீர்கள்”? என்று கேட்டுக் கொண்டிருந்தேன். அந்த நபர், “ஒரு நிமிடம் பொறுங்கள், என்னை உங்களுக்கு அடையாளம் தெரிகின்றதா?” என்று கேட்டார். நான், "சகோதரனே, எனக்குத் தெரியவில்லை என்று நினைக்கிறேன்.” என்றேன்.  207. அவன், “உங்களுக்கு நினைவிருக்கிறதா, ஒரு சமயம் நீர் என் வீட்டிற்கு வந்தீரே, என் அம்மா வீட்டிற்கு வெளியே வாசற்கதவண்டை நின்று காத்துக் கொண்டிருந்தார்களே?" என்று கூறினான். “நீங்கள் அந்த பையன் தானே?” என்றேன்.  208. அதற்கு அவன், "ஆம், நான் தான், நான்.... சுகமாக்கப்பட்டவன் நான் தான். மருத்துவர் என்னை பரிசோதித்து நான் நலமாக இருப்பதாகக் கூறினார்” என்றான். மேலும் அவன் "அது மாத்திரமல்ல, இப்பொழுது நான் இரட்சிக்கப்பட்டும் இருக்கிறேன் என்று கூறினான்.  209. அது என்ன? நண்பர்களே கவனியுங்கள். தேவன் காரியத்தின் இரு முனைகளிலும் கிரியை செய்கின்றார். அந்த சூனேமியாளிடம் பேசின அந்த அதே தேவன், கிணற்றண்டையில் இருந்த ஸ்திரீயிடம் " போய் உன் புருஷனை அழைத்துக் கொண்டு வா" என்று பேசின அந்த அதே தேவன், அந்த அதே ஸ்திரீ அவருடைய வஸ்திரத்தை தொட்டு அந்த மக்களின் மத்தியில் இருந்த அவரை திரும்பச் செய்தாளென்றால், அவர் தேவனாயிருக்கிறார்.  210. நான் உங்களுக்கு ஒன்றைக் காண்பிக்கட்டும். நான் ...... அங்கே பின்புறத்தில் சில கறுப்பு இன மக்கள் இருப்பதை நான் கவனித்தேன். இரண்டு, மூன்று சகோதரர் உள்ளனர் என்று நான் நம்புகிறேன். நான் இதை இப்பொழுது கூறவில்லை. பாருங்கள்?... ஆனால் கவனியுங்கள். எந்த ஒரு தேவனுடைய கிருபையானது (மன்னர்கள் மற்றும் அதிகாரம் படைத்தவர்களிடம் செல்லவில்லை ), ஆனால் ஒரு ஏழை, படிப்பறிவு இல்லாத, அங்கே உள்ளே ஒரு சிறு பாழடைந்த வீட்டில் வாழ்ந்துக் கொண்டிருந்த கறுப்பு நிற பெண்ணிடம் செல்லுமானால், தேவனுடைய கிருபையானது அந்த விமான பிரயாணத்தை நிறுத்தி தரையிறங்கச் செய்து .....  211. ஆகவே கவனியுங்கள். அந்த வீட்டை விட்டு நான் புறப்பட்டு வெளியே சென்றவுடன் ஒரு வாடகைக் காரை அமர்த்தினேன். நான் சுமார் இரண்டரை மணி நேரம் தாமதித்திருந்தேன். அப்பொழுது நான், “என்னை காப் (CAB) ஸ்டேஷனுக்கு அழைத்துச் செல்லுங்கள்” என்றேன். இல்லை,. காப் ஸ்டேஷன் அல்ல, விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்லும்படிக்குக் கூறினேன். “என்னால் முடிந்த வரைக்கும் சென்று நான் ஒரு விமானத்தைப் பிடிக்க வேண்டும்" என்று கூறினேன். இப்பொழுது, அது உலகப் போரிற்குப் பிறகான ஒரு காலமாகும். ஒரு விமானம் கிடைப்பதென்பது மிக அரிதாகும். நான் விமான நிலையத்துக்குள்ளாக செல்கையில், “கடைசி அழைப்பு, கெண்டக்கியிலுள்ள லூயிவில்லைச் சார்ந்த..... " என்று அறிவிப்பு சத்தம் வந்துக் கொண்டிருந்தது.  212. அது என்னவாயிருந்தது? அது ஒருக்கால் ABC எழுத்துக்கள் கூட தெரிந்திராத ஒரு பெண்ணின் விசுவாசத்திற்காக தேவன் செய்தது ..... ஆனால் அவள் தன்னுடைய ABCஐ அறிந்திருந்தாள். அது, எப்பொழுதும் கிறிஸ்துவை விசுவாசி (Always Believe Christ) என்பதாகும். பாருங்கள்? ஏனெனில் அந்த ஏழையான, படிப்பறிவில்லாத பெண்ணிற்கு அடுத்த வேளை உணவு எங்கிருந்து வரும் என்று கூடத் தெரியாத ஒரு நிலை. ஆனால், நேசித்த தேவனிடம் கொண்டிருந்த அவளுடைய உத்தமமானது ஒரு விமானத்தைத் தரையிறங்கச் செய்து, தன்னுடைய பையனுக்கு விசுவாச ஜெபம் ஏறெடுக்கப்படும் வரைக்கும் அந்த விமானம் நின்றிருக்கும்படி செய்தது. தேவனுடைய ஆவியானது உங்களைத் திருப்பிக் கொண்டிருந்து, நீங்கள் எவ்வளவாக சென்று விட முயற்சி செய்தாலும் சரி, அது உங்களைத் திருப்பிக் கொண்டு வரும். சகோதரனே, நீ தேவனை உனக்குள்ளாகப் பெற்றுக்கொள். அந்த மற்றொரு பாதையை உன்னால் நடந்து செல்லக் கூடாதிருக்கும். ஏதோ ஒன்று உன்னை திருப்பும். ஒரு விமானத்தையே அது நிறுத்தினது. ... அந்த அதேதேவன் தான் இன்றிரவும் இந்த கட்டிடத்தில் இருக்கின்றார். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? தேவனுடைய முழு சர்வாயுத வர்க்கத்தைத் தரித்துக் கொள்ளுங்கள். நீங்கள் அவரை விசுவாசிக்கிறீர்களா? ஓ, இயேசுவை நான் எவ்வளவாக நேசிக்கிறேன். ஓ, இயேசுவை நான் எவ்வளவாக நேசிக்கிறேன். ஓ, இயேசுவை நான் எவ்வளவாக நேசிக்கிறேன். ஏனெனில் அவர் முதலில் என்னை நேசித்தார். இங்கே எத்தனைகிறிஸ்தவர்கள் இருக்கின்றனர், உங்கள் கரங்களை உயர்த்துங்கள். இதைக்கூறுங்கள். அவரை ஒரு போதும் புறக்கணிக்கமாட்டேன் அவரை ஒரு போதும் புறக்கணிக்கமாட்டேன் அவரைஒரு போதும் புறக்கணிக்கமாட்டேன் ஏனெனில் அவர் என்னை முன்பு நேசித்ததால், (சகோதரன் பிரன்ஹாம் “ஓ இயேசுவை நான் எவ்வளவாக நேசிக்கிறேன்” மந்த ஓசையில் வாய்திறவாது பாடுகிறார் - ஆசி)  213. ஆனாலும் சாயங்காலத்திலே வெளிச்சமுண்டாகும். இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் மாறாதவராயிருக்கிறார். பெந்தெகொஸ்தேயன்று மணவாட்டி மரமானது மேலே வந்தது. அந்த மரத்தைத் தான் தாவீது கண்டான். அது நதிகளின் தண்ணீர்களண்டையில் நடப்பட்டிருக்கின்றது. பரிசுத்த ஆவியாகிய ஒரே நதி ; இந்த எல்லா நதிகளும் அதற்குள்ளாகப் பாய்ந்தோடுகின்றது. வரங்கள், ஆவிக்குரிய வரங்கள் அதற்குள்ளாகப் பாய்ந்தோடுகின்றது. அதனுடைய இலைகள் உதிராது. அது தன் கனியைப் பிறப்பிக்கும். அது சரியா? நினைவில் கொள்ளுங்கள். அது தன் காலத்தில் தன்னுடைய கனியைக் கொடுக்கும். அந்த பரிபூரண மரமாகிய கிறிஸ்து வந்தார். அவர் வந்த போது என்ன சம்பவித்தது? அவர்கள் அவரை வெட்டிப்போட்டு, அவரை ... (ஒருக்கால் நான் இங்கே தவறவிட்டுவிட்டேன் .... இங்கே ஏதோ ஒன்றைத் தவற விட்டேன். இங்கே சகோதரன் பென், இங்கே தான் என்று நினைக்கிறேன். நான்.....)  214. அவர்கள் அவரை வெட்டிச் சாய்த்து ஒரு ரோம மரத்தின் மீது தொங்க விட்டனர். ஆனால் அவர் மறுபடியுமாக உயிரோடெழுந்தார். அது சரியே. அவர் இன்றைக்கு இங்கே இருக்கின்றார். அது சரி. அவர் இங்கே பூமியில் இருந்த போது, அவர் நின்று மக்கள் திரளை நோக்கிப் பார்த்தார். ஒரு நாளிலே அவர் மக்கள் திரளின் மத்தியில் சென்று கொண்டிருந்த போது ஒரு சிறு ஸ்திரீ அவ்வழியாக வந்தாள். அவர்கள், அந்த நாளில் மருத்துவர்கள், தத்துவஞானிகள், மற்றும் அந்த ஆசாரியர்கள் "அவன் ஒரு மனரீதியாக மக்களின் கருத்தை அறிபவன். அவன் ஒரு பெயல்செபூல், குறிசொல்பவன்” என்று கூறினர். அவர்கள் இன்னுமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அந்த ஆவி இன்னுமாக இருக்கின்றது. ஆனால் தேவனுடைய ஆவியும் கூட இன்னுமாக ஜீவித்துக் கொண்டிருக்கின்றது. பாருங்கள்? அவர் தம்முடைய மணவாட்டிக்காக வருகின்றார். “நான் செய்கின்ற கிரியைகளை நீங்களும் செய்வீர்கள்”.  215. என்னை அறியாதிருக்கின்ற மற்றும் உங்களைக் குறித்து எனக்கு ஒன்றுமே தெரியாது என்று அறிந்திருக்கின்ற வியாதியுள்ள மக்கள் இங்கே எத்தனைப்பேர் இருக்கிறீர்கள்? உங்கள் கரங்களை உயர்த்துங்கள். எல்லாவிடங்களிலும், எல்லாவிடங்களிலும் கரங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. இந்தக் கேள்வியானது ஜெபர்சன்வில்லிலிருந்து வந்துள்ள ஒரு நபருக்கோ அல்லது நான் அறிந்துள்ள ஒரு நபருக்கு வந்திருக்கு மானால் பரவாயில்லை. அதற்கு எந்த கவனத்தையும் செலுத்த வேண்டாம். அதைக்குறித்து எண்ணாதீர்கள். உங்கள் கரத்தை மேலே உயர்த்தி “இல்லை” என்று கூறுங்கள். அதைப் பொருட்படுத்தாதீர்கள்.  216. நான் . . . அவருடைய பிரசன்னத்தை மாத்திரம் உணருகிறேன். அவர் இங்கே இருக்கின்றார் என்பதை நான் அறிவேன். கவனியுங்கள். இயேசு, “சோதோமின் நாட்களில் நடந்தது போல மனுஷகுமாரன் வரும் காலத்திலும் அப்படியிருக்கும்” என்று கூறினார். பாருங்கள்? அது என்ன? சோதோமின் காலத்தில் இருந்தது போலவே ஒரு காலம். சோதோமில் இருந்தது போலவே, சோதோமின் பாவத்தைப் போலவே இருக்கும் தாறுமாறைக் கவனியுங்கள். இந்த தேசத்தைப் பாருங்கள். மற்ற தேசங்களைப் பாருங்கள்.  217. லாஸ் ஏஞ்சல்ஸில் சமீபத்தில் நான் ஒரு செய்தித்தாளைவாசித்துக் கொண்டிருந்தேன். கடந்த வருடத்தில் ஆண்புணர்ச்சிக்காரர் நாற்பது சதவிகிதம் அதிகரித்துள்ளனர். ஏன்? ஆண்களின் இயற்கையான நாட்டத்தின் தன்மை மாறுகின்ற அளவிற்கு பெண்கள் தங்கள் உடலை வெளிக்காண்பித்துள்ளனர். ஆண்புணர்ச்சிக்காரர், “சோதோமின் நாட்களில் நடந்தது போல ......'' கவனியுங்கள். நீதிமானாகிய லோத்தும் தன்னுடைய குடும்பமும் அங்கே இருந்த போது, அவன் அந்த நகரத்தின் மேயர் ஆனான் அல்லது அந்த நகரத்தின் வாசலில் இருந்து ஒரு நீதிபதியாக ஒரு மகத்தான அறிவாற்றல் திறமிக்கவனாக இருந்தான். ஆனால் அந்த இடத்தின் பாவங்கள் அவனுடைய நீதியான ஆத்துமாவை அனுதினமும் வாதித்தது.  218. முடிவின் சமயத்திற்கு முன்னர் ஒரு நாளிலே தெரிந்து கொள்ளப்பட்ட சபையாகிய ஆபிரகாம் வெளியே அழைக்கப் பட்டான். அது சோதோமிற்குள்ளாகச் செல்லவில்லை. அது சோதோமிற்கு வெளியே சென்றது. இப்பொழுது, எப்பொழுதுமே இருக்கின்ற இந்த மூன்று வகையான மக்களைக் கவனியுங்கள். ஒரு விசுவாசி, ஒரு பாவனை விசுவாசி மற்றும் ஒரு அவிசுவாசி எப்பொழுதுமே மக்களின் மத்தியில் இருக்கின்றனர். அது, ஆபிரகாம், லோத்து மற்றும் அந்த சோதோமியர், இப்பொழுது கவனியுங்கள். ஒவ்வொருவரும் ஒரு செய்தியைக் கொண்டிருந்தனர். தெரிந்து கொள்ளப்பட்ட சபையாகிய ஆபிரகாமிடத்தில் மூன்று தூதர்கள் வந்தனர். அவர்களில் இரண்டு பேர் சோதோமிற்குச் சென்று லோத்துவையும் அவனுடைய மனைவி மற்றும் குமாரத்தி களையும் வெளியே கொண்டு வந்தனர். லோத்தின் மனைவி திரும்பிப் பார்த்தாள். சோதோமியர் எரிக்கப்பட்டனர்.  219. அவர்களில் இரண்டு பேர் - ஒரு நவீன பில்லி கிரஹாம் மற்றும் ஒரு ஓரல் ராபர்ட்ஸ், அவனுடைய செய்திகள் சோதோமிற்குள்ளாகச் சென்று வார்த்தையை பிரசங்கித்து அந்த வார்த்தையைக் கொண்டு அவர்களைக் குருடாக்கினர். வார்த்தையை அவிசுவாசிப்பதென்றால் நீ குருடாயிருக்கின்றாய் என்பதே. சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பது ஒரு அவிசுவாசியை குருடாக்குகின்றது. அதைத் தான் பில்லி கிரஹாம் மற்றும் அந்த மகத்தான சுவிசேஷகர்கள் செய்துக் கொண்டிருக்கின்றனர். குருடாக்கிக்கொண்டிருக்கின்றனர். 220. ஆனால் தெரிந்துக்கொள்ளப்பட்டவனாகிய ஆபிரகாமுடன் ஒருவர் தங்கிவிட்டார். அவர் அவனுக்கு ஒரு அடையாளத்தை அளித்தார். அவர் அவனை சந்தித்ததற்கு முன்னர் ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு முன்னர் அவன் ஆபிராமாயிருந்தான் என்பதை நீங்கள் நினைவில் கொண்டுள்ளீர்கள். அதற்கு முன்னார் சாராள், சா-ரா-ய் என்று இருந்தாள். ஆனால் இப்பொழுதோ ஆ-பி-ர-கா-ம் மற்றும் சா-ரா-ள் ஆக உள்ளனர். பாருங்கள்? ஆகவே இந்த ஒருவர் அங்கே உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தார். அவர், "ஆபிரகாமே, உன் மனைவி சாராள் : இளவரசி எங்கே?” என்று கேட்டார். அதற்கு அவன், “அவள் கூடாரத்தில் இருக்கிறாள்” என்றான். அந்தக் கூடாரம் அந்த தூதனுக்குப் பின்புறமாக இருந்தது.  221. அவர், “ஆபிரகாமே” என்றார். இப்பொழுது நினைவில் கொள்ளுங்கள். சாராள் தொண்ணூறு வயது சென்ற வளாகவும், ஆபிரகாம் நூறு - தொண்ணூற்றொன்பது வயது சென்றவனாகவும் இருந்தார்கள். அவர், “நான் உன்னிடம் வருகைத் தரப்போகிறேன்" என்றார். (நான், பெயர்ச் சொல்லினிடத்தில் பயன்படுத்தப்பெறும் சொல், pronoun) “நான் உன்னிடத்தில் வாக்குத்தத்தமாக சொல்லியிருந்தபடியே ஒரு உற்பவக்காலத் திட்டத்தில் உன்னிடத்திற்கு வருகைத் தரப்போகிறேன். வேறு விதமாகக் கூறினால் சாராள் இந்தக் குழந்தையைப் பெற்றெடுக்கப்போகிறாள்.  222. அப்பொழுது அவள் கூடாரத்தில் இருந்த அவள் நகைத்தாள். பாருங்கள். அவள் வயது சென்றவளாக இருந்தாள். அவள், "என் ஆண்டவனோடு எனக்கு இன்பம் உண்டாயிருக்குமோ” என்றாள். அவள் கணவனாகிய ஆபிரகாம், மேலும் அவள், "அவருக்கும் மிக அதிக முதிர் வயதாகிவிட்டதே'' என்றாள். ஏன், அவள் .... அவர்கள் கணவனும் மனைவியுமாக - ஒருக்கால் இருபது வருடங்களாக அவர்களுக்குள் கணவன் மனைவியாக உறவு கொள்ளாமல் இருந்திருக்கலாம். பாருங்கள்? அவர்கள் எல்லாவற்றையும் தாண்டி மிக வயது சென்றவர்களாக இருந்தனர். அவள், “எனக்கா?” என்று கூறி நகைத்தாள்.  223. அப்பொழுது அந்தத் தூதன், தன்னுடைய முதுகு திரும்பியிருந்த நிலையிலேயே, “சாராள் ஏன் நகைத்தாள்?" என்று கேட்டார். இதைக்குறித்து என்ன? மனோதத்துவத்தின் மூலமாகச் சிந்தனைகளை அறிவதா இது? “ஏன் சாராள் நகைத்தாள்?" சாராள் வெளியே ஓடி வந்து “நான் நகைக்கவில்லை'' என்றாள். அவள் மிகவும் பயந்திருந்தபடியால் அப்படிச் சொன்னாள். அவர், "ஆம், நீ நகைத்தாய்" என்று கூறினார். 224. சாராள் தன்னுடைய கணவனாகிய ஆபிரகாமின் நிமித்தமாகத் தான் உயிர் பிழைத்தாள். இல்லையென்றால் அவள் சரியாக அந்த இடத்திலேயே அழிந்து போயிருப்பாள். அவள் அதனுடைய பாகமாக இருந்தாள். அதே போல சபை கிறிஸ்துவின் பாகமாக இல்லாதிருக்குமானால், அதனுடைய அவிசுவாசத்தினிமித்தமாக சரியாக இப்பொழுதே அழிந்து போயிருக்கும். ஒன்றுமே செய்யமுடியாது. ஆபிரகாமின் நிமித்தமாக அவரால் சாராளை அகற்றிப்போடமுடியவில்லை. கிறிஸ்துவின் நிமித்தமாக அவரால் சபையை அகற்றிப் போட முடியவில்லை. இரத்தமானது இன்னுமாக அங்கேயே இருக்கின்றது (பாருங்கள்? அது சரியே), அதன் பக்கமாக அது இருக்கின்றது.  225. இப்பொழுது கவனியுங்கள். இயேசு ..... இப்பொழுது அவன் இந்த மனிதனை என்னவென்று அழைத்தான் என்பதைக் கவனியுங்கள். லோத்து - அல்லது லோத்து..... அந்தத் தூதர்கள் லோகத்தை வெளியே அழைத்து வந்தனர். கவனியுங்கள். இந்த தூதனைத் தொழுது கொள்ள ஆபிரகாம் சென்றான். அவரை ஏலோகிம் என்று அழைத்தான். அது என்னவாயிருந்தது? அந்த இளங்கன்றின் சாப்ஸ், ஒரு ஆட்டுக்குட்டி - இல்லை ஒரு இளங்கன்றின் இறைச்சியைச் சாப்பிட்டார். அவர் பாலைக்குடித்து அப்பத்தை, ஒருக்கால் சோள ஆகாரத்தை, அப்பத்தைச் சாப்பிட்டார். சாராள் அவைகளைச் சமைத்தாள். அவர் அப்பத்தைச் சாப்பிட்டு, மாட்டின் பாலைக்குடித்து, இளங்கன்றின் இறைச்சியைப் புசித்தார் (அது சரி), அவர் அங்கே நின்று கொண்டிருந்தார். ஆபிரகாம், ஆகவே ஆபிரகாம் அவரை ஏலோகிம் என்று அழைத்தான். அவர் யாரென்று அவனுக்குத் தெரிந்திருக்க வேண்டும். ஏனென்றால் அவன் தான் அவரிடத்தில் பேசினான். அது சரி தானா என்று பாருங்கள். ஏலோகிம், பெரிய எழுத்து க-ர்-த்-த-ர் துவக்கத்தில் இருந்த அதே கர்த்தர்.  226. அது என்னவாயிருந்தது, இயேசு "லோத்தின் நாட்களில் நடந்தது போல மனுஷகுமாரன் வரும் காலத்திலும் நடக்கும்” என்று கூறினார். ஆதியில் வார்த்தையாக இருந்த ஏலோகிம், தாம் இங்கே இருந்த விதமாகவே மாம்சத்தில் வெளிப்படுத்தப்படுவார். அல்லேலூயா. ஏலோகிம் என்றால், நான் இருந்தேன் என்றல்ல ; இருக்கிறேன் என்பதே. பாருங்கள்?  227. அதே விதமாகவே அவர் இன்றிரவும் இங்கே இருக்கின்றார். நீங்கள் அதை விசுவாசிக்கின்றீர்களா? உண்மையாகவே அதை விசுவாசிக்கிறீர்களா? இந்த கட்டிடத்தில் என்னை அறிந்திராத யாராவது ஒருவர், பரிசுத்த ஆவியானவர் தாமே ..... நீங்கள் அப்படியே .... அந்த ஸ்திரீ இயேசுவை சரீரப்பிரகாரமாக தொடவில்லை. ஆனால் அவளுடைய விசுவாசம் தான் அவரைத் தொட்டது என்று எத்தனைப் பேர் விசுவாசிக்கிறீர்கள்? பாருங்கள்? அது என்னவாயிருந்தது? வஸ்திரம் தான், நிச்சயமாக, குருடனான பர்திமேயுவும் அதையே தான் செய்தான். பாருங்கள்? அவளுடைய விசுவாசம் அவரை நிறுத்தினது. ஆகவே இப்பொழுது கர்த்தருக்குச் சித்தமானால் நான் இங்கிருந்து புறப்படுவதற்கு முன்னர் “அப்பொழுது இயேசு நின்றார்" என்பதின் பேரில் பேச விரும்புகிறேன். 228. இந்தப் பெரிய வஸ்திரம், பாலஸ்தீனியர்களின் வஸ்திரமானது ... மிகவும் பெலவீனமாயிருந்த அந்த ஸ்திரீ கூட்டத்தினூடாக நெருக்கித் தள்ளி வந்து அவருடைய வஸ்திரத்தைத் தொட்டாள். அவள், "என்னால் அதைத் தொடக்கூடுமானால் ....” என்றாள்.  229. அவர்களெல்லாரும் “ரபீ' என்று கூறிக்கொண்டிருந்தனர். எல்லாவிதமான ஜனங்களும் குழுமியிருந்த அந்த மக்கள் கூட்டத்தில் அவரைத் தீர்க்கதரிசி என்றும் வஞ்சிக்கிறவர் என்றும் அவர்களால் கூற முடிந்த எல்லாப்பெயர்களையும் கொண்டு அவரை அழைத்துக் கொண்டிருந்தனர்.  230. ஆகவே அவர் அந்த இடத்திலே சென்றுக்கொண்டிருந்த போது சடுதியாக நின்றார், “என்னைத் தொட்டது யார்? என்னைத் தொட்டது யார்? யாரோ என்னை தொட்டார்கள்” என்று கூறினார்.  231. “ஓ எல்லோருமே உம்மைத் தொடுகிறார்கள். என்னே., 'சிறப்புத் தன்மை கொண்ட நீர் தாமே” என்னைத் தொட்டது யார்' என்று கேட்கிறீரே?' என்று பேதுரு அவரைக் கடிந்து கொண்டான்.  232. அவர், "ஆனால் நான் பலவீனமடைந்ததை உணர்ந்தேன்' என்று கூறினார். அவரிடமிருந்து வல்லமைப் புறப்பட்டுச் சென்றது. அவர் ஜனத்திரளை சுற்றுமுற்றும் பார்த்து அந்த எளிமையான ஸ்திரீயைக் கண்டார். அப்பொழுது அவர், "உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது” என்று கூறினார்.  233. இப்பொழுது வேதாகமம், எபிரேயர் புஸ்தகத்தில் இயேசு கிறிஸ்து சரியாக இப்பொழுது தாமே நம்முடைய பலவீனங்களைக் குறித்து தொடப்படக்கூடிய பிரதான ஆசாரியராக (அது சரி தானே?) இருக்கின்றார். அது சரியல்லவா? ஒரு பிரதான ஆசாரியராக நம்முடைய பலவீனங்களைக் குறித்து பரிதபிக்கக்கூடுமானால் ..... அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கையில் அவர் எப்படியாகக் கிரியை செய்வார், பாருங்கள். அவர் அந்த அதே பிரதான ஆசாரியராக இருப்பாரானால், அப்படியானால் அவர் அதே விதமாகக் கிரியை செய்வார். அவர் அதே விதமாகத்தான் உள்ளார் என்று வேதம் கூறுகிறது. அதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அப்படியானால் உங்களால் வார்த்தையை புறம்பே தள்ளிவிட்டுச் செல்ல முடியாது. அந்த வார்த்தை அந்த விதமாகக் கூறியுள்ளது.  234. இப்பொழுது நமக்கு ... அவரைத்தொடத்தக்கதான போதிய விசுவாசம் உங்களுக்கு இருக்கின்றதா? நீங்கள் அவரைத் தொடுவீர்களானால் அப்பொழுது நான் அவரிடமாக என்னை ஒப்படைத்து அவர் என்னையும் உங்களையும் உபயோகித்து கூடியுள்ள எஞ்சிய ஜனத்தாருக்கு விசுவாசத்தைக் கொண்டு வர ஏதுவாகும். அது ஒரு சவாலாகும். அப்படித்தானே? நீங்கள் அவரை விசுவாசிக்கிறீர்களா? அதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அது உங்கள் விசுவாசத்தைப் பலப்படுத்தி, உங்களையும் என்னையும் அல்ல, ஆனால் ஏலோகிமாகிய அவரைக் காணும்படிக்கு செய்யுமல்லவா? அது என்ன? வார்த்தை . அது என்னவாயிருக்கிறது? அந்தப் பாதுகாப்பு, போர்த்தளவாடம், தேவனுடைய சர்வாயுத வர்க்கம், உங்கள் மாம்சம் என் மாம்சம் தேவனுடைய கிரியைகளை காணும்படிக்காக மாம்சத்தில் வெளிப் படுத்தப்பட்ட தேவனுடைய வார்த்தை.  235. பரலோகப்பிதாவே, ஒருக்கால் நான் தவறு செய்திருக்கலாம். ஒருக்கால் நான் ஒரு தவறான சவாலை மேற்கொண்டிருக்கலாம். அப்படி நான் செய்திருந்தால், கர்த்தாவே, நீர்தாமே என்னை மன்னியும். அவ்விதமாகச் செய்ய வேண்டும் என்று நான் எத்தனிக்கவில்லை. ஆனால் ஏதோ ஒன்று அதைச் செய்யும்படிக்கு என்னை வழி நடத்துகிறது. ஆகவே பிதாவே, அது நீராயிருக்குமானால், அப்படித்தான் என்று நான் நிச்சயிக்கின்றேன். நீர் தாமே உம்மைத் தெரியப்படுத்தும். கல்வியறிவு எனக்கு இல்லாதிருந்தும் நான் பேசுகின்ற இந்த காரியங்கள் உண்மையே என்று உம்முடைய தெரியப்படுத்துதலினாலே மக்கள் அறிந்து கொள்வார்களாக. அவை உம்முடைய வார்த்தை தான். பிதாவே, இதை அருளும். (ஒரு தீர்க்கதரிசனம் உரைக்கப்படுகின்றது - ஆசி)  236. ஆமென். அதைக் கேட்டீர்களா? நினைவில் கொள்ளுங்கள். ஒரு முறை ..... ஒரு நாளிலே சேனையானது வந்துக் கொண்டிருந்தபோது தேவனுடைய ஆவியானது ஒரு மனிதனின் மீது விழுந்து எப்படி அங்கே செல்ல வேண்டுமென்றும், எப்படி காத்திருக்க வேண்டும் என்றும் எப்படி அவர்கள் அந்த சேனையை முறியடிப்பார்களென்றும் கூறினது. அவர்கள் அதைச் செய்தனர். அதைப் பேசினது யாராயிருந்தது, தாவீது என்று நினைக்கிறேன்? அல்லது அவர்களில் ஒருவனா? அப்பொழுது தேவனுடைய ஆவி அவர்கள் மத்தியில் இருந்து ஒரு மனிதனின் மீது வந்து அவர்கள் எப்படித் தப்பித்துக் கொள்ள வேண்டுமென்று கூறினது. அது என்னகூறினதென்று கேட்டீர்களா...?"என்னைத் தேடுங்கள்.....' அவர் தான் வார்த்தை. வார்த்தையோடு தரித்திருங்கள். வார்த்தை இதை வாக்குத்தத்தம் செய்திருக்கிறது. இப்பொழுது, நான் என்ன செய்ய முயற்சிச் செய்து கொண்டிருக்கிறேன்? தேவனை அவருடைய வார்த்தையைக் கொண்டு எடுத்துக் கொள்ளுதல்.  237. இப்பொழுது என்னால் ...... இங்கேயுள்ள மக்களாகிய உங்களில் சிலரை நான் அறிவேன், ஆனால் நீங்கள் ஜெபியுங்கள். அது நான் அறிந்துள்ள மக்களாகிய உங்கள் மிது அது வருமானால் ஜெபர்சன்வில்லிலிருந்து வருகின்ற மக்கள் - அதைச் சுற்றிலும் இருக்கின்ற நான் அறிந்துள்ள மக்கள், நீங்கள் ஜெபிக்க வேண்டாம். இந்த முறை அதை விட்டு விடுங்கள். நான் அறியாதிருக்கின்ற மக்களுக்கு இந்த ஜெபமானது இருக்கட்டும். பாருங்கள், நீங்கள் எனக்காக மாத்திரம் ஜெபியுங்கள். உங்கள் ஜெபம் எனக்குத் தேவையாயிருக்கிறது. 238. ஒரு கணப்பொழுதிற்கு மட்டுமே, அவர் சீக்கிரமாக வந்து கொண்டிருக்கின்றார், பயபக்தியாயிருங்கள். அங்கே என் வலது பக்கத்தில் ஒரு பெண் அமர்ந்திருக்கிறாள். அவளுடைய வாயில் கைக்குட்டையைக் கட்டியிருக்கின்றாள். நாங்கள் ஒருவருக் கொருவர் அந்நியராயிருக்கிறோம் என்று நினைக்கிறேன். உங்களை எனக்குத் தெரியாது. அவர் உங்களை அறிந்திருக்கிறார். அது சரி. எனக்கு தெரிந்திருக்காத பெண் ஒருவள் தேவனோடு தொடர்பு கொண்டிருக்கின்றாள். அவளுக்கும் என்னைத் தெரியாது. எனக்கும் அவளைத் தெரியாது. ஆனால் பரிசுத்த ஆவியானவர் எங்கள் இருவரையும் அறிவார். இப்பொழுது நீங்கள் ஏதோ ஒன்றிற்காக ஜெபித்துக் கொண்டிருந்தீர்கள். அங்கே பெரும்பாடுள்ள ஸ்திரீக்கு அவர் செய்தது போல (பாருங்கள்?) நீங்கள் எதற்காக ஜெபிக்கிறீர்கள் என்று பரிசுத்த ஆவியானவர் எனக்கு வெளிப்படுத்தினால் நீங்கள் விடுதலையாவீர்கள் என்று விசுவாசிக்கிறீர்களா?  239. ஒரு ஆவிக்குரிய பிரச்சனை உங்களைத் தொல்லைப் படுத்திக் கொண்டிருக்கின்றது. அது சரி தானே? அப்படி யானால் உங்கள் கரத்தை உயர்த்துங்கள். இனிமேல் அது உங்களைத் தொல்லைப்படுத்தாது. நீங்கள் யார் என்பதை தேவன் அறிந்திருக்கிறார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அது உங்களுக்கு உதவிகரமாக இருக்குமா? மில்ட்ரெட் ரோஸ், தேவனிடத்தில் விசுவாசம் வையுங்கள். பாருங்கள். அப்படியே விசுவாசிக்க மாத்திரம் செய்யுங்கள். நீங்கள் இந்த இடத்தைச் சேர்ந்தவரும் அல்ல. நீங்கள் தெற்கு கரோலினாவைச் சேர்ந்தவர்கள். அது உண்மை . அப்படியே விசுவாசம் கொள்ளுங்கள். சந்தேகப்படாதீர்கள். பாருங்கள்?  240. அது அப்பெண்ணிற்கு பின்புறமாக அமர்ந்திருக்கும் பெண்ணைத் தொட்ள்ளது. அப்பெண்ணும் எனக்கு அந்நியப் பெண்ணாவாள். ஆனால் தேவன் எங்கள் இருவரையும் அறிந்திருக்கிறார். நீங்கள் சிக்கலில் உள்ளீர்கள். அந்தப் பெண்ணின் மீது ஒரு கறுப்பு நிழல் படர்ந்திருக்கிறது. எனக்கு அவளைத் தெரியாது. அவள் எனக்கு அந்நியப் பெண்ணாவாள். அடுத்த பெண் தன் கரங்களை இதைப் போன்று உயர்த்தியுள்ளாள். ஆம், உங்கள் பிரச்சனை என்ன என்று தேவன் எனக்கு வெளிப்படுத்துவார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நான் அவருடைய தீர்க்கதரிசி அல்லது அவருடைய ஊழியக்காரன் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அப்படி விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் நரம்புத் தளர்ச்சியுற்றிருக்கிறீர்கள். அது சரி. அது சரிதான் என்றால் உங்கள் கரத்தை உயர்த்துங்கள். இனிமேல் அது உங்களைத் தொந்தரவு செய்யாது. உங்கள் விசுவாசம் உங்களை இரட்சித்தது. நீங்கள் இந்த நாட்டைச் சேர்ந்தவர்களாவீர். ஃபாயெட்வில் என்ற இடத்திலிருந்து வந்துள்ளீர்கள். அது சரி. நான் அவருடைய தீர்க்கதரிசி என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் யார் என்று தேவனால் என்னிடம் கூறமுடியும் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? திருமதி. ஹாரிசன், அப்படியானால் வீடு சென்று சுகமடைவீர்களாக நீங்கள் விசுவாசிக்கிறீர்களா?  241. சரியாக இங்கே ஒரு பெண் உட்கார்ந்து என்னை நோக்கிப் பார்த்துக் கொண்டிருக்கிறாள். இந்தப் பெண்ணிற்கு நான் அந்நியனாவேன். சகோதரியே உங்களை எனக்கு தெரியாதல்லவா? சரி, நான் அவருடைய தீர்க்கதரிசி அல்லது அவருடைய ஊழியக்காரன் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? உங்கள் பிரச்சனை என்னவென்று தேவன் எனக்கு வெளிப்படுத்துவாரனாால், உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிப்பீர்களா? உங்களுக்கு அநேகக் கோளாறுகள் உள்ளன. முதலாவதாக நீங்கள் உயர் இரத்த அழுத்தத்தைக் கொண்டிருக்கிறீர்கள். அடுத்ததாக உங்களுக்கு இதயக் கோளாறு உள்ளது. அடுத்ததாக நீங்கள் நரம்புத்தளர்ச்சி நிலையில் உள்ளீர்கள். பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை பெறவேண்டுமென்று நீங்கள் ஜெபித்துக் கொண்டிருக்கிறீர்கள். அது உண்மையே. அது சரியென்றால் உங்கள் கைக்குட்டையை உயர்த்துங்கள். தேவன் உங்களை அறிந்திருக்கிறாரென்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அது சரி ஐயா, திருமதி. ஜாக்சன், சரி, வீடுசென்று சுகமாயிருங்கள். அவர்களில் ஒருவன், அவர்களில் ஒருவன் நானும் அவர்களில் ஒருவன் என்று கூறிட முடிந்ததால் சந்தோஷமே  243. அதைக்குறித்து உங்களுக்கு சந்தோஷம் தானே? ஓ, என்னே. அது என்ன? பரிசுத்த ஆவியே. அது இப்பொழுது உங்களோடு இருக்கிறது. அதோ அது மறுபடியுமாக காணப்படுகிறது. நாம் விசுவாசிப்போமாக. ஒருவரின் கரத்தை ஒருவர் பிடித்துக் கொள்ளுங்கள். கரத்தைப் பிடியுங்கள். தொடர்பு கொள்ளுங்கள். மற்றொருவரின் கரத்தைப் பிடித்துக் கொள்ளுங்கள். பரிசுத்த ஆவி இங்கேயுேள்ளது என்று நீங்கள் அறிந்து கொள்வதற்கு மாத்திரமே.  244. இப்பொழுது கவனியுங்கள். நண்பர்களே, ஆவிக்குரிய புரிந்து கொள்ளுதலை கொண்டுள்ள எந்த ஒரு நபரும் இங்கே இல்லை. ஆனால் ஏதோ ஒரு சிறிய வினோதமான உணர்வு இப்பொழுது உங்களுக்குள்ளாகச் செல்வதை அறிந்திருக்கிறீர்கள். அது என்ன? அது தான் தேவனுடைய வார்த்தையாகும். அது ஆவியின்ரூபத்தில் இருக்கும் தேவனாகும். அந்த வார்த்தையாகும். தேவன் உங்களை அரணிட்டு பாதுகாத்தலாகும்.  245. அங்கே சிறுநீர்ப் பையை சுற்றி இருக்கும் பிராஸ்ட்டேட் சுரப்பி நோயிலிருந்து இப்பொழுது சுகமாக்கப்பட்ட ஒரு மனிதனை என்னால் காணமுடிகின்றது. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. அது எல்லாமே... சர்க்கரை நோய், அங்கே இருக்கின்ற பெண்ணே , அதைக் குறித்து மறந்து விடு. வீடு செல், நீ சுகமானாய், அது கட்டிடத்தில் எல்லா இடங்களிலும் செல்கின்றது. நீங்கள் விசுவாசிக்கிறீர்களா?  246. இப்பொழுது வேதாகமம் கூறியுள்ளது .... கவனியுங்கள். அந்த அதே வேதாகமானது, “நான் செய்கின்ற கிரியைகளை நீங்களும் செய்வீர்கள்” என்று வாக்குரைத்திருக்கிறதே. அதைத் தான் அவர் செய்தார். ஆம், அதே வேதாகமம் இதையும் கூறியுள்ளது. அது அவர்கள் . . . விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் பின் தொடரும் ; கைகளை வைப்பார் களேயானால்....." என்பதே. நீங்களெல்லோரும் விசுவாசிகளே. நீங்கள் ஒருவரின் ஒருவர் மேல் உங்கள் கரங்களை வைத்துள்ளீர்கள். "வியாதியஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள். அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள். 247. பரலோகப் பிதாவே, சாத்தான் தோற்கடிக்கப்பட்ட ஒருவன் என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம். எங்கள் மகத்தான தலைமை அதிகாரியான காப்டன், இயேசு கிறிஸ்து இங்கே இருக்கின்றார். இங்கே வார்த்தை மாம்சமாக்கப் பட்டுள்ளது. அது பரிசுத்த ஆவியின் பிரசன்னத்தினால் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. எங்களுக்குள் கிரியை செய்வது அந்த பரிசுத்த ஆவியே, அந்த அதே பரிசுத்த ஆவி எங்களை பெந்தெகொஸ்தே அக்கினியினூடாகக் கொண்டு வந்தது. பெந்தெகொஸ்தே அந்நிய பாஷையின் வழியாக எங்களைக் கொண்டு வந்தது. பெந்தெகொஸ்தே வியாக்கியானத்தின் வழியாக எங்களைக் கொண்டு வந்தது. அது சபையில் அப்போஸ்தலரையும் அமைத்தது. இங்கே இந்த பெரிய கன்வென்ஷன் கூட்டத்தில் அது தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இங்கே போதகர்கள், சுவிசேஷகர்கள், மற்றும் வரங்களும் எல்லாவிடங்களிலும் கிரியை செய்துக் கொண்டிருக்கிறது. 248. கர்த்தாவே, நாங்கள் உம்மைக் காண்கிறோம். நாங்கள் முடிவு காலத்தில் இருக்கிறோமென்றும், மக்களுக்கு பலம் தேவைப்படுகிறதென்றும் நாங்கள் அறிந்திருக்கிறோம். சாத்தான் பாய்ந்து தாக்க அவர்களை நோக்கி வந்துக் கொண்டிருக்கிறான். ஆகவே சரியாக இப்பொழுதே அவர்களுடைய கரங்களிலும், இருதயங்களிலும் தேவனுடைய வார்த்தையை நான் வைக்கின்றேன். இந்த வார்த்தையைக் கொண்டு சாத்தானை நாங்கள் தோற்கடிக்கின்றோம். இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே இந்த மக்களை விட்டு வெளியே வா. அவர்கள் கரங்களைப் பார். அவர்களுடைய விசுவாசத்தைப் பார். சாத்தானே, நீ தோற்கடிக்கப்பட்டாய். இயேசுவின் நாமத்தினாலே அவர்களை விடு. வெளியே வா. ஜீவிக்கின்ற தேவனைக் கொண்டு நான் உனக்கு ஆணையிடுகிறேன். நேசிக்கிறேன், நேகிக்கிறேன் முந்தி அவர் என்னை நேசித்ததால்; (நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? அவர் உங்களை நேசிக்கிறார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அப்படியானால் உங்கள் கரங்களை உயர்த்துங்கள்...) ... இரட்சித்தார் கல்வாரி மரத்தில் நேசிக்கிறேன், நேசிக்கிறேன் (ஓ, தேவனுக்கு ஸ்தோத்திரம்) முந்தி அவர் என்னை நேசித்ததால் , (அவர் என்ன செய்தார்?) சம்பாதித்தார் என் இரட்சிப்பை கல்வாரி மரத்தில் நான் உறுதிக் கொள்கிறேன். நான் விசுவாசிக்கிறேன் நான் (அப்பாலே போ சாத்தானே) உறுதி கொள்கிறேன் விசுவாசிக்கிறேன் நான் உறுதிகொள்கிறேன், நான் விசுவாசிக்கிறேன் இயேசு இப்பொழுது என்னை சுகமாக்குகிறார் என்று  249. சகோதரன் ஒரு நாள் ஒரு சொப்பனத்தைக் கண்டதாகக் கூறினார். அங்கே ஒரு சிறு பொடிப் பிசாசு நின்று கொண்டிருந்ததைக் கண்டாராம். அந்த சிறு பிசாசு மேலும் கீழும் குதித்துக்கொண்டிருந்தது. அவன் “பூ...'' (Boo) என்றான். அப்பொழுது இவர் பின்புறமாகக் குதித்தார். அவர் பின்புறமாகக் குதித்த ஒவ்வொரு சமயமும் இவர் சிறியவராகிவிட்டார். அந்தப் பிசாசு பெரிதாக வளர்ந்தான். ஆகவே பிசாசு "பூ...'' (Boo) என்று கூச்சலிட்டான். இவர் பின்புறமாகக் குதித்தார். அப்பொழுது இவர் அவனை சண்டையிட வேண்டுமென்று அறிந்திருந்தார்.  250. ஆகவே அவர், “நான் ஒரு நாற்காலி அல்லது ஏதோ ஒரு பொருளை எடுக்க வேண்டும்” என்று நினைத்தார். அப்பொழுது வேதாகமம் இருப்பதைப் பார்த்தார். மேலும் பிசாசு “பூ...'' (Boo) என்று கூச்சலிட்டான். அப்பொழுது இவர் அவனைப் பார்த்து “பூ...'' (Boo) என்று திரும்பிச் சொன்னார். அப்பொழுது பிசாசு உருவத்தில் சிறியவனாக ஆரம்பித்தான். மேலும் இவர், “பூ.பூ.பூ.பூ.பூ.” என்று சத்தமிட்டு அவனை அடித்து கீழே தள்ளினார். 251. அது தான் காரியமாகும். அந்த தேவனுடைய வார்த்தை . அவன் “பூ .......” என்று கூச்சலிடும்போது நீ திரும்பி “பூ.....” என்று கூச்சலிடு. அவன் “நீ வியாதியாயிருக்கிறாய்” என்று கூறும் போது, நீ, “எழுதியிருக்கிறதே; அவருடைய தழும்புகளால் நான் குணமாகிவிட்டேன்” என்று கூறு. ஆமென். மகிமை, நான் பக்தியாய் உணருகிறேன். இன்னும் நள்ளிரவு கூட ஆகவில்லை. இன்னும் பக்தியாக உணருகிறேன். ஆமென். அவர்களில் ஒருவன், அவர்களில் ஒருவன், நானும் அவர்களின் ஒருவன் என்று கூறிட முடிந்ததால் சந்தோஷமே (அல்லேலூயா) அவர்களில் ஒருவர், அவர்களில் ஒருவன் நானும் அவர்களின் ஒருவன் என்று கூறிட முடிந்ததால் சந்தோஷமே வா என் சகோதரனே இந்த ஆசீர்வாதத்தைத் தேடு அது இருதயத்தை பாவத்திலிருந்து கழுவும். உன் இருதயத்தில் சந்தோஷ மணி தொனிக்க ஆரம்பிக்கும் உன் ஆத்துமாவை கொழுந்துவிட்டெரியச்செய்யும்; ஓ. அது இப்பொழுது என் இருதயத்தில் எரிகின்றது அவருடைய நாமத்திற்கு மகிமை அவர்களில் ஒருவன், அவர்களில் ஒருவன் நானும் அவர்களில் ஒருவன் என்று கூறிட முடிந்ததால் சந்தோஷமே (அல்லேலூயா) அவர்களில் ஒருவன், அவர்களில் ஒருவன் நானும் அவர்களில் ஒருவன் என்று கூறிட முடிந்ததால் சந்தோஷமே (அல்லேலூயா)